Thursday, January 22 2026 | 09:27:26 AM
Breaking News

Education

அனிமேஷன், விஷூவல் எஃபெட்க்ஸ் உள்ளிட்ட காட்சித் தொழில்துறை சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் முதல் தொகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த நிறுவனம் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், விரிச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப துறைகளில் தொழில் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை தொடங்குகிறது. 2025 மே மாதம் நடைபெற்ற உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் இந்த நிறுவனம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி …

Read More »

இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவியல் ஆசிரியர்களுக்கான ‘தரநிலைகள் வாயிலாக அறிவியல் கற்றல்’ குறித்த இரண்டு நாள் பயிற்சியை விழுப்புரத்தில் நடத்துகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தரநிலை குழுக்களின் அறிவியல் ஆசிரியர்களுக்காக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம், “தரநிலைகள் மூலம் அறிவியலைக் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயிற்சியை ஏ.கே.டி நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இன்றும் (ஜூலை 10, 11) நாளையும் நடத்துகிறது. இதன் துவக்க விழா இன்று (ஜூலை 10, 2025) நடைபெற்றது. இந்தப் பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய இந்திய …

Read More »

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தை மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திரு ஜெயந்த் சவுத்ரி திறந்து வைத்தனர்

இந்திய வேளாண் சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இன்று மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தைத்’ திறந்து வைத்தனர். உத்தரப்பிரதேச அரசின் வேளாண் அமைச்சர் திரு சூர்யா …

Read More »

மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்தார்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 1, 2025) அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் அரங்கம், கல்வித் தொகுதி மற்றும் பஞ்சகர்ம கேந்திராவின் திறப்பு விழாவும், புதிய பெண்கள் விடுதிக்கான அடிக்கல் நாட்டுதலும் அடங்கும். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், பரோபகாரம் மற்றும் பொது நலனை …

Read More »

இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் இன்று (ஜூன் 30, 2025) நடைபெற்ற இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடிரயசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். ‘ஈஷாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நமது கலாச்சாரமானது அனைத்து உயிரினங்களிலும் கடவுளின் இருப்பைக் காண்கிறது  என்று கூறினார். கடவுள் – ஞானி – விலங்குகள் இடையேயான பிணைப்பின் நம்பிக்கை மற்றும் சிந்தனையை அடிப்படையாகக் …

Read More »

மென்பொருள் சார்ந்த வாகனங்களுக்கான திறனை மேம்படுத்த ஐஐடி மெட்ராஸ்-ன் நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) நிறுவிய நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையமும் அக்செஞ்சர் நிறுவனமும் சிறப்புத் திறன்மிகு திட்டங்களை வழங்க இணைந்து செயல்படுகின்றன. அக்செஞ்சரின் மென்பொருள் சார்ந்த வாகன அகாடமியான லேர்ன்வான்டேஜ் மூலம் இந்த திறன்மிகு திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சி, மென்பொருள்-சார்ந்த வாகனங்களை உருவாக்குவதற்கான திறமையை வளர்க்க விரும்பும் ஆட்டோமோடிவ் ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள்  மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. திறமையான நிபுணர்களுக்கான வளர்ந்துவரும் தேவையை பூர்த்தி செய்வதையும், மேம்பட்ட ஓட்டுநர் உதவி …

Read More »

சென்னை ஐஐடி சான்சிபார், ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது

  சென்னை ஐஐடி 2025-26ம் கல்வியாண்டில் ரசாயன செயல்முறைப் பொறியியலில்  புதிய இளங்கலை அறிவியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சான்சிபார் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நான்காண்டு முழுநேர இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ரசாயனப் பொறியியல் அடிப்படையில் செயல்முறை ஆய்வகப் பணிகள், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், பல்வேறு துறைகளுக்கு இடையே கற்றலை ஊக்குவிக்கும் விருப்பப் பாடங்கள் என விரிவான பாடத்திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உயர்ந்த கல்வித் தரத்துடன், உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் சென்னை ஐஐடி, ஐஐடிஎம் சான்சிபார், நிறுவனங்களைச் …

Read More »

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நம் நாட்டின் வரலாற்றில், கணக்காளர்கள் சமூகத்தில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளனர் என்று கூறினார். கணக்கியல் மற்றும் பொறுப்புகள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும். இந்த துறையின் உயர் பொறுப்புணர்வு காரணமாக, அது சிறப்பான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. நவீன காலத்தில், …

Read More »

கர்நாடகாவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் பெங்களூரு வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை  அமைச்சருமான திரு  அமித் ஷா இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்  பெங்களூரு வளாகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய  மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நமது கலாச்சாரத்தின் முக்கிய கொள்கை, தன்னைப் பற்றி மட்டுமல்லாமல், அனைவரின் நலன் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றியும் சிந்திப்பது என்று கூறினார். ஸ்ரீ ஆதிச்சுஞ்சனகிரி மடம் கிராமங்களில் சுகாதார மையங்களை நடத்துவதன் மூலமும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை …

Read More »

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்களிடையே குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் உரை

சனாதனப் பெருமை வலுவான உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (17.06.2025) மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், இந்தியாவின் கல்வி வரலாற்றில் தக்ஷஷிலா, நாளந்தா, மிதிலா, வல்லபி என பல சிறந்த கற்றல் மையங்கள் இருந்ததாகக் கூறினார். இந்த நிறுவனங்கள், நமது பாரதத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாக அவர் கூறினார். நாளந்தாவில் 1300 …

Read More »