Wednesday, August 05 2026 | 05:58:53 AM
Breaking News

International

ஐஎன்எஸ் துஷில் செனகலின் டாக்கர் சென்றடைந்தது

இந்தியக் கடற்படையின் புதிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் துஷில், 03 ஜனவரி 25 அன்று செனகலின் டாக்கர் துறைமுகத்திற்குச் சென்றது. இந்தப் பயணம் செனகலுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்தும். மேலும்,  இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தும். ஐஎன்எஸ் துஷில், கேப்டன் பீட்டர் வர்கீஸ் தலைமையில், துறைமுக அழைப்பின் போது பல்வேறு ராணுவ மற்றும் சமூக நிகழ்ச்சிகளில்  ஈடுபடும். மூத்த செனகல் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தொடர்புகள் …

Read More »

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் திருத்தம்

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை உருவாக்குவது அல்லது திருத்துவது தொடர்பாக இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் / தொழில்துறை வல்லுநர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் பெறப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வகுத்து சட்ட முன்வடிவை உருவாக்கும் வகையில் பத்தி 1.07ஏ மற்றும் 1.07பி  ஆகியவற்றைச் சேர்க்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் உரிய  திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்  …

Read More »

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் இந்தியா தனது நான்காவது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தது

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில்(UNFCCC) இந்தியா தனது 4வது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை  30 டிசம்பர் 2024 அன்று சமர்ப்பித்தது. இந்த 4 ஆவது அறிக்கையில் மூன்றாவது தேசிய தொடர்பியல்  புதுப்பிக்கப்பட்டதுடன் 2020 -ம் ஆண்டிற்கான தேசிய பசுமைக்குடில் வாயு இலக்குகளில் அண்மைத் தகவல்கள் சேர்க்கப்பட்டும் உள்ளன. இந்தியாவின் தேசிய சூழ்நிலைகள், தணிவிப்பு நடவடிக்கைகள், தடைகள், இடைவெளிகள், தொடர்புடைய நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் வளர்ப்புக்கான தேவைகள் பற்றிய தகவல்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சர் திரு பூபேந்தர் …

Read More »

நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர்

நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்று கூறிய பிரதமர், அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும் போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்”

Read More »

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மறைவு தமக்கு ஆழ்ந்த மனவேதனையை அளிக்கிறது. சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியான அவர், உலக அமைதி, நல்லிணக்கத்திற்காக அயராது பணியாற்றியவர். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.  அவரை …

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகி வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் (இந்தியா-ஆஸ்திரேலியா ECTA) இரண்டு ஆண்டு குறிப்பிடத்தக்க வெற்றியை நிறைவு செய்துள்ளது, பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இரு பொருளாதாரங்களின் பரஸ்பர திறனையும் இது வெளிப்படுத்துகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய இசிடிஏ வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிகங்கள், வேலைவாய்ப்புகளுக்கு புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் அவர்களின் பொருளாதார ஒத்துழைப்பின் அடித்தளத்தை இது வலுப்படுத்துகிறது.  …

Read More »

இந்தியா-நேபாள கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக் குழு நேபாளம் புறப்பட்டது

சூர்ய கிரண் என்ற கூட்டு ராணுவப் பயிற்சியின் 18-வது பதிப்பில் பங்கேற்பதற்காக 334 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு இன்று நேபாளத்திற்குப் புறப்பட்டது. இந்த பயிற்சி நேபாளத்தின் சல்ஜண்டியில் 2024 டிசம்பர் 31 முதல் 2025 ஜனவரி 13 வரை நடத்தப்படும். இது இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திரப் பயிற்சி நிகழ்வாகும். இந்திய இராணுவப் பிரிவை 11-வது கோர்கா ரைபிள்ஸைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவு வழிநடத்துகிறது. நேபாள …

Read More »

இந்திய கடற்படை கப்பல் துஷில் மொராக்கோவின் காசாபிளாங்கா துறைமுகத்திற்குச் சென்டைந்தது

இந்தியா – மொராக்கோ இடையேயான இருதரப்பு உறவுகளையும் கடற்படை ஒத்துழைப்பையிம் வலுப்படுத்தும் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் துஷில் கப்பல் 2014 டிசம்பர் 27 அன்று மொராக்கோவின் காசாபிளாங்காவுக்கு சென்றடைந்தது. மொராக்கோ ஒரு கடல்சார் நாடு். இந்தியாவைப் போலவே ஒரு தனித்துவமான புவியியல் நிலையைக் கொண்டுள்ளது. இந்திய போர்க்கப்பலின் இந்தப் பயணம், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வழிகளை மேலும் வலுப்படுத்தும். கடந்த 12 மாதங்களில், மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் தபார், தர்காஷ், சுமேதா ஆகியவை காசாபிளாங்காவுக்கு விஜயம் …

Read More »

குவைத்தின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் பிரதமர்

குவைத்தின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமருக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார்.  குவைத் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு, , குவைத்தில் உள்ள இந்திய சமூகம் மற்றும் 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கு பிரதமர் இந்த விருதை அர்ப்பணித்தார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணத்தை  மேற்கொண்டதன் மூலம் இவ்விருது வழங்கப்படுவது விழாவுக்கு ஒரு சிறப்புப் பெருமையைச் சேர்த்தது. இந்த விருது 1974-ல் நிறுவப்பட்டது. அதிலிருந்து, உலக அளவில் குறிப்பிட்ட  தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More »

குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத்  பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் நட்புறவுகளை நினைவுகூர்ந்த தலைவர்கள், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தங்கள் முழு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தச் சூழலில், இருதரப்பு உறவை ‘ உத்திபூர்வ  கூட்டாண்மை’யாக உயர்த்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். குவைத்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலம் வாய்ந்த இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ததற்காக அமீருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத்தின் வளர்ச்சியில் பெரிய மற்றும் துடிப்பான இந்திய சமூகத்தின் பங்களிப்பிற்கு  அமீர் பாராட்டு தெரிவித்தார்.  குவைத் தனது தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நிறைவேற்றும் புதிய முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இந்த மாத தொடக்கத்தில் ஜிசிசி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அமீருக்கு வாழ்த்து தெரிவித்தார். அரேபிய வளைகுடாக் கோப்பையின் தொடக்க விழாவில் நேற்று ‘கெளரவ விருந்தினராக’தம்மை அழைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் மதிப்புமிக்க பங்குதார நாடாக  இந்தியாவின் பங்கிற்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, பிரதமரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமீர் கூறினார். குவைத் தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நனவாக்குவதில் இந்தியாவின் பெரும் பங்கு மற்றும் பங்களிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அமீர் கூறினார்.  இந்தியாவுக்கு வருமாறு அமீருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்

Read More »