இந்திய திவால் நடைமுறை வாரியம் (IBBI), இன்சோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து “திவால் தீர்மானம்: பரிணாமம், உலகளாவிய கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் இத்துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று திவால் தீர்வு குறித்த நுண்ணறிவு, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு. எம். ராஜேஸ்வர் ராவ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2016 முதல் திவால் சட்டத்தின் (ஐபிசி) மாற்றகரமான …
Read More »இந்தியா – நார்வே வர்த்தக வட்டமேசைக் கூட்டம்: மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் நாளை பங்கேற்கிறார்
மத்திய வர்த்தகம் – தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நாளை (2024 டிசம்பர் 08 -ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் நடைபெறவுள்ள இந்தியா-நார்வே வர்த்தக வட்டமேசைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் இந்தியாவுக்கான நார்வே தூதர் திருமதி மே-எலின் ஸ்டெனர் தலைமையிலான நார்வே தொழில்துறை தூதுக்குழுவுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவுக்கும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க (இஎஃப்டிஏ) நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்த விவாதத்தின் போது …
Read More »உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்
உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்தை 2021-22-ம் ஆண்டு முதல் 2026-27-ம் ஆண்டு வரை செயல்படுத்த ரூ.10,900 கோடி தொகைக்கு பட்ஜெட்டில் 2021 மார்ச் 31 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 171 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து பயிற்சி நடத்தப்பட்டது. உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளில் உள்நாட்டில் விளையும் வேளாண் விளைபொருட்கள் (சேர்க்கைகள், சுவைகள் மற்றும் …
Read More »டிஏபி உரம் கூடுதலாக இறக்குமதி செய்ய அரசு முயற்சி
நடப்பு ரபி பருவத்தில் நாட்டில் டிஏபி உரங்களின் தேவை 52.05 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. நாட்டில் உரங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும் போதிய அளவிலான உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பயிர் பருவ காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் மத்திய வேளாண்மைத் துறை சார்பில் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின், உரங்களின் தேவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. …
Read More »மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு இனி சுங்க வரி இல்லை
நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024 மூலம் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை- 2013-ன் படி, இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) வரிகள், தீர்வைகள் உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது, அதில் …
Read More »உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
மருந்துகள் உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2027-28-ம் நிதியாண்டு வரையிலான திட்ட உற்பத்தி காலத்துக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டு காலத்திற்கு அடையாளம் காணப்பட்ட மருந்துகள் உற்பத்தி செய்ய 55 மருந்து தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 48 உற்பத்தித் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 34 திட்டங்களுக்கு 25 வகையான மருந்துகளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை …
Read More »வெங்காய விவசாயிகளுக்கு உதவும் சிறப்பு திட்டம்
வெங்காயம் உள்ளிட்ட அழுகும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சந்தை குறுக்கீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. முந்தைய சாதாரண பருவத்தின் சராசரி விலைகளுடன் ஒப்பிடும்போது சந்தை விலைகள் குறைந்தது 10% வீழ்ச்சியடையும் போது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் நிதி இழப்புகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து …
Read More »நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை
2024-25 காரீப் சந்தைப் பருவத்தில் சாதாரண நெல் மற்றும் நெல் (கிரேடு-ஏ) ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2300 ஆகவும், குவிண்டாலுக்கு ரூ.2320 ஆகவும் அரசு நிர்ணயித்துள்ளது. 2024-25 காரீப் பருவ காலத்தில், நெல் கொள்முதலுக்காக (01.12.2024 வரை) விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.65,695 கோடியாகும். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் …
Read More »மெகா எண்ணெய் பனை மரம் நடுகை இயக்கம் மற்றும் அடைந்த மைல்கற்கள்
மெகா எண்ணெய் பனை தோட்ட இயக்கம், 2024 ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. 17,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 25 லட்சம் நடவுப்பொருட்கள் 15,755 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சாத்தியமான பகுதிகளில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்படும் பகுதிகள். அரசு திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை வளர்ப்பு பொருத்தமான வேளாண் காலநிலை நிலைமைகளைக் கொண்ட சாத்தியமான பகுதிகளில் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் …
Read More »குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொழில் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவை, தொழில் நகரங்களில் வர்த்தகங்களை மேம்படுத்த சலுகையில் நிலம் ஒதுக்க விருப்பம்: திரு பியூஷ் கோயல்
நாடு முழுவதும் 20 நகரங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலங்களை ஒதுக்க அரசு தயாராக உள்ளது. எம்.எஸ்.எம்.இ.க்கள் பெரிய வணிகங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவையாகும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற அசோசெம்: பாரத் @100 உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தங்கள் சூழல் அமைப்பில் பெரிய தொழில்களை ஆதரிப்பதில் முக்கியமானவையாக …
Read More »
Matribhumi Samachar Tamil