ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) 2021ம் ஆண்டு முதல் 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியா சமூகத்தினர் உட்பட 916 நபர்களைக் கைது செய்துள்ளது. இது தேசத்தைப் பாதுகாப்பதற்கான ரயில்வே பாதுகாப்புப் படையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. 2024 ஜூன், ஜூலையில், வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கீழ் உள்ள பகுதிகளில் 88 பங்களாதேஷ், ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோரை ரயில்வே பாதுகாப்புப் படை கைது செய்தது. இந்த நபர்களில் சிலர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை …
Read More »நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்கான் ஒப்பந்தம்
நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, எஸ்ஜெவிஎன் நிறுவனம், ஜிஎம்ஆர் எனர்ஜி நிறுவனம், நேபாள மின்சார ஆணையம் ஆகியவை இணைந்த கூட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி அப்பிராந்தியத்தில் மின் சக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்ட மேம்பாடு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஒரு விரிவான கட்டமைப்பை …
Read More »ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் ஹெய்ம்டெக்ஸ்டில் 2025 ஜவுளி கண்காட்சியில் இந்திய அரங்கை ஜவுளி அமைச்சர் திறந்து வைத்தார்
மெஸ்ஸே பிராங்பேர்ட்டில் நடைபெறும் ஹெய்ம்டெக்ஸ்டில் 2025 ஜவுளி கண்காட்சியில் இந்திய அரங்கை மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் திறந்து வைத்ததன் மூலம் ஜவுளித் துறையில் இந்தியா தனது வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்தி உள்ளது. இந்த மதிப்புமிக்க உலகளாவிய வீட்டு ஜவுளி கண்காட்சியில் மிகப்பெரிய நாடாக பங்கேற்றதன் மூலம், புதுமை, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா நிரூபித்துள்ளது. உலகளாவிய வீட்டு ஜவுளி ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் இடையே உரையாற்றிய …
Read More »அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடுர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்
கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் தேசிய மாற்றம் குறித்த சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் போது, அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடூர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி நல்லாட்சிக்கான தேசிய மையத்தால் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி …
Read More »குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா விரிவாக்க கட்டிடத்தை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா திறந்து வைத்தார்
1154 சதுர அடி பரப்பளவில் ரூ. 43.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்கப்பட்ட குணா தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கட்டிடத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்.சிந்தியா ஜனவரி 11, 2025 அன்று திறந்து வைத்தார். அஞ்சல் துறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், சுகன்யா சம்ரித்தி யோஜனா, தொழில்நுட்ப அடிப்படையிலான இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி …
Read More »அனுமதியற்ற வர்த்தகத்தைத் தடுப்பது தொடர்பான வர்த்தகப் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்டம் காத்மாண்டுவில் நிறைவடைந்தது
அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைத் தடுப்பதற்கான வர்த்தகம், போக்குவரத்து ஒத்துழைப்புக்கான இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான குழுக் (IGC) கூட்டம், 2025 ஜனவரி 10, 11 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற்றது. மத்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் தலைமையில் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழுவினர் இதில் பங்கேற்றனர். நேபாள தரப்பில் நேபாள அரசின் தொழில், வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் திரு கோபிந்த பகதூர் கார்க்கி தலைமையில் …
Read More »ஐநா தரவு அறிவியல் நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்தது
ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. பெருந்தரவு மற்றும் தரவு அறிவியலுக்கான அதிகாரப்பூர்வ புள்ளியியல் பற்றிய ஐநா நிபுணர்களின் குழு, பெருந்தரவின் நன்மைகள் மற்றும் சவால்களை மேலும் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது, இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் கவுன்சிலில் இந்தியா …
Read More »18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விருதுகளை வழங்கினார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று (ஜனவரி 10, 2025) நடைபெற்ற 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் சிறந்த பிரதிநிதிகள் என்று கூறினார். இந்தப் புனித பூமியில் பெறப்பட்ட அறிவு மற்றும் திறன்களை மட்டும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது …
Read More »ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டணியில், குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, தூய்மையான எரிசக்தி, குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பீடு செய்தனர். குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக 2024 செப்டம்பரில் அமெரிக்கா சென்றது உட்பட அதிபர் …
Read More »
Matribhumi Samachar Tamil