Tuesday, January 27 2026 | 03:12:31 AM
Breaking News

National

வானிலை முறைகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள்

நாடு முழுவதும் பருவநிலை மாற்றத்தை அரசு கவனத்தில் கொண்டு, அதன் தாக்கத்தை மதிப்பிடவும், குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பன்முக அணுகுமுறையானது நாட்டின் வானிலை முறைகளில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் சாத்தியமான தாக்கங்களை தணிவிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம்: இது 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்யும் அதே நேரத்தில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. …

Read More »

நாடாளுமன்றக் கேள்வி: நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடுகளின் தேவை

இந்திய வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் நிலநடுக்கங்களில் ஒன்றான 1905 ஆம் ஆண்டின் காங்க்ரா நிலநடுக்கமானது இமாச்சலப் பிரதேசம் உட்பட இமயமலைப் பகுதியில் ஏற்படும் நில அதிர்வுப் பேரிடர்களை நினைவூட்டுகிறது.  நிலநடுக்கம் என்ற பேரிடர் பரவலான பேரழிவு, உயிர் இழப்பு உட்பட பல்வேறு  தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில்,  மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், பேரிடர் மேலாண்மை உத்திகள், பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் முன்னெச்சரிக்கையுடன் கூடிய தயார் நிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் …

Read More »

அதிநவீன கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உயர்நிலை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுமாறு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற உயர்நிலை தொழில்நுட்பங்களில், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப ஆழமான திறனைப் பெற வேண்டும். உயர்நிலையிலான அதி நவீன கண்டுபிடிப்புகளில்இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இதனை அவர்கள் மேற்கொள் வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். டிசம்பர் 19 அன்று தில்லி ஐஐடியில் இந்திய தேசிய பொறியியல் அகாடமியின் ஆண்டு மாநாட்டின் தொடக்க …

Read More »

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கம்

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கில்  பங்கேற்பதற்காக  மத்திய விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்த விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை, ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் வரவேற்றார். அவருக்கு இந்திய விமானப்படையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  இந்த கருத்தரங்கம் டிசம்பர் 18 இல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதில்இந்திய விமானப்படையின் …

Read More »

புராதன கலாச்சார பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்தல்

இந்திய தொல்லியல் சர்வே நாடு முழுவதும் 3698 மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்திய தொல்லியல் துறை அலுவலர்களால் நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தேவை மற்றும் கிடைக்கும் இடங்களுக்கேற்ப நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி விவரம் வருமாறு:                                               (தொகை ரூபாய் கோடிகளில்) வ.எண் ஆண்டு ஒதுக்கீடு செலவினம் 1. 2019-20 435.61 435.39 2. 2020-21 260.90 260.83 3. 2021-22 270.00 269.57 4. 2022-23 392.71 391.93 5. 2023-24 443.53 443.53 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை அழிப்பவர்கள், அகற்றுபவர்கள், மாற்றுபவர்கள், சிதைப்பவர்கள், ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »

பிரதமரின் கதிசக்தி திட்டத்தின்கீழ் முக்கிய ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மதிப்பீடு

உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 85 வது கூட்டத்தில் பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் ஐந்து திட்டங்கள் (2 ரயில்வே, நெடுஞ்சாலை மேம்பாட்டின் 3 திட்டங்கள்) மதிப்பீடு செய்யப்பட்டன.  பல்முனை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த  ஒருங்கிணைந்த மேம்பாடு, கடைக்கோடி பகுதிக்கும் இணைப்பு , பல்வகை வாகன முனையங்களுக்கிடையில் இணைப்பு ஆகிய குறிக்கோள்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த திட்டங்கள் மூலம் பயண நேரங்களைக் குறைக்கவும், போக்குவரத்து வசதியை அதிகரிப்பதன் மூலமும் …

Read More »

தேசிய ஆயுஷ் இயக்கத்தில் சித்த மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா

பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் 8 வது சித்த தினம் 19 டிசம்பர் 2024 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு …

Read More »

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாவிட்டால், அது பொருத்தமற்றதாக மாறிவிடும்: குடியரசு துணைத்தலைவர்

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லாவிட்டால் அவை நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக இருக்கும்  என்று  குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மக்கள் பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும்  ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்க உதவிடும் என்றும் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம்  ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்  என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய வனப்பணி பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு. தன்கர், வளர்ச்சி, சுற்றுச்சூழல் விவகாரங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். “தேசிய பாதுகாப்பு மற்றும்  நாட்டின் மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். …

Read More »

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது. இச்சங்கங்கள் பல மாநில கூட்டுறவு சங்க சட்டம், 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினராவதற்கு தகுதியுடையவையாகும். அதன் விவரம் வருமாறு: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட், கிரிஷக் பாரதி …

Read More »

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகிக்க அனுமதி

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பிஏசிஎஸ்) செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அதன் மூலம் அவற்றை நிதி ரீதியாக வலுவாகவும், நிலையானதாகவும் ஆக்குவதற்காக, அவை சமையல் எரிவாயு டீவர்ஷிப் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து பிஏசிஎஸ்-ஐ சமையல் எரிவாயு விநியோகஸ்தராக தகுதி பெறச் செய்துள்ளது. விரிவான அடிமட்ட கட்டமைப்புடன், கிராமப்புற சமூகங்களிடையே நம்பிக்கையுடன் செயல்படும் பிஏசிஎஸ், தொலைதூரப் பகுதிகளில் எல்பிஜி விநியோகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நன்கு …

Read More »