தொலைநோக்கு பார்வை கொண்ட புள்ளியியல் நிபுணர் பேராசிரியர் பிரசாந்தா சந்திர மஹலானோபிஸ்-ஸால் 1931-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐஎஸ்ஐ), புள்ளிவிவர ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1959-ம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்ட இந்நிறுவனமானது புள்ளியியல் முறைகளை மேம்படுத்துவதிலும், பல்வேறு பிரிவுகளில் அவற்றின் பயன்பாடுகளிலும் முன்னோடியாக உள்ளது. ஐ.எஸ்.ஐ கவுன்சில் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் …
Read More »முதல் முறையாக மூன்று அரசு 2025 குடியரசு தின அணிவகுப்பில் பள்ளி இசைக்குழு குழுக்கள் பங்கேற்கின்றன
2025 ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக மூன்று அரசுப் பள்ளி அணிகள் பங்கேற்க உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூமில் உள்ள பிஎம் ஸ்ரீ கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா படாம்டாவைச் சேர்ந்த குழு, குடியரசுத் தலைவர் மேடைக்கு எதிரே உள்ள ரோஸ்ட்ரமில் நிகழ்ச்சியை நடத்தும் பெருமையைப் பெறும். சீனியர் செக் ஸ்கூல் வெஸ்ட் பாயிண்ட், காங்டாக், சிக்கிம் மற்றும் பிஎம் ஶ்ரீ கேந்திரிய வித்யாலயா எண். 2 பெலகாவி கன்டோன்மென்ட், கர்நாடகா, விஜய் சௌக்கில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பிக்கும். இந்த பள்ளி இசைக்குழுக்கள் 2025 ஜனவரி 24-25 தேதிகளில் புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும் தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 6.0 இன் கிராண்ட் பைனலில் போட்டியிடும் 16 அணிகளில் அடங்கும். இது பிஎம் ஶ்ரீ பள்ளிகளின் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்குவதற்கும், அவர்களை நன்கு வளர்ந்த ஆளுமைகளாக வளர்ப்பதற்கும் ஒரு படியாகும். மத்திய நிதியுதவி திட்டத்தின் – சமக்ரா ஷிக்ஷா – புதுமை கூறுகளின் கீழ், மாநில அளவில் இசைக்குழு போட்டியை ஏற்பாடு செய்வதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும், மேலும் கல்வித் துறையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இத்திட்டம் தேசபக்தி மற்றும் தேசப்பெருமை உணர்வை ஊட்டுவது மட்டுமின்றி மாணவர்களின் இசைத்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களிடையே ஒழுக்கத்தையும் வளர்க்கும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் உணர்வை புத்துயிர் பெறச் செய்வதையும், முழுமையான கல்வியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Read More »வீர கதை 4.0 சூப்பர் -100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சரும் கல்வி அமைச்சரும் பாராட்டினர்
புதுதில்லியில் 2025, ஜனவரி 25 அன்று நடைபெற்ற வீர கதை 4.0 சூப்பர்-100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் ஆகியோர் பாராட்டினர். வெற்றியாளர்களான 100 பேரில் 66 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். பாராட்டு விழாவில், வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2025, ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் …
Read More »பராக்ரம தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இளம் மாணவர்களுடன் இன்று (23.01.2025) கலந்துரையாடினார். 2047-ம் ஆண்டுக்குள் தேசத்தின் இலக்கு என்ன என்று பிரதமர் மாணவர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு மாணவர் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றுவது என்று பதிலளித்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் என்ற எல்லை ஏன் என்று …
Read More »போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புக் கண்காட்சி
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 22 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும், இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்கள …
Read More »சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு
சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது. முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து …
Read More »சென்னை ஐஐடி, ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’யின் கீழ் ஐந்து தேசியத் தடகள வீரர்-வீராங்கனைகளைச் சேர்த்துள்ளது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’ பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும். நாட்டிலேயே முதன்முறையாக விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் …
Read More »போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பு கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 20 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகளை கண்டுகளிக்கவும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. போர் வாகனங்களின் பயன்பாடுகள் குறித்த செயல் …
Read More »180 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புவி காந்த வானியல் ஆய்வகத்தின் தரவுத் தொகுப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக கொலாபா ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது
இந்திய புவிகாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கொலாபா ஆராய்ச்சி மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் திறந்து வைத்தார். இந்நி்கழ்ச்சியில் பேசிய அவர், பழங்காலத்து கருவிகளுடன் புவி காந்த தரவுகளை இந்த கொலாபா ஆய்வகம் ஆவணப்படுத்தி உள்ளதை வரலாற்று ரீதியாக அவர் எடுத்துத்தார். மேலும் இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக புவி காந்த புயல்களின் செயல்பாடுகளை பதிவு செய்திருப்பதோடு இந்தியாவின் அறிவியல் ஆய்வின் ஒரு …
Read More »ஐஐடி மெட்ராஸ், சிஎம்சி வேலூர் ஆகியவை இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில் உள்நாட்டுத் தயாரிப்பு ரோபோவை உருவாக்கியுள்ளன
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர். ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட …
Read More »
Matribhumi Samachar Tamil