மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக இருந்ததுடன், அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் முன்னோடியாக இருந்தார். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பு எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக …
Read More »திரு அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளான இன்று, நமது நாட்டிற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களை பதிவிட்டுள்ளேன்: பிரதமர்
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி தாம் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது: “இன்று, அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளில், நமது தேசத்திற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன்.” भारत …
Read More »‘வீர பாலகர் தினம்’ – 2024 டிசம்பர் 26-ல் கொண்டாடப்படுகிறது
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2024 டிசம்பர் 26 அன்று வீர பாலகர் தினத்தைக்கொண்டாட இருப்பதோடு பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுகளை வழங்க உள்ளது. கலை, கலாச்சாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. இந்த ஆண்டு 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் …
Read More »10,000-க்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லி, பூசாவில் உள்ள ஐசிஏஆர் மாநாட்டு மையத்தில் 2024 டிசம்பர் 25, அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிதாக நிறுவப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள், ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை திரு அமித் ஷா வழங்குவார். இந்த நிதிக் கருவிகள் பஞ்சாயத்துகள் அளவில் கடன் சேவைகளை எளிதாக அணுகுவதற்கும் நிதி …
Read More »நித்தி ஆயோக்கில் பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் சந்திப்பு
2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார். “உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்” என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக …
Read More »வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இலக்கை நோக்கிய பாதை
“வாழ்வது எளிதான இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அதனை முன்னெடுத்து செல்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ~ பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நிர்வாகம் என்பது, அனைவரையும் பங்கேற்கச் செய்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொறுப்புணர்வுடன், வெளிப்படையான பயனுள்ள, திறன்வாய்ந்த, சமத்துவத்துடன், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுவதாகும் என்று ஐநா சபை குறிப்பிடுகிறது. மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதே சிறப்பான நிர்வாகத்தின் நோக்கமாகும். வளர்ச்சியின் இலக்கு …
Read More »புலனாய்வு அலுவலகத்தின் (உளவுத்துறை -ஐ.பி.) நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று 37 வது புலனாய்வு அலுவலக நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு அலுவலகத்தின் இயக்குநர், புலனாய்வு அலுவலகத்தின் முன்னாள் இயக்குநர்கள், மத்திய காவல் படைகள், மத்திய ஆயுத காவல் படைகளின் தலைமை இயக்குநர்கள், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் …
Read More »‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ -2025 குடியரசு தின அணிவகுப்பின் போது கடமைப்பாதையில் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது
ஆண்டு தோறும் குடியரசு தின கொண்டாட்டத்தின் (ஆர்.டி.சி) ஒரு பகுதியாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள் கடமைப் பாதையில் தங்கள் அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் ‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, இது தொடர்பான பல்வேறு அம்சங்களை முடிவு செய்ய ஒரு ஆலோசனை நடைமுறையை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டது. அலங்கார ஊர்திகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஏப்ரல் மாதம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் …
Read More »உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: திரு சிவராஜ் சிங் சவுகான்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது என்பதை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் …
Read More »முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
Read More »
Matribhumi Samachar Tamil