Thursday, January 15 2026 | 08:42:03 AM
Breaking News

National

நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம்

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலை நிறுவனமான தேசிய இஸ்பாட் நிகம் நிறுவனத்தின் (ஆர்ஐஎன்எல்) மனிதவள மேம்பாட்டு மையத்தில் உள்ள நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்தின் விசாகா சுத்திகரிப்பு நிலையம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆர்ஐஎன்எல்  நிறுவனத்தின் தலைவரும் (கூடுதல் பொறுப்பு)நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் தலைவருமான திரு டோலிக்  ஏ.கே.சக்சேனா  காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.  …

Read More »

குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு: 2023-24

கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்  முடிவு செய்தது. இதன் அடிப்படையில் முதல் கணக்கெடுப்பு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2023  ஜூலை மாதம்  வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-வது கணக்கெடுப்பு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் …

Read More »

இந்தியாவில் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா

நாட்டின் 7,500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைகளில் 204 கலங்கரை விளக்கங்கள் உள்ளன.  வளமான கடல்சார் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமைப்புகளாகவும் அவை செயல்பட்டு வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி கலங்கரை விளக்கங்களின் வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதையும், கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. …

Read More »

2024-ம் ஆண்டில் உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் சாதனைகளும் முன்முயற்சிகளும்

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதிலும் பண்ணை சாரா வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தியில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதிலும் பாதுகாப்பு, பதனப்படுத்துவதற்கான  உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் பண்ணை சாரா  முதலீடுகள் செய்வதிலும் உணவு பதனப்படுத்தும் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன்படி, உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் நாட்டில் உணவு பதனப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைச்சகம் …

Read More »

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை:2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையானது நிதி மேலாண்மை, கொள்கை சீர்திருத்த நடவடிக்கைகள் வாயிலாக நிதி நிர்வாகம், பொது நலன் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது. பொது நிதி மேலாண்மை அமைப்பு  மூலம் நேரடி பணப்பரிமாற்றத்தை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த நடவடிக்கை 2024-25-ம் நிதியாண்டில் 1,206-க்கும் கூடுதலான நலத் திட்டங்களின் பரிவர்த்தனைகளில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 181.64 கோடி  பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் ரூ.2.23 லட்சம் …

Read More »

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

2024-ம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் முன்முயற்சிகள், சாதனைகள்  குறித்த புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படும் ‘உலக சுற்றுச்சூழல் தினத்தை’ முன்னிட்டு, “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” நடும் இயக்கம் 2024-ம் ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. தாயின் மீதான அன்பு, மரியாதையின் அடையாளமாகவும், அன்னை பூமியைப் பாதுகாக்கவும் மரக்கன்றுகளை நடுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். 2025-ம் ஆண்டு மார்ச் …

Read More »

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள் (பகுதி-1)

2024-ஆம் ஆண்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளை வழிநடத்தியதுடன்  செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தியது. இந்த முயற்சிகள் தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதையும், புதுமைகளை மேம்படுத்துவதையும், உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் குறைக்கடத்தி உற்பத்தி இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி பிரிவை ரூ. 91,526 கோடி முதலீட்டில் அமைப்பதற்கான டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் …

Read More »

பாதுகாப்பு அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவை வலுவான, பாதுகாப்பான, தற்சார்பான, வளமான தேசமாக மாற்ற பாதுகாப்பு அமைச்சகம்  பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக திரு ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரது தலைமையின் கீழ், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் சில பகுதிகளில் யதார்த்த நிலையை மீட்டெடுக்க ஒத்த கருத்தை …

Read More »

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தனது விலை கண்காணிப்பு பிரிவு மூலம் 38 உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறது .பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றின்  சில்லறை விற்பனை மூலம்  நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அன்றாட விலைகளை  கண்காணித்து பொருட்களின் விலையை நிலையானதாக  இருக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 22 அத்தியாவசியப் பொருட்களின்  அன்றாட சில்லறை மற்றும் மொத்த …

Read More »

உலகின் மிகப்பெரிய தேர்தலின் விரிவான தரவுத் தொகுப்புகளின் வெளியீடு

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான 42 புள்ளிவிவர அறிக்கைகளையும், 2024-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலின் 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் அடித்தளமாக விளங்கும் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.  அதிகபட்ச தகவல்களை வெளிப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, தேர்தல் தொடர்பான தரவுகளை அணுகுதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய ஆணையத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் …

Read More »