செல்வமகள் சேமிப்புத் திட்டம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தலின் அம்சமாகத் திகழ்கிறது. இது அவர்களின் கனவுகள், விருப்பங்களுக்கான அரசின் உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 2025 ஜனவரி 22 செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 10 ஆண்டுகள் …
Read More »நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128 வது பிறந்த தினத்தையொட்டி அவரது மரபுகளை கௌரவிக்கும் வகையில் பராக்கிரம தினம் 2025-ஐ இந்தியா கொண்டாடுகிறது
பராக்கிரம தினம் 2025-யையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த இடமான வரலாற்று நகரம் கட்டாக்கில் உள்ள பாராபதி கோட்டையில் 2025 ஜனவரி 23 முதல் 25 வரை பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தப் பன்முக கொண்டாட்டம் நேதாஜியின் 128-வது பிறந்த நாளையொட்டி அவரது பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வை ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி 23.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார். நேதாஜியின் பிறந்த தினத்தை ‘பராக்கிரம தினம்’ என்று நினைவுகூர அரசு 2022 இல் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்த ஆண்டு …
Read More »அமிர்த உத்யான் பிப்ரவரி 2 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது
குடியரசுத் தலைவர் மாளிகையின் அமிர்த உத்யான் என்னும் பூந்தோட்டம் 2025 பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பராமரிப்பு நாட்களான திங்கட்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம். பிப்ரவரி 5 (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20 மற்றும் 21 (ராஷ்டிரபதி பவனில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக), …
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 118-வது அத்தியாயத்தில், 19.01.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று 2025ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல். நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். ஒருஒரு முறையும் மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறும், ஆனால் இந்த முறை, நாம் ஒரு வாரம் முன்னதாகவே, நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கின்றோம். ஏனென்றால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நமது குடியரசுத் தினமாகும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான முதன்மையான நல்வாழ்த்துக்களைத் …
Read More »சட்டப்பூர்வ நில உரிமையுடன் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் -65 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் விநியோகம்
“கிராமப்புற மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எனது அரசின் முன்னுரிமைப் பணியாகும்” –பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ்தினத்தன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்வாமித்வா திட்டம், கிராம பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு “உரிமைகப் பதிவு” வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நில எல்லை வரையரைக்கு, மேம்பட்ட ட்ரோன், ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த திட்டம் சொத்து பணமாக்குதலை …
Read More »ஸ்வமித்வா பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். நிகழ்வின் போது, ஸ்வமித்வா திட்டம் தொடர்பான ஐந்து பயனாளிகளின் அனுபவங்களை அறிய அவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரைச் சேர்ந்த ஸ்வமித்வா …
Read More »ஊரக இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: ஸ்வமிதா திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை வழங்குகிறார்
இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளித்தலையும் நிர்வாகப் பயணத்தில் முக்கிய மைல் கல்லை குறிக்கும் வகையிலும் நாளை (2025, ஜனவரி 18) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகிக்கின்றார். சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு …
Read More »அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் 7-வது தேசிய அளவிலான வழிகாட்டும் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
அடல் நிலத்தடி நீர் திட்டத்தை அமல்படுத்த தேசிய அளவிலான வழிகாட்டும் குழுவின் ஏழாவது கூட்டம் புதுதில்லியில் மத்திய அரசின் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் தலைமையில் நடைபெற்றது. ஐந்தாவது ஆண்டாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்தத் திட்டத்தின் நல்விளைவுகளை மற்ற பகுதிகளில் மேம்படுத்துவதற்கான நேரம் வந்துள்ளது என்றும் கூடுதல் செயலாளர் மற்றும் அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார். கடந்த …
Read More »ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் ஜனவரி 18 அன்று வழங்குகிறார்
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஜனவரி 18 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்குகிறார். அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ …
Read More »சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான திரு அமித் ஷா, 2025 ஜனவரி 16-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் ‘விரைவு குடியேற்றப் பதிவு சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் ஏற்கனவே 2024 ஜூன் 22-ம் தேதி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திலிருந்து இந்தத் திட்டத்தை …
Read More »
Matribhumi Samachar Tamil