உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கவும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடையவும், அரசு தேசிய சமையல் எண்ணெய்கள் – எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம், முதன்மை எண்ணெய் வித்து பயிர்களான கடுகு, நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி, எள், குங்குமப்பூ, நைஜர், ஆளி விதை மற்றும் ஆமணக்கு ஆகியவற்றின் உற்பத்தியை மேம்படுத்துவதும், பருத்தி விதை, தேங்காய், அரிசித் தவிடு மற்றும் மரத்திலிருந்து கிடைக்கும் எண்ணெய் வித்துக்கள் …
Read More »பிரதமர் மீன்வளத் துறையின் கீழ் மீன்வள உள்கட்டமைப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) பிரதமர் மீன்வளத் திட்டத்தின் கீழ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, கர்நாடகா, திரிபுரா மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.6761.80 கோடி மத்திய அரசின் பங்களிப்பை உள்ளடக்கிய மொத்தம் ரூ.17,210.46 கோடி செலவில் மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கர்நாடகா, திரிபுரா …
Read More »கடந்த 6 நிதியாண்டுகளில் இந்தியாவில் ரூ. 12,000 லட்சம் கோடி மதிப்பில் 65,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் உட்பட நாட்டில் டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதற்கான விகிதங்களை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI), நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் அரசு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீரின், 3 முதல் 6-ஆம் நிலை நகரங்கள் வரை டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் உள்கட்டமைப்பைப் …
Read More »நிலக்கரி அமைச்சகம் ஒற்றைச் சாளர முறை குறித்த பயிலரங்கை நடத்தியது
நிலக்கரித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிலக்கரி அமைச்சகம் ஜூலை 25, 2025 அன்று ஒற்றை சாளர அனுமதி அமைப்பின் ஆய்வு தொகுதி குறித்த நேரடி பயிற்சி பயிலரங்கை நடத்தியது. பங்குதாரர்களுக்கு அதன் செயல்பாடுகள் பற்றிய ஆழமான புரிதலை வழங்குவதையும், ஆய்வு தொடர்பான சமர்ப்பிப்பு மற்றும் ஒப்புதல்களை கையாள்வதில் அதன் அணுமுறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தப் பயிற்சி பயிலரங்கு புதுதில்லியின் SCOPE வளாகத்தில் உள்ள …
Read More »இங்கிலாந்துடனான விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவின் கடல் உணவுத் தொழில், 70% ஏற்றுமதி வளர்ச்சி காணும்
ஜூலை 24, 2025 அன்று விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-இங்கிலாந்து பொருளாதார உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொழுத்தானது. மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு. ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது. குறிப்பாக, கடல் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நீக்குகிறது, இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இது குறிப்பாக இறால், உறைந்த மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கடல் பொருட்களின் ஏற்றுமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜவுளி, தோல் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த துறைகளுடன் அதன் முக்கிய கடல் உணவு இலக்குகளில் ஒன்றான இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும். தற்போது இங்கிலாந்துக்கு இந்தியாவின் முக்கிய கடல் உணவு ஏற்றுமதிகளில் வன்னாமி இறால், உறைந்த கணவாய், நண்டுகள், உறைந்த மீன்கள் மற்றும் கரும்புலி இறால் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின் வரி இல்லாத அணுகலின் கீழ் மேலும் சந்தைப் பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி 7.38 பில்லியன் டாலரை (ரூ 60,523 கோடி) எட்டியது, ஒப்பந்தம் இப்போது அமலில் உள்ளதால், வரும் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான கடல்சார் ஏற்றுமதியில் 70% அதிகரிப்பு இருக்கும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மீன்வளத் துறை சுமார் 28 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது. 2014–15 …
Read More »நிலக்கரி இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை
நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் நிலையை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலோரத்தில் இல்லாத மின் உற்பத்தி நிலையங்களின் வருடாந்திர ஒப்பந்த அளவு 90% எனக் குறைக்கப்பட்டால் அல்லது கடலோர மின் உற்பத்தி நிலையங்களின் வருடாந்திர ஒப்பந்த அளவு 70% எனக் குறைக்கப்பட்டால் தற்போதைய நெறிமுறை தேவையின் அடிப்படையில் வருடாந்திர ஒப்பந்த அளவு 100 சதவீதமாக அதிகரிக்கப்படுள்ளன. இது அதிக உள்நாட்டு நிலக்கரி வினியோகத்திற்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் …
Read More »தனியார் கார் / ஜீப் / வேன்களுக்கு வருடாந்திர பயண அட்டை ஆகஸ்ட் 15-ல் அறிமுகம்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த 17.06.2025 அன்று வெளியிட்ட தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 அறிவிப்பின் மூலம், தனியார் கார் வேன் / ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை வசதி 2025 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு மத்திய அரசின் இந்த சலுகை பேருதவியாக இருக்கும் 3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண …
Read More »நாட்டில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இந்தியாவில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை, தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த “வளர்ச்சியடைந்த பீகார்: பெண்கள் பங்கேற்பின் மூலம் …
Read More »2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பங்கேற்பு; இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று நொய்டாவில் இந்தியாவின் சர்வதேச ஐக்கிய நாடுகள் இயக்கம் -2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், அமிர்த காலத்திற்கான ஐந்து உறுதிமொழிகளின்படி, 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் நிற்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு கோயல், 2022 …
Read More »நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தின விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில், முக்கிய உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மையமாக நபார்டு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். …
Read More »
Matribhumi Samachar Tamil