Friday, December 19 2025 | 09:24:28 AM
Breaking News

Miscellaneous

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளின் இரண்டாண்டு கொண்டாட்டங்கள்

பாரத கேசரி டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளின் இரண்டாண்டு அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் தொழில்துறை பயணத்தை வடிவமைத்த தொலைநோக்கு கொண்ட தலைவரின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தில்லியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், …

Read More »

ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் உஜ்ஜயினியில் ஆகாஷ்வாணி மையத்தை மத்திய அரசு நிறுவ உள்ளது

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் மற்றும் எதிர்கால வளர்ச்சி முயற்சிகள் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. ஊடக தொடர்பு, பொதுத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான …

Read More »

“கலாசேது” என்ற நாடு தழுவிய முன்முயற்சியை வேவெக்ஸ் புத்தொழில் தொடங்கியுள்ளது; நிகழ்நேர பன்மொழி, பல் ஊடக உள்ளடக்க உருவாக்க தீர்வுடன் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முன்னணி புத்தொழில் நிறுவனங்களுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது

அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற தகவல் தொடர்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தீர்வுகளுக்கு வலுவான உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இது மொழி அடிப்படையிலான பிளவுகளை இணைத்து நாடு முழுவதும் தொலைதூரப்பகுதிக்கும் தகவல் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்கிறது. கலாசேது: இந்தியாவுக்கான நிகழ்நேர மொழி சார்ந்த தொழில்நுட்பம் அனைவரையும் உள்ளடக்கிய தகவல் தொடர்புக்கு செயற்கை நுண்ணறிவு ஆற்றலை பயன்படுத்துவது என்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலமான வேவெக்ஸ் …

Read More »

அஸ்மிதா பளுதூக்குதல் லீக்கை துவக்கி வைத்தார், மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

உத்தரப்பிரதேச மாநிலம் மோடிநகரில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா லீக் சீசனை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா சீசன், எட்டு வெவ்வேறு எடைப் பிரிவுகளில் 42 பெண்கள் பங்கேற்ற பளுதூக்குதல் லீக்குடன் தொடங்கியது. நடப்பு நிதியாண்டான 2025-26-இல், 15 விளையாட்டுப் பிரிவுகளில் 852 லீக்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள லீக்குகளில் 70,000க்கும் …

Read More »

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு தரமானது, அனைவரும் அணுகக்கூடியது மற்றும் செலவு குறைந்தது: மக்களவைத் தலைவர்

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு தரமானது, அனைவராலும் அணுகக்கூடியது மற்றும் குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா பாராட்டியுள்ளார். இன்று புதுதில்லியில் ஐபிஎஃப் மெடிகான் 2025 மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கலில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்த அவர், இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் எட்டக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், சுகாதாரத்தின் தரத்தை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். சுகாதாரத் துறையில் உள்ள முன்முயற்சிகள் சுகாதார சேவைகளை மேலும் உள்ளடக்கியதாகவும் நோயாளிகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சுகாதாரப் பரவல், டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பங்கள் மற்றும் மலிவு விலை சிகிச்சை ஆகியவற்றில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் பாராட்டினார், இது ஒரு வலுவான மற்றும் சமமான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். புதுதில்லியில் புதுமையான மருத்துவர்கள் மன்றத்தின் 7-வது ஆண்டு சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் திரு பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இன்று, வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் சுகாதார சவால்களை எதிர்கொண்டாலும், இந்திய மருத்துவர்கள் புதுமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் உலகளாவிய நற்பெயரை மேம்படுத்தி வருவதாக திரு பிர்லா  கூறினார். மருத்துவத் துறையில் அண்மை ஆராய்ச்சி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்க இந்த மன்றம் ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை, சிறந்த சுகாதார அமைப்பை உருவாக்கவும், மருத்துவத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இது ஆராய்கிறது. இந்திய மருத்துவர்களின் நற்பெயர் மற்றும் தரம் உலகளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, சேவை மற்றும் தியாகம் இந்தியா கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயை திறம்பட நிர்வகிக்கவும் வெற்றிகரமான சிகிச்சையை வழங்கவும் உதவியது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு உண்மையான சான்று என்று திரு பிர்லா சுட்டிக் காட்டினார். இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான மையமாக வளர்ந்து வருவதாகவும், நாட்டிற்குள் மருந்து உற்பத்தி, தடுப்பூசி உற்பத்தி மற்றும் உயிரிமருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் கண்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர்,  சர்வதேச அரங்கில் இந்தியா தன்னை ஒரு முக்கிய நாடாக  நிலைநிறுத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றார்.  இந்தியாவின் திறமையான விஞ்ஞானிகள், உறுதியான ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை உள்ளூர் மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை உலகளாவிய சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கை மேலும் வலுப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், சுகாதாரத் துறையில் இந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு பிர்லா குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் போன்ற முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி, புதுமை மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என அவர் கூறினார். மருத்துவத் துறையில் புதுமை மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இது காலத்தின் தேவை என்று கூறிய அவர்,  வளர்ந்து வரும் சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும் நோயாளி பராமரிப்பை மேம்படுத்தவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார். புதிய சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், நோய் தடுப்பை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பதும், மருத்துவ ஆராய்ச்சியில் முதலீடு செய்வதும் அவசியம் என்று திரு பிர்லா குறிப்பிட்டார். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலக சமூகத்திற்கும் பயனளிக்கும் முன்னேற்றங்களை இயக்க நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  இந்த மாநாடு வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல – இது மனித சேவைக்கான உலகளாவிய தளம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். ஆராய்ச்சி, புதுமை மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு ஐபிஎஃப் பங்களிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இங்கு நடைபெறும்  விவாதங்கள் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கருவிகள், ரோபாட்டிக்ஸ் மற்றும் பிற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கும் என்று கூறிய அவர், மனிதனை மையமாகக் கொண்ட, திறமையான சுகாதார அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நேபாளம், இலங்கை, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

Read More »

ஐசிஎம்ஆர்-என்ஐஇ-இல் ஆராய்ச்சிப் பணிகளை ஊடகக் குழு பாராட்டியது

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் மனிஷா வர்மா தலைமையிலான 10 பேர் கொண்ட தேசிய ஊடகக் குழு, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் ஊடகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 2, 2025) சென்னை வந்தது. சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள முதன்மையான ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் …

Read More »

பத்ம விருதுகள் – 2026-க்கான பரிந்துரைகளை 2025 ஜூலை 31 வரை அனுப்பலாம்

2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதுகளாகும். 1954-ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது ‘சிறப்புப் பணிகளை’ அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் …

Read More »

சுகாதார – தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது: இ.டி. மருத்துவர்கள் தின மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

எக்கனாமிக் டைம்ஸ் (இ.டி.) டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் தின மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முக்கிய உரையாற்றினார். திரு ஜிதேந்திர சிங் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரும் மருத்துவ பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக  உள்ளது என நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.  பொருளாதாரத்தில் உலக அளவில் 10-வது இடத்திலிருந்து 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது எனவும் இந்த ஏற்றம் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணம், உள்நாட்டு உயிரி அறிவியல் கருவிகளை சுமந்து சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார். விரைவில் ஒரு புதிய மருத்துவத் துறையான விண்வெளி மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு மைல்கல் இது என்று அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில், மருத்துவக் கல்வியில் விண்வெளி மருத்துவர்கள் என்ற ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாகலாம் எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியாவில் 70% க்கும் அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றாலும், வயதான மக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகின்றது என அவர் தெரிவித்தார். 1947-ம் ஆண்டில், சராசரி ஆயுட்காலம் 50-55 வயதாக இருந்தது எனவும் இப்போது அது 80-ஐ நெருங்குகிறது எனவும் அவர் கூறினார். இந்தியாவின் சமீபத்திய உலகளாவிய சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நோய்த் தடுப்பு மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கோவிட்-19-க்கான உலகின் முதல் மரபணு தடுப்பூசியையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஹெச்பிவி தடுப்பூசியையும் இந்தியா உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஹீமோபிலியாவிற்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது எனவும் இதன் முடிவுகள் மதிப்புமிக்க நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தனியார் துறையுடனான முதல் கட்ட ஒத்துழைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சாதனைகள் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் ஆன்மா இரண்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Read More »

வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மாதிரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், வேளாண் காடுகள் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ‘விவசாய நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான மாதிரி விதிகளை’ வெளியிட்டுள்ளது. கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மரங்களின் பரப்பை அதிகரித்தல், நீர் பாதுகாப்பு, பருவநிலை மீள்தன்மைக்கு பங்களித்தல், இயற்கைக் காடுகள் மீதான அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை வேளாண் காடுகள் வழங்குகின்றன. வேளாண் காடுகள் தொடர்பான நிலங்களைப் பதிவு செய்வதற்கும், மரங்களை வெட்டுதல், போக்குவரத்தை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை வழங்குவதன் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதே மாதிரி விதிகளின் நோக்கமாகும். இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் பிற தரப்பினர் வேளாண் காடுகள் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் என்றும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மரம் சார்ந்த விவசாய முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் மாதிரி விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேளாண் காடுகளின் மூலம் உள்நாட்டு மர உற்பத்தியை ஊக்குவிக்கும் அணுகுமுறை தேவை-விநியோக இடைவெளியை குறைக்கும். உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு மர அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் இது உதவும். மரம் சார்ந்த தொழில்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள்- 2016-ன் கீழ் நிறுவப்பட்ட மாநில அளவிலான குழு இந்த மாதிரி விதிகளை செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அமைப்பாகும். மரம் வெட்டுதல் மற்றும் மர போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், வணிக ரீதியாக மதிப்புமிக்க மர வகைகளின் உற்பத்தியை விவசாய நிலங்களில் மேம்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுவதே இதன் பங்காகும். மாதிரி விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் தோட்டங்களை தேசிய மர மேலாண்மை அமைப்பான என்டிஎம்எஸ்-ன் (NTMS) போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. நில உரிமைத் தகவல், பண்ணையின் இருப்பிடம், இனங்கள், தோட்ட காலம் போன்ற அடிப்படை தோட்டத் தரவைச் சமர்ப்பிப்பது இதில் அடங்கும். விண்ணப்பதாரர்கள் தோட்டத் தகவலை அவ்வப்போது புதுப்பித்து அதன் தன்மையை உறுதிசெய்ய தோட்டத்தின் புவிசார் அம்சங்கள் கொண்ட புகைப்படங்களைப் பதிவேற்றலாம். பதிவுசெய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து மரங்களை வெட்ட விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய மர மேலாண்மை அமைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சரிபார்ப்பு நிறுவனங்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளும். அவர்களின் சரிபார்ப்பு அறிக்கைகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் மரம் வெட்ட அனுமதிகள் வழங்கப்படும். பிரதேச வன அதிகாரிகள் இந்த நிறுவனங்களின் செயல்திறனை அவ்வப்போது மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்வார்கள். வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், தேவையற்ற நடைமுறை தடைகளில் இருந்து விவசாயிகளைக் காக்கவும் இந்த மாதிரி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதிரி விதிகளை ஆராய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதைப் பரிசீலிக்குமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Read More »

இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தப்படாத குழந்தைகள் விகிதம் 0.06 சதவீதமாக குறைந்தது – குழந்தைகள் ஆரோக்கியத்தில் உலகளாவிய முன்மாதிரியாக இந்தியா திகழ்கிறது

நோய்த் தடுப்பிலும் ஆரோக்கிய பராமரிப்பிலும் தடுப்பூசி மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. நோய்த்தடுப்புக்கு இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அதன் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (UIP) மூலம் தெளிவாகிறது. இது ஆண்டுதோறும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் 2.6 கோடி குழந்தைகளுக்கும் (1 வயது வரை உள்ள குழந்தைகள்) இலவச தடுப்பூசி சேவைகளை வழங்குகிறது. நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் 1.3 கோடிக்கும் மேற்பட்ட நோய்த்தடுப்பு முகாம்களை நடத்துகிறார்கள். நாடு முழுவதும் தொடர்ச்சியான, முயற்சிகள், தடுப்பூசி இயக்கங்கள், இந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியதன் விளைவாக, மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. 2023-ல் 0.11 சதவீதத்திலிருந்து 2024-ல் 0.06 சதவீதமாக இது குறைந்துள்ளது. இந்த அணுகுமுறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது.  நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த நடப்பு ஆண்டில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சாதனைகள் இந்தியாவை குழந்தை ஆரோக்கியத்தில் உலகளாவிய முன்மாதிரியாக நிலைநிறுத்தியுள்ளன. இதனை ஐநா குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான நிறுவனங்களுக்கு இடையேயான குழு (UN IGME), அதன் 2024-ம் ஆண்டு அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. மார்ச் 6, 2024 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவிற்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளை அதிகம் செலுத்தியதற்கான சாம்பியன் விருது வழங்கப்பட்டது. வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவை காரணமாக குழந்தைகள் இறப்பது கணிசமாக குறைந்துள்ளது. உயிர் காக்கும் தடுப்பூசிகளே இதற்குக் காரணம். தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள்: * தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிகம் உள்ள 11 மாநிலங்களில் உள்ள 143 மாவட்டங்களில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. * இந்திரதனுஷ் திட்டம் : மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 5.46 கோடி குழந்தைகளுக்கும், முன்னர் தடுப்பூசி போடப்படாத அல்லது முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்ட 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. * பல்ஸ் போலியோ இயக்கங்கள்: இந்தியா 2014 முதல் போலியோ இல்லாத நிலையைப் பராமரித்து வருகிறது. * கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து: சமூக மட்டத்தில் நோய்த்தடுப்பு மற்றும் வெளிநடவடிக்கைகளுக்காக தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படுகிறது. * பல அடுக்கு பணிக்குழுக்கள்: மாநில, மாவட்டம், மற்றும் பகுதி அளவிலான பணிக்குழுக்கள் ஒருங்கிணைந்த தடுப்பூசிப் பணிகளை இந்தக் குழுக்கள் உறுதி செய்கின்றன. * வழக்கமான தகவல், கல்வி, மக்கள் தொடர்பு இயக்கங்கள்: விழிப்புணர்வை அதிகரிக்கவும் தடுப்பூசிகள் மீதான தயக்கத்தை ஒழிக்கவும் இந்தப் பிரச்சார இயக்கங்கள் உதவுகின்றன.

Read More »