Saturday, December 06 2025 | 12:24:46 PM
Breaking News

National

தேசிய மாற்றத்தின் அடித்தளமாக ஐந்து உறுதிமொழிகளை குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

குடியரசு  துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “நமது தேசிய மாற்றத்தின் அடித்தளம் சமூக நல்லிணக்கம், குடும்ப அறிவொளி, சுற்றுச்சூழல் உணர்வு, சுதேசி மற்றும் குடிமைக் கடமைகள் ஆகிய ஐந்து சக்திவாய்ந்த தூண்களில் தங்கியுள்ளது. இந்த ஐந்து தீர்மானங்கள்-நமது பஞ்சபிரான்-நமது சமூகத்தின் நரம்புகளில் பாய்ந்து, தேசியவாதத்தின் வெல்லமுடியாத உணர்வை வளர்க்கிறது. தனிப்பட்ட பொறுப்பு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு ஆகியவற்றை கலாச்சார பெருமை, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையுடன் இணைக்கும் …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின்  கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப்  பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் …

Read More »

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) 67-வது நிறுவன தினத்தை போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொண்டாடுகிறது

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் 67-வது  நிறுவன தினத்தை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(சி.வி.ஆர்.டி.இ )   இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி) ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டிஆர்டிஓ ஆர் & டி செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், புது தில்லியில் உள்ள எஸ் கோத்தாரி அரங்கத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் …

Read More »

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும்

இந்தியப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ரயில் பயணத்தை வழங்க புத்தாண்டு தயாராக உள்ளது. குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர அமர்ந்து செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வெற்றிகரமாக வழங்கியதையடுத்து, நீண்ட தூர ரயில்களுக்கும் இதை இந்திய ரயில்வே நனவாக்க உள்ளது. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கடந்த மூன்று நாட்களில் அதன் பல சோதனைகளில் மணிக்கு 180 கி.மீ …

Read More »

இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சுய உதவிக் குழுக்கள் பிரதிபலிக்கின்றன: டாக்டர் ஜிதேந்திர சிங்

“பெண்கள் தலைமையிலான வளர்ச்சி”யின் முக்கியத்துவத்துக்கு  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக மொராகுடி கிராமத்தில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 3,000 பெண்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை புவி அறிவியல் , பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். இந்தியாவில் பெண்கள் …

Read More »

புதுதில்லியில் தீவுகள் மேம்பாட்டு முகமையின் 7- வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

தீவுகள் மேம்பாட்டு முகமையின் 7-வது கூட்டம் புதுதில்லியில் இன்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) டி.கே.ஜோஷி, லட்சத்தீவு நிர்வாகி திரு பிரபுல் படேல், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து …

Read More »

குடியரசு தின தேசிய மாணவர் படை முகாம் 2025-ல் பங்கேற்கும் 2,361 பேரில் சாதனை அளவாக 917 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்

2025 குடியரசு தின முகாமில்    தேசிய மாணவர் படையின் (என்.சி.சி)   917 பெண்கள் உட்பட 2,361 மாணவர்கள் பங்கேற்பார்கள் – பெண்கள் பங்கேற்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகும். தில்லி கண்டோன்மென்டில் ஜனவரி 03, 2025 அன்று செய்தியாளர்களிடம்  பேசிய  தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங், ஒரு மாத கால முகாமில் நாடு முழுவதிலுமிருந்து என் சி சிமாணவர்கள் பங்கேற்பார்கள். இதில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் …

Read More »

கிராமப்புற பாரத திருவிழா 2025-ஐ பிரதமர் ஜனவரி 4 –ம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025- ஐ தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடையே அவர் உரையாற்றுகிறார். கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா ஜனவரி 4 முதல் 9 வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும். இத்திருவிழாவில் விவாதங்கள், பட்டறைகள், பயிற்சி வகுப்புகள் மூலம், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தற்சார்பு பொருளாதார நிலையை உருவாக்குதல், கிராமப்புற சமூகங்களிடையே புதுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் சிறப்பு கவனம் செலுத்தி, கிராமப்புற மக்களிடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி பாதுகாப்பை ஊக்குவித்தல், நிதி உள்ளடக்கம், நிலையான விவசாய நடைமுறைகளை செயல்படுத்துதல் மூலம் இதன் குறிக்கோள்களை எட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். தொழில்முனைவோர் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாக இருக்கும். அரசு அதிகாரிகள், வழிகாட்டும் தலைவர்கள், கிராமப்புற தொழில்முனைவோர், கைவினைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஒன்றிணைத்து கிராமப்புற மாற்றத்திற்கான வரைபடத்தை உருவாக்குதல்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பம், புதுமையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்களை ஊக்குவித்தல், கண்காட்சிகள்  ஆகியவை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत 1885 से 1950 …

Read More »

29 பிரிவுகளில் 9,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ரயில்வே ஆதரவளிக்கிறது

ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், 1928-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விளையாட்டை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது. ஹாக்கி, தடகளம்,  டென்னிஸ் ஆகியவற்றை ஊக்குவிப்பதிலும் தற்போது நாட்டில் ஒட்டுமொத்தமாக விளையாட்டை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியமான நிறுவனமாக ரெயில்வே மாறியுள்ளது. தற்போது 29 விளையாட்டு பிரிவுகள் ரெயில்வேயில் உள்ளன.  18 தனிநபர் விளையாட்டுகள் மற்றும் 11 குழு விளையாட்டுகள் இவற்றில் அடங்கியுள்ளன. ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் 28 தேசிய …

Read More »

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 67-வது நிறுவன தினத்தையொட்டி மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஜனவரி 02 ) புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமையகத்திற்குச் சென்று, 67-வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஆயத்தப்படுத்துவதன் மூலம் …

Read More »