மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது. இச்சங்கங்கள் பல மாநில கூட்டுறவு சங்க சட்டம், 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினராவதற்கு தகுதியுடையவையாகும். அதன் விவரம் வருமாறு: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட், கிரிஷக் பாரதி …
Read More »தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகிக்க அனுமதி
தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பிஏசிஎஸ்) செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அதன் மூலம் அவற்றை நிதி ரீதியாக வலுவாகவும், நிலையானதாகவும் ஆக்குவதற்காக, அவை சமையல் எரிவாயு டீவர்ஷிப் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து பிஏசிஎஸ்-ஐ சமையல் எரிவாயு விநியோகஸ்தராக தகுதி பெறச் செய்துள்ளது. விரிவான அடிமட்ட கட்டமைப்புடன், கிராமப்புற சமூகங்களிடையே நம்பிக்கையுடன் செயல்படும் பிஏசிஎஸ், தொலைதூரப் பகுதிகளில் எல்பிஜி விநியோகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நன்கு …
Read More »அஞ்சல் துறையில் 100 நாள் செயல் திட்டம்
அஞ்சல் துறையின் 100 நாள் செயல் திட்டமானது குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவை வழங்குவதை மாற்றியமைப்பதையும் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது நாடு முழுவதும் 5000 அஞ்சல் சேவை முகாம்களை ஒருங்கிணைத்து அரசின் சேவைகள் நேரடியாக கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் குறிக்கோள், அரசின் சேவைகளை நேரடியாக ஒவ்வொருவரின் வீட்டிற்கும் கொண்டு செல்வதாகும். எனவே, இது வேலைவாய்ப்பு சார்ந்த திட்டம் அல்ல. மாறாக ஒரு சேவை வழங்கும் திட்டமாகும். 100 நாட்கள் இயக்கத்தின் போது, 16,014 அஞ்சல் சேவை முகாம்கள் நடைபெற்றன. இதில் மொத்தம் 9,31,541 நபர்கள் பங்கேற்றனர். அஞ்சல் ஏற்றுமதி மையத்தின் இணையதளத்தில் 3000 புதிய ஏற்றுமதியாளர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஆவண உதவி, சந்தை தகவல், பார்-குறியீடு லேபிள் அச்சிடுதல் மற்றும் காகிதமற்ற சுங்க அனுமதி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறது. ‘ஒரு மாவட்டம் – ஒரு தயாரிப்பு’ முன்முயற்சியுடன் இணைந்து, இந்தத் திட்டம் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கும். 100 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 3400க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இணைந்துள்ளனர். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
Read More »நாடாளுமன்ற கேள்வி : இந்திய விண்வெளி நிலையம் தொடர்பான பணிகள்
பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் (பிஏஎஸ்) எனப்படும் இந்திய விண்வெளி நிலையம் குறைந்த புவி சுற்றுப்பாதையில் (எல்இஓ) இந்தியாவின் மனித விண்வெளிப் பயண நோக்கங்களை நிறைவேற்ற உதவும். மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள இது உதவும். மற்ற நாடுகளின் செயல்பாட்டு விண்வெளி நிலையங்களைப் போலவே, தேசிய முன்னுரிமைகள், சமூக பயன்பாடுகளை இலக்காகக் கொண்ட மைக்ரோ கிராவிட்டி சூழலில் அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல …
Read More »வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த மக்களவை சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்
பருவநிலை மாற்றத்தின் சவாலை சமாளிக்க சமச்சீரான வளர்ச்சியும் நீடித்த தன்மையும் தேவை என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் பருவநிலை மாற்றமும் ஒன்று என்று கூறிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை இயக்கம் மூலம் இந்த சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற 2023-25 தொகுதி இந்திய வனப் பணியைச் …
Read More »குடியரசுத்தலைவர் நிலையத்தில் டிசம்பர் 29 முதல் 15 நாட்கள் மலர் மற்றும் தோட்டக்கலை திருவிழா நடைபெறுகிறது
செகந்திராபாத் போலரத்தில் உள்ள குடியரசுத்தலைவர் நிலையத்தில், 2024 டிசம்பர் 29 முதல் 15 நாட்கள் ‘உத்யன் உத்சவ்’ எனப்படும் மலர் மற்றும் தோட்டக்கலை திருவிழா நடைபெறும். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திருவிழா, இயற்கையைக் கொண்டாடுவதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் பங்களிப்பின் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரங்குகளை பார்வையிட்டும், பயிலரங்குகளில் பங்கேற்றும் மக்கள் வேளாணமை, தோட்டக்கலையில் ஏற்பட்டுள்ள புதுமைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். உத்யன் உத்சவ் எனப்படும் திருவிழாவை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் குறித்து குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (18.12.2024) ஆய்வு செய்தார். குடியரசுத்தலைவர் நிலையத்தின் பார்வையாளர் மையத்தில் மிட்டி கஃபே உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் கடையை அவர் திறந்து வைத்தார். உரம் தயாரிக்கும் பணியை நேரில் காண வளாகத்தில் உள்ள உரம் தயாரிக்கும் பிரிவையும் பார்வையிட்டார். தோட்டக் கழிவுகளிலிருந்து கரிம உரங்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த உரம் தயாரிக்கும் அலகு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Read More »புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு, செயல்பாடுகள் குறித்த பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2024, டிசம்பர் 17 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. முந்தைய பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலை பெருநிறுவனமயமாக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட புதிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிதி புள்ளிவிவரங்கள், நவீனமயமாக்கல், மூலதன செலவினம், ஏற்றுமதி, உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது. முக்கியமான பொருட்களை உள்நாட்டுமயமாக்குதல், உற்பத்தி வசதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் …
Read More »பருவநிலைகளைத் தாங்கி வளரும் திறன் கொண்ட நெல் ரகங்களை உருவாக்குதல்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னோடித் திட்டமான ‘பருவநிலை மாற்ற தாங்குதிறன் வேளாண்மைக்கான தேசிய கண்டுபிடிப்பு’ மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல் பயிரிடப்படும் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை ஒருங்கிணைந்த உருவகப்படுத்துதல் மாதிரியாக்க ஆய்வுகளை மேற்கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வானது பருவகாலங்களில் பயிரிடப்படும் மானாவாரி நெல் பயிர்களின் விளைச்சல் 2050-ம் ஆண்டில் 20% ஆகவும், 2080-ம் ஆண்டில் 47% ஆகவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பாசன நெல் சாகுபடி 2050-ம் ஆண்டில் 3.5% ஆகவும், 2080-ம் ஆண்டில் 5% ஆகவும் குறையக்கூடும். கடந்த 10 ஆண்டுகளில், மொத்தம் 668 நெல் வகைகள் (நெல்) உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 199 வகைகள் தீவிர மற்றும் பிற வகை பருவநிலைகளைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களாகும். 103 நெல் வகைகள் வறட்சி, நீர் அழுத்தங்களை தாங்கி வளரக்கூடியவை, 50 நெல் வகைகள் வெள்ளம், ஆழமான நீர் நிலைகள், நீரில் மூழ்கும் தன்மையுடன் கூடியவை, 34 நெல் வகைகள் உப்புத்தன்மை காரத்தன்மை போன்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. 6 நெல் இரகங்கள் வெப்ப அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. 6 நெல் இரகங்கள் குளிர் அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. இதில் 579 நெல் இரகங்கள் பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரக்கூடியவை. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பகீரத் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டங்கள்
வேளாண் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், மாற்று சந்தை வழிவகைகளை உருவாக்கவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை உறுதி செய்யும் வகையில் சந்தை ஏற்றத் தாழ்வுகளை தணிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண் சந்தை, 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான நடவடிக்கைகள் இணையதள சேவை மூலம் சந்தைகள், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டம், பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விலை ஆதரவு ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இத்திட்டத்தின் துணை திட்டமான சந்தைப்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் தகவல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வேளாண் விளைபொருட்களின் விலைகள் மற்றும் அதன் விநியோகம் குறித்த அன்றாட தகவல்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 3,771 சந்தை வளாகங்களில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைப் பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாய விளைபொருட்களின் தரநிலைக்கான இணையதளம், இ-நாம் இணையதளம், கிசான் சுவிதா போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், தகுந்த கொள்கை நடவடிக்கைகள், பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது. உற்பத்தியை அதிகரித்தல், ஆதாயமான வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு வருமான ஆதரவு ஆகியவற்றுக்கான மத்திய அரசு திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக உள்ளன. பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உற்பத்திச் செலவைக் குறைத்தல், பயிர்களை மாற்றி மாற்றி பயிரிடுதல், நீடித்த வேளாண்மைக்காக பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் …
Read More »