சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் படிப்புக்கான பயிற்சி நிறுவனம், தவறான விளம்பரம் செய்ததற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விதிகளுக்கு முரணான எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் குறித்தும் தவறான அல்லது தவறான விளம்பரங்கள் செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 வகை செய்கிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மீறப்பட்டதைக் கருத்தில் கொண்டு, தலைமை ஆணையர் திருமதி நிதி கரே தலைமையிலான சிசிபிஏ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் படிப்பு அதன் விளம்பரத்தில் பின்வரும் கூற்றுக்களை கூறியுள்ளது- அ. முதல் 100 இடங்களில் 13 மாணவர்கள் ஆ. “டாப் 200-ல் 28 மாணவர்கள்” இ. யுபிஎஸ்சி சிஎஸ்இ 2023- ல் “டாப் 300-ல் 39 மாணவர்கள்” ஈ. மேலும், விளம்பரங்களில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2023-ல் வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் முக்கியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் வெற்றிகரமான தேர்வர்களின் பெயர்கள் மற்றும் படங்களை முக்கியமாகக் காட்சிப்படுத்தியதுடன், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர்களால் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகளை ஒரே நேரத்தில் விளம்பரப்படுத்தியது. இருப்பினும், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2023ல் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த படிப்பு தொடர்பான தகவல்கள் மேற்கூறிய விளம்பரத்தில் வெளியிடப்படவில்லை. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 50+ படிப்புகளை வழங்குகிறது. இருப்பினும், வெற்றி பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் தேர்வுத் தொடரை எடுத்துக்கொண்டதாக விசாரணை அறிக்கை கண்டறிந்துள்ளது. வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் சிஎஸ்இ-ன் இறுதித் தேர்வில் கலந்துகொள்ள பயிற்சி நிறுவனத்தில் இருந்து எடுத்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் பற்றி தெரிவிக்கப்படுவது நுகர்வோரின் உரிமையாகும். சாத்தியமான நுகர்வோருக்கு, இந்தத் தேர்வில், அவர்களின் வெற்றியைத் தேர்ந்தெடுப்பதற்கான பாடத்திட்டத்தைப் பற்றிய தகவலறிந்த தேர்வு செய்வதில் இந்தத் தகவல் பங்களித்திருக்கும். ஒவ்வொரு வெற்றிகரமான விண்ணப்பதாரர்களும் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் பற்றிய தகவலை வேண்டுமென்றே மறைப்பதன் மூலம், நிறுவனம் வழங்கும் அனைத்து படிப்புகளும் நுகர்வோருக்கு ஒரே வெற்றி விகிதத்தைக் கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது, இது சரியானதல்ல. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் பிரிவு 2(28) (iv) தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வரையறுக்கிறது, இதில் “வேண்டுமென்றே முக்கியமான தகவல்களை மறைப்பது” அடங்கும். வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட பாடத்திட்டத்தைப் பற்றிய தகவல்கள் நுகர்வோருக்குத் தெரிந்துகொள்வது முக்கியம், தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறும், தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக ரூ 2,00,000 அபராதம் செலுத்துமாறும் நிறுவனத்திற்கு சிசிபிஏ உத்தரவிட்டது. பயிற்சி நிறுவனங்களின் தவறான விளம்பரங்களுக்கு எதிராக CCPA நடவடிக்கை எடுத்துள்ளது. இது சம்பந்தமாக, CCPA இதுவரை தவறான விளம்பரங்களுக்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்கு 45 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. CCPA 20 பயிற்சி நிறுவனங்களுக்கு 63 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதுடன், தவறான விளம்பரங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
Read More »டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினத்தன்று நுகர்வோரை பாதுகாக்க செயலிகள் மற்றும் தகவல் பலகையை நுகர்வோர் விவகாரத்துறை அறிமுகப்படுத்துகிறது
டிஜிட்டல் சகாப்தத்தில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மின் வணிகம் மற்றும் ஆன்லைன் சேவைகளில் உள்ள நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 2023 ஆம் ஆண்டில் இருண்ட வடிவங்களைத் தடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்தது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் கீழ், ஏமாற்றும் வடிவமைப்பு வடிவங்கள்/கருமையான வடிவங்கள் போன்ற தவறான விளம்பரம்/நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்று கூறப்பட்டதற்காக சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இ-காமர்ஸ் தளங்களில் இருண்ட வடிவங்களை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகாரத் துறை இப்போது செயல்பட்டு வருகிறது. பிரின்ஸ் அமான் மற்றும் நமீத் மிஸ்ரா ஆகிய மாணவர்கள் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, மூன்று பயன்பாடுகள் குறியிடப்பட்டுள்ளன, அதாவது நுகர்வோர் விழிப்புணர்வு செயலிகள், நுகர்வோர் விழிப்பு தகவல் பலகை ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. ‘Jago Grahak Jago App,’ என்பது, நுகர்வோரின் ஆன்லைன் செயல்பாடுகளின் போது அனைத்து URLகள் பற்றிய அத்தியாவசிய மின்வணிகத் தகவலை வழங்குகிறது, ஏதேனும் URL பாதுகாப்பற்றதாக இருக்கலாம் மற்றும் எச்சரிக்கை தேவை என்றால் அவர்களை எச்சரிக்கும். இதற்கிடையில், ‘ஜாக்ரிதி ஆப்’, சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இருண்ட வடிவங்கள் இருப்பதாக சந்தேகிக்கும் URLகளைப் புகாரளிக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அறிக்கைகள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் , சாத்தியமான தீர்வு மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக புகார்களாக பதிவு செய்யப்படுகின்றன. கூடுதலாக, சிசிபிஏ ஆனது ‘ஜாக்ரிதி தகவல் பலகை ‘ மூலம் பலப்படுத்தப்படுகிறது.
Read More »டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் பாரத்நெட்
பாரத்நெட் அறிமுகம்: டிஜிட்டல் கண்டுபிடிப்புகளும் பயன்பாடுகளும் அதிகரித்து வரும் உலகில், இணைய இணைப்பு பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், ஆளுகை ஆகியவற்றிற்கான ஒரு முக்கிய அம்சமாக அந்த டிஜிட்டல் அம்சங்கள் மாறியுள்ளன. இதில் டிஜிட்டல் இடைவெளி என்பது குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தது, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் இது அதிகமாக இருந்தது. இதை நிவர்த்தி செய்ய, மத்திய அரசு அக்டோபர் 2011-ல் பாரத்நெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நாட்டின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் குறைந்த செலவில் அதிவேக இணைய அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய திட்டமாகும். தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த முன்முயற்சி, கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நகர்ப்புற – கிராமப்புற சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் முயல்கிறது. பாரத்நெட் என்பது வெறும் உள்கட்டமைப்பு திட்டம் மட்டுமல்ல. இது உண்மையான டிஜிட்டல் தேசத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் முதுகெலும்பாகும். திருத்தப்பட்ட பாரத்நெட் 2023: ஆகஸ்ட் 2023-ல் , திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு (ABP) அரசு ஒப்புதல் அளித்தது. 2.64 இலட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை (OF) இணைப்பு மூலம் இணைய அணுகலை இந்தத் திட்டம் வழங்குகிறது. மேலும் கிராம பஞ்சாயத்து அல்லாத மீதமுள்ள கிராமங்களுக்கு (உத்தேசமாக 3.8 லட்சம்) தேவையின் அடிப்படையில் கண்ணாடி இழை இணைப்பை வழங்கவும் இத்திட்டம் வகை செய்கிறது. ரூ.1,39,579 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா நிதியம் டிஜிட்டல் பாரத் நிதியம் (டிபிஎன்) என்பது இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம், அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிதியமாகும் . இது யுனிவர்சல் சர்வீஸ் ஒபிளிகேஷன் ஃபண்டுக்கு (யுஎஸ்ஓஎஃப்) மாற்றாக இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோள்கள்: *கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் மலிவு மற்றும் உயர்தர மொபைல், டிஜிட்டல் சேவைகளை வழங்குதல் *அறிவு, தகவலுக்கான சமமான அணுகலை உறுதி செய்தல் *டிஜிட்டல் இணைப்பு, சேவைகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் *டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, அணுகலுக்கான தடைகளை அகற்றவும் பாரத்நெட்டின் செயல்பாடு பாரத்நெட் உலகின் மிகப்பெரிய கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்பு திட்டமாக செயல்படுகிறது. இத்திட்டம் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL ) என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் 25.02.2012 அன்று இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30.04.2016 அன்று, தொலைத் தொடர்பு ஆணையம் இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. கட்டம் 1: தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க கண்ணாடௌ கேபிள்களை அமைப்பதில் கவனம் செலுத்தியது. டிசம்பர் 2017-ல் இது நிறைவடைந்தது. இரண்டாம் கட்டம்: கண்ணாடி இழை, ரேடியோ, செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கூடுதலாக 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த கட்டம் மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியது. கட்டம் 3: 5ஜி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், அலைவரிசை திறனை அதிகரிப்பதன் மூலமும், வலுவான கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதன் மூலமும் நெட்வொர்க்கை எதிர்காலத்தில் சரிசெய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அணுகல் தன்மை, நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி இந்த கட்டம் நடந்து கொண்டிருக்கிறது . பாரத்நெட்டின் தாக்கம்: பாரத்நெட் கிராமப்புற இந்தியாவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது. இந்தத் திட்டம் தொலைதூர கிராமங்களை அதிவேக இணையத்துடன் இணைத்து, மின்-ஆளுமை சேவைகள், ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம் ஆகியவற்றை அணுக உதவுகிறது. இந்தியாவில் இணைய உள்ளடக்கம்: இந்தியாவில் இணைய இணைப்பை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக, அக்டோபர், 2024 நிலவரப்படி: *783 மாவட்டங்களில் உள்ள 4ஜி பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை 24,96,644 ஐ எட்டியுள்ளது . *779 மாவட்டங்களில் 4,62,084 பிடிஎஸ் நிறுவப்பட்டதன் மூலம் உலகில் 5G சேவைகளை இந்தியா மிக வேகமாக செயல்படுத்தியுள்ளது . *டேட்டாவின் விலை மார்ச் 2014-ல் ஒரு ஜிபி ரூ. 269 லிருந்து (மார்ச் 2014-ல்), தற்போது ரூ .9.08 ஆக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. *சராசரி மொபைல் பிராட்பேண்ட் வேகம் மார்ச் 2014-ல் 1.30 எம்பிபிஎஸ் ஆக இருந்த்து. தற்போது 95.67 எம்பிபிஎஸ் ஆக அதிகரித்துள்ளது. *நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் 6,15,836 கிராமங்களில் 4ஜி மொபைல் இணைப்பு உள்ளது . கிராமப்புற இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றுவதற்கான இலக்கை பாரத்நெட் கொண்டுள்ளது. பரந்த வாய்ப்புகளுடன் இணைய விரும்பும் லட்சக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு இது ஒரு உயிர்நாடியாக திகழ்கிறது. வலுவான செயலாக்கம், தொடர்ச்சியான முயற்சிகளுடன், பாரத்நெட் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, பாரத்நெட் திட்டத்தின் இணைய சக்தி இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் மேம்படுத்தும்.
Read More »தொழில் துறையில் புதிய உயரங்களைத் தொட உதவும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம்
இந்தியாவின் உற்பத்தித் துறை அதன் உலகளாவிய நிலையை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்கு சிந்தனை கொள்கைகளால் உந்தப்பட்டு ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பரிணாமத்தின் மையமாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டம் உள்ளது. இது புதுமைகளை ஊக்குவித்தல், செயல்திறனை மேம்படுத்துதல், முக்கியமான தொழில்களில் போட்டித்தன்மையை அதிகரித்தல், தேசத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக நிறுவுதல் ஆகியவற்றுக்கான அரசின் முயற்சியாகும். மிஎல்ஐ திட்டம் முதலீடு, உற்பத்தி, வேலை உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளது. ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, 14 துறைகளில், ரூ .1.46 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது, இதன் விளைவாக ரூ.12.50 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி/விற்பனை அதிகரித்துள்ளது, 9.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கம் நடைபெற்றுள்ளது. ஏற்றுமதி ரூ .4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மின்னணுவியல், மருந்து, உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன. 2022-23, 23-24 நிதியாண்டில் முறையே 8 துறைகளில் ரூ.2,968 கோடியும், 9 துறைகளில் ரூ.6,753 கோடியும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2020-ல் தொடங்கப்பட்டது, பிஎல்ஐ திட்டம் தற்சார்பை நோக்கிய ஒரு பாய்ச்சல் ஆகும். உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கும், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கும், உள்ளூர் முன்னேற்றம், உலகளாவிய போட்டித்திறன் ஆகிய இரண்டிற்கும் சக்தியளிக்கும் ஒரு செழிப்பான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் நாட்டின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் உற்பத்தி திறன்களையும் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்காக 14 முக்கிய துறைகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் ரூ.1.97 லட்சம் கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளன. 14 துறைகள்: *மொபைல் உற்பத்தி, குறிப்பிட்ட மின்னணு பாகங்கள், *ஆக்டிவ் ஃபார்மசூட்டிகல்ஸ், *மருத்துவ சாதனங்கள் உற்பத்தி *ஆட்டோமொபைல்கள், வாகன பாகங்கள் *மருந்துகள் *சிறப்பு ஸ்டீல் *தொலைத் தொடர்பு, நெட்வொர்க்கிங் தயாரிப்புகள் *மின்னணு/ தொழில்நுட்பத் தயாரிப்புகள் *வெள்ளைப் பொருட்கள் (ஏசி-கள், எல்இடி-கள்) *உணவுத் தயாரிப்புகள் *ஜவுளி தயாரிப்புகள்: எம்எம்எஎஃப் பிரிவு, தொழில்நுட்ப ஜவுளி *உயர் திறன் சூரிய சக்தி பிவி தொகுதிகள் *மேம்பட்ட வேதியியல் செல் (ACC) பேட்டரி *ட்ரோன்கள், ட்ரோன் பாகங்கள். பிஎல்ஐ திட்டங்கள் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளன. தற்போது, 14 துறைகளில் பிஎல்ஐ திட்டங்களின் கீழ் 764 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 764 ஒப்புதல்களில், உணவுப் பொருட்கள் துறை அதிகபட்சமாக 182 ஒப்புதல்களுடன் முதலிடத்திலும், ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள் துறை 95 ஒப்புதல்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. பிஎல்ஐ திட்டம் இந்தியாவின் குறு,சிறு, நடுத்த தொழில்துறைச் சூழல் அமைப்பில் ஒரு சிறந்த தாக்கத்தை உருவாக்க தயாராக உள்ளது. இத்திட்டம் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியில் இந்தியாவின் தன்னம்பிக்கைக்கும் உலகளாவிய தலைமைக்கும் வழி வகுக்கிறது.
Read More »உணவு பதனப்படுத்தும் மற்றும் பேக்கேஜிங் செய்யும் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்
உணவு பதனப்படுத்தும் மற்றும் பேக்கேஜிங் செய்யும் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி உணவு பதனப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சுப்ரதா குப்தா, தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் உணவுப் பதனப்படுத்தும் தொழிலின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் உலகளவிலான போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகளை விவாதிப்பதற்கான மேடையாக இந்த கலந்துரையாடல் அமைந்தது. இதில் உரையாற்றிய உணவு பதனப்படுத்தும் …
Read More »முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வேலை வாய்ப்புகள்
முன்னாள் படைவீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் போதுமான ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் துறை, மத்திய துணை ராணுவப்படை போன்ற துறைகளில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு இ.எஸ்.எம் வேலைவாய்ப்பின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு மறுகுடியமர்வு / …
Read More »தற்சார்பு இந்தியா: இந்திய ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலுக்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் 7,629 கோடி ரூபாய் ஒப்பந்தம்
லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் 155 மிமீ / 52 காலிபர் கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்காக 7,628.70 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த …
Read More »உணவு மற்றும் பொது விநியோகத்துறை
2024-ம் ஆண்டில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:- ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நாட்டில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின்(கரீப் கல்யாண் அன்ன யோஜனா)கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையிலான 7 கட்டங்களில் 1118 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டது. …
Read More »இந்திய ரயில்வேயின் பாதுகாப்பிற்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு – இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை
ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்காக கூடுதல் தொலைத்தொடர்பு அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்திய ரயில்வே 26.07.2023 அன்று கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தில், தனது பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யுமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஆய்வு செய்து, …
Read More »2024 ஆம் ஆண்டில் தொழிலக மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் சாதனைகளை அடைவது முதல் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்புகளை ஊக்குவித்தல், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தல் வரை என பல செயல்பாடுகள் மூலம் இந்தியாவை தற்சார்பானதாகவும் மற்றும் உலக அளவில் சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் வகையிலும் உருவாக்குவதில் தொழிலக மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை முக்கிய பங்கு வகித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இத்துறையின் சில முக்கிய முயற்சிகள் மற்றும் சாதனைகள்: …
Read More »
Matribhumi Samachar Tamil