மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு, நிறுவனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக் உடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற பின் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் அறிமுகக் கூட்டமான இதில், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, உயர்நிலை பேச்சுவார்த்தை, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய …
Read More »நாட்டில் விரைவான வைஃபை சேவை
நாடுமுழுவதும் 31.05.2024 ம் தேதி நிலவரப்படி மொபைல் சேவைகள் மக்கள் தொகையில் 99.21 சதவீதமாகவும், 3ஜி மொபைல் சேவைகள் மக்கள் தொகையில் 99.0 சதவீதமாகவும் உள்ளன. வைஃபை சேவையின் தரநிலைகள், இணைய வழி சேவை வழங்குவோர், திட்டங்களின் வகைப்பாடுகள், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து பயனாளிகளின் எண்ணிக்கை அமைகிறது. மொபைல் சேவைகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் அவற்றின் தொழில்நுட்ப-வர்த்தக சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மக்கள் வசிக்காத தொலைதூர கிராமங்களில் மொபைல் சேவைகளை படிப்படியாக கொண்டு வரும் வகையில் …
Read More »நிலக்கரி இறக்குமதி குறைப்பு
உலகளவில் நிலக்கரி உற்பத்தியில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும் சில குறிப்பிட்ட வகை நிலக்கரிகளைப் பொறுத்து குறிப்பாக கோக்கிங் நிலக்கரி, உயர்தர அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது. நிலக்கரி விநியோகத்தில் உள்ள இந்த இடைவெளி காரணமாக எஃகு உற்பத்தி உட்பட முக்கிய தொழில்களை பாதுகாக்கவும், அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும் நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது. 2024-25 ம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் …
Read More »நகரக் கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு
நகரக் கூட்டுறவு வங்கிகள் சந்தித்து வரும் இடர்ப்பாடுகளைக் களைவதற்கு ஓர் அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் உணரப்பட்டது. நகரக் கூட்டுறவு வங்கிகள் துண்டு துண்டான, ஒருங்கிணைக்கப்படாத சூழலில் செயல்படுகின்றன. அவற்றின் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை இந்த நிலைமைகள் தடுக்கின்றன. ஒழுங்குமுறை தெளிவின்மை, செயல்பாட்டு திறமையின்மை, வளங்கள் மற்றும் நிபுணத்துவத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் ஆகியவை பல நகரக் கூட்டுறவு வங்கிகளை நிதி உறுதியின்மை, மோசமான நிர்வாகம் மற்றும் சந்தை அழுத்தங்களுக்கு பாதிக்கப்படக்கூடியதாக ஆக்கின. நகரக் கூட்டுறவு வங்கிகளின் …
Read More »தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்
மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது. இச்சங்கங்கள் பல மாநில கூட்டுறவு சங்க சட்டம், 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினராவதற்கு தகுதியுடையவையாகும். அதன் விவரம் வருமாறு: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட், கிரிஷக் பாரதி …
Read More »கூட்டுறவு சங்கங்களுக்கான மூலதனச் செலவு
கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்குதல், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல், ஆர்.சி.எஸ் அலுவலகங்களை கணினிமயமாக்குவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ‘வணிகம் செய்வதை இது எளிதாக்கி உள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வெளிப்படையான காகிதமற்ற ஒழுங்குமுறைக்கான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குகிறது. அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாநில அரசுகள் …
Read More »பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
இணைய இணைப்பை மேம்படுத்த, டிஜிட்டல் பாரத் நிதி திட்டத்தின் கீழ், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அத்தகைய திட்டங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சேவை இல்லாத கிராமங்களில் 4ஜி சேவைகளை வழங்குவதற்கான செறிவூட்டல் திட்டம், எல்லை புறக்காவல் நிலையங்கள் / எல்லை புலனாய்வு சாவடிகள் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்களின் விவரங்கள் www.usof.gov.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதியுதவியுடன் …
Read More »தொலைத்தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்
தொலைத்தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் இணைய இணைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற, தொலைதூர, மலைப்பாங்கான பகுதிகளில் செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 4ஜி செறிவூட்டல் திட்டம் நாட்டில் 24,680 கிராமங்களுக்கு 4 ஜி மொபைல் இணைப்பை வழங்குகிறது. 28 மாநிலங்கள், …
Read More »சிபிஐசி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில், வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்த புதிய முன்முயற்சிகளை தொடங்கி வைத்தார்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், அனைத்து வாரிய உறுப்பினர்களின் முன்னிலையில், வரி செலுத்துவோரின் அனுபவத்தையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய திரு அகர்வால், “இன்று தொடங்கப்பட்ட முன்முயற்சிகள் வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். வரி செலுத்துவோருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், அவர்களின் பரிந்துரைகளை …
Read More »பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்
2024 நவம்பர் 30 அன்றைய நிலவரப்படி பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பின்வருமாறு; வகை பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் 8,672 பட்டியலிடப்படாத பொதுத் துறை நிறுவனங்கள் 46,939 ஒரு நபர் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 11,11,040 பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம், நிறுவனங்களின் பல்வேறு நிலைகளில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்கள் சட்டம், 2013-ல் பின்வரும் விதிகளை சேர்த்துள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) பிரிவு 149 துணைப்பிரிவு (1)-ன் கீழ், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி) விதிகள், 2024-ன் விதி 3-ன் படி, ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட அல்லது ரூ.300 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட விற்றுமுதல் கொண்ட ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் மற்ற ஒவ்வொரு பொது நிறுவனமும் குறைந்தது ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும். இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கும் மற்றும் நிறுவனத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 172-ன் கீழ் அபராதம் விதிப்பதற்கு வகை செய்கிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சரும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.
Read More »
Matribhumi Samachar Tamil