Sunday, August 02 2026 | 03:22:51 AM
Breaking News

International

தில்லி சர்வதேச தோல் கண்காட்சி – 2025 பிப்ரவரி 20-21 தேதிகளில் யஷோபூமியில் நடைபெறும்

தோல் ஏற்றுமதிக்கான கவுன்சிலானது தில்லி சர்வதேச தோல் கண்காட்சி 2025-ஐ பிப்ரவரி 20-21 தேதிகளில் புதுதில்லி ஐசிசி துவாரகாவில் உள்ள யஷோபூமியில் நடத்துகிறது. இந்தக் கண்காட்சியானது உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் சமீபத்திய தயாரிப்புகள், புதுமைப் படைப்புகள்  மற்றும் திறன்களை சாத்தியமான ஆதார மாற்றுகளைத் தேடும் சர்வதேச வாங்குபவர்களுக்கு காட்சிப்படுத்த ஒரு வலுவான தளத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மையான நிகழ்வாகும். “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும்  “தற்சார்பு இந்தியா” முன்முயற்சிகளுடன் இணைந்து, இந்தக் …

Read More »

குடியரசுத் தலைவரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் திரு பிலிமோன் யாங், இன்று (பிப்ரவரி 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார். ஐக்கிய நாடுகள்  பொதுச் சபையின் அமர்வுத்  தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 80 ஆண்டுகள் என்னும் முக்கியமான மைல்கல்லை நாம்  எட்டும் நேரத்தில், ஐ.நா. பொதுச் சபையின் தலைமைப் பதவியை அவர் வகிப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார். 2025-ம் ஆண்டில் வளர்ச்சிக்கான நிதியுதவி …

Read More »

கார்வார் கடற்படை தளத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை முப்படை தலைமைத் தளபதி தொடங்கி வைத்தார்

முப்படைகளின் தலைமைத் தளபதியும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளருமான ஜெனரல் அனில் சவுகான், இந்திய கடற்படையின் மூத்த மாலுமிகளுக்கான குடியிருப்புகளையும், கார்வாரில் உள்ள கடற்படைத் தளத்தில் டிரங்க் வசதிகளின் ஒரு அங்கமாக பிரதான விநியோக துணை நிலையத்தையும் 2025 பிப்ரவரி 04-ம் தேதி  தொடங்கி வைத்தார். கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த  மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ அதிகாரிகளுக்கான 240 குடியிருப்பு அலகுகளைக் …

Read More »

அல்ஜீரியா ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சைத் சானெக்ரிஹா இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்

அல்ஜீரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியும், மக்கள் தேசிய இராணுவத் தலைமைத் தளபதியுமான ஜெனரல் சைத் சானெக்ரிஹா 2025 பிப்ரவரி 06 முதல் 12 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா 2025-ன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் அவர் உரையாடவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான நெகிழ்திறன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்ற தலைப்பில் நடைபெறும் பாதுகாப்பு …

Read More »

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர்  பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள்,  ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர்  இந்த  நிகழ்வில் …

Read More »

பூடான் ராணுவத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங், இந்தியாவிற்கு வருகை

பூடான் ராணுவத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங் இன்று (01.02.2025) இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சமாக அவரது இந்தப் பயணம் அமைந்துள்ளது. வரும் 6-ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவர், இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கயா செல்லும் அவர் அங்கு அதிகாரிகள் பயிற்சி அகாடமி, பௌத்த கலாச்சார இடங்களைப் பார்வையிடுகிறார்.  பிப்ரவரி 2 முதல் 5 வரை, ஜெனரல் ஷெரிங் புது தில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  தேசிய பாதுகாப்பு …

Read More »

இந்திய கடலோரக் காவல்படை, இந்தோனேசிய கடலோரக் காவல்படை இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு

இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்தோனேசிய கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.  புதுதில்லியில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தில் ஜனவரி 27 -ம் தேதி நடைபெற்ற 2-வது உயர்மட்ட கூட்டத்தின் போது, ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளின் கீழ் 2025 ஜனவரி 24 முதல் 28 வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ள எட்டு பேர் கொண்ட குழுவுடன், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் பரமேஷ் …

Read More »

இந்தியா-ஓமன் கூட்டுக்குழுக் கூட்டம் நடைபெற்றது; வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்தினர்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் 2025 ஜனவரி 27 முதல் 28 வரை தமது ஓமன் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். இந்த பயணத்தின் போது இந்தியா-ஓமன் கூட்டுக் குழு கூட்டத்தின் 11-வது அமர்வுக்கு, ஓமன் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திரு கைஸ் பின் முகமது அல் யூசுப்புடன் இணைந்து திரு கோயல் தலைமை தாங்கினார். வர்த்தகம், முதலீடு, …

Read More »

கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தோனேசிய கடற்படை குழுவுக்கு இந்தியா வரவேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன், அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் முகமது அலியுடன் கூடிய உயர்நிலைக்குழுவும் வந்துள்ளது. தனது இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியை சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இருநாடுகளைச் சேர்ந்த கடற்படைகளின் …

Read More »

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: “எனதருமை நண்பர், அதிபர் இம்மானுவல் மேக்ரோன் அவர்களே @EmmanuelMacron, இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்களின் அன்பான வாழ்த்துகள் மிகவும் பாராட்டத்தக்கவை. …

Read More »