1154 சதுர அடி பரப்பளவில் ரூ. 43.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்கப்பட்ட குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கட்டிடத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா ஜனவரி 11, 2025 அன்று திறந்து வைத்தார். அஞ்சல் துறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தொழில்நுட்ப அடிப்படையிலான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி …
Read More »அனுமதியற்ற வர்த்தகத்தைத் தடுப்பது தொடர்பான வர்த்தகப் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்டம் காத்மாண்டுவில் நிறைவடைந்தது
அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைத் தடுப்பதற்கான வர்த்தகம், போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுக் (IGC) கூட்டம், 2025 ஜனவரி 10, 11 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற்றது. மத்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் தலைமையில் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழுவினர் இதில் பங்கேற்றனர். நேபாள தரப்பில் நேபாள அரசின் தொழில், வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு கோபிந்த பகதூர் கார்க்கி தலைமையில் …
Read More »ஐநா தரவு அறிவியல் நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்தது
ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. பெருந்தரவு மற்றும் தரவு அறிவியலுக்கான அதிகாரப்பூர்வ புள்ளியியல் பற்றிய ஐநா நிபுணர்களின் குழு, பெருந்தரவின் நன்மைகள் மற்றும் சவால்களை மேலும் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது, இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் கவுன்சிலில் இந்தியா …
Read More »18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விருதுகளை வழங்கினார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று (ஜனவரி 10, 2025) நடைபெற்ற 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் சிறந்த பிரதிநிதிகள் என்று கூறினார். இந்தப் புனித பூமியில் பெறப்பட்ட அறிவு மற்றும் திறன்களை மட்டும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது …
Read More »ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டணியில், குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, தூய்மையான எரிசக்தி, குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பீடு செய்தனர். குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக 2024 செப்டம்பரில் அமெரிக்கா சென்றது உட்பட அதிபர் …
Read More »ஐஎன்எஸ் துஷில் செனகலின் டாக்கர் சென்றடைந்தது
இந்தியக் கடற்படையின் புதிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் துஷில், 03 ஜனவரி 25 அன்று செனகலின் டாக்கர் துறைமுகத்திற்குச் சென்றது. இந்தப் பயணம் செனகலுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்தும். மேலும், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தும். ஐஎன்எஸ் துஷில், கேப்டன் பீட்டர் வர்கீஸ் தலைமையில், துறைமுக அழைப்பின் போது பல்வேறு ராணுவ மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் ஈடுபடும். மூத்த செனகல் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தொடர்புகள் …
Read More »வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் திருத்தம்
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை உருவாக்குவது அல்லது திருத்துவது தொடர்பாக இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் / தொழில்துறை வல்லுநர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் பெறப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வகுத்து சட்ட முன்வடிவை உருவாக்கும் வகையில் பத்தி 1.07ஏ மற்றும் 1.07பி ஆகியவற்றைச் சேர்க்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் …
Read More »பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் இந்தியா தனது நான்காவது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தது
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில்(UNFCCC) இந்தியா தனது 4வது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை 30 டிசம்பர் 2024 அன்று சமர்ப்பித்தது. இந்த 4 ஆவது அறிக்கையில் மூன்றாவது தேசிய தொடர்பியல் புதுப்பிக்கப்பட்டதுடன் 2020 -ம் ஆண்டிற்கான தேசிய பசுமைக்குடில் வாயு இலக்குகளில் அண்மைத் தகவல்கள் சேர்க்கப்பட்டும் உள்ளன. இந்தியாவின் தேசிய சூழ்நிலைகள், தணிவிப்பு நடவடிக்கைகள், தடைகள், இடைவெளிகள், தொடர்புடைய நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் வளர்ப்புக்கான தேவைகள் பற்றிய தகவல்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சர் திரு பூபேந்தர் …
Read More »நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர்
நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்று கூறிய பிரதமர், அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும் போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்”
Read More »
Matribhumi Samachar Tamil