Sunday, December 07 2025 | 04:35:02 AM
Breaking News

Business

விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் – அக்டோபர், 2024

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை: 1986-87=100) 2024, அக்டோபர்  மாதத்தில்  முறையே 11 புள்ளிகள் மற்றும் 10 புள்ளிகள் அதிகரித்து,  1315 மற்றும் 1326 என்ற நிலைகளை எட்டியுள்ளது. 2024, அக்டோபர்  மாதத்தில்  விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஆண்டுப்  பணவீக்க விகிதங்கள் முறையே 5.96% மற்றும் 6.00% ஆக பதிவாகியுள்ளன. இது 2023, அக்டோபரில் 7.08% மற்றும் …

Read More »

சிறுதானியம் சார்ந்த உணவுப் பொருட்களை ஊக்குவித்தல்: சுமார் ரூ.4 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது

உணவுப் பொருட்களில் சிறுதானியங்களின் பயன்பாட்டையும்  மதிப்புக் கூட்டலையும் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுதானிய அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கு உற்பத்தியுடன் சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) ரூ.800 கோடி செலவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் அடிப்படை முதலீட்டுத் தேவையை நீக்குகிறது. இது அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பயனிப்பதாக உள்ளது . ஊக்கத்தொகைகளுக்கு தகுதி பெற, திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அடிப்படை …

Read More »

அஷ்டலட்சுமி மகோத்சவத்தில் “வாங்குவோர்- விற்போர் சந்திப்பு”

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த துடிப்பான அஷ்டலட்சுமி மகோத்சவம்,  ஒரு பிரத்யேக வாங்குவோர் விற்போர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வடகிழக்கு இந்தியாவின் கைவினைஞர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே நீண்டகால வணிக உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. ஜவுளி, பட்டுப்புழு வளர்ப்பு, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், கற்கள், நகைகள் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள், வேளாண்மை மற்றும் …

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தப் பயணம் தில்லியில் நிறைவடைந்தது

இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான 3 நாள் பேச்சுவார்த்தை பயணம் 2024 டிசம்பர் 6 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. 2024  டிசம்பர் 4 முதல் 6 வரை நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்திய தூதுக்குழுவுக்கு வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான திரு. ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்கினார். ஆஸ்திரேலிய தூதுக்குழுவுக்கு வெளியுறவு …

Read More »

ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று “எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024” மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை  தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும்  ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு …

Read More »

இந்திய திவால் நடைமுறை வாரியம் இன்சோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து திவால் நடைமுறைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டைப் புதுதில்லியில் நடத்தியது

இந்திய திவால் நடைமுறை வாரியம் (IBBI), இன்சோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து “திவால் தீர்மானம்: பரிணாமம், உலகளாவிய கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் இத்துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று திவால் தீர்வு குறித்த நுண்ணறிவு, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு. எம். ராஜேஸ்வர் ராவ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2016 முதல் திவால் சட்டத்தின் (ஐபிசி) மாற்றகரமான …

Read More »

இந்தியா – நார்வே வர்த்தக வட்டமேசைக் கூட்டம்: மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் நாளை பங்கேற்கிறார்

மத்திய வர்த்தகம் – தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நாளை (2024 டிசம்பர் 08 -ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் நடைபெறவுள்ள இந்தியா-நார்வே வர்த்தக வட்டமேசைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.  இதில் இந்தியாவுக்கான நார்வே தூதர் திருமதி மே-எலின் ஸ்டெனர் தலைமையிலான நார்வே தொழில்துறை தூதுக்குழுவுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவுக்கும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க (இஎஃப்டிஏ) நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்த விவாதத்தின் போது …

Read More »

உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்தை 2021-22-ம் ஆண்டு முதல் 2026-27-ம் ஆண்டு வரை செயல்படுத்த ரூ.10,900 கோடி தொகைக்கு பட்ஜெட்டில் 2021  மார்ச் 31 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 171 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து பயிற்சி நடத்தப்பட்டது. உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளில் உள்நாட்டில் விளையும் வேளாண் விளைபொருட்கள் (சேர்க்கைகள், சுவைகள் மற்றும் …

Read More »

டிஏபி உரம் கூடுதலாக இறக்குமதி செய்ய அரசு முயற்சி

நடப்பு ரபி பருவத்தில் நாட்டில் டிஏபி உரங்களின் தேவை 52.05 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. நாட்டில் உரங்களின் சீரான  விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும் போதிய அளவிலான உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பயிர் பருவ காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் மத்திய வேளாண்மைத் துறை சார்பில் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின், உரங்களின் தேவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. …

Read More »

மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு இனி சுங்க வரி இல்லை

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024 மூலம் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை- 2013-ன் படி, இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) வரிகள், தீர்வைகள் உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது, அதில் …

Read More »