Wednesday, June 24 2026 | 01:27:53 AM
Breaking News

National

ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை 2020-21-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு மொத்தம் ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. மத்திய மீன்வளத்துறை பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், இதர செயலாக்க முகமைகளின் ரூ.20864.29 கோடி மதிப்பீட்டிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் …

Read More »

2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் தலைமைச் செயலாளர்கள் மாநாடு உந்தப்படுகிறது. …

Read More »

காணாமல் போன இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்

இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் (2013 ஆம் ஆண்டின் 18) 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை தனது கள அலுவலகங்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் போது, இந்திய தொல்லியல் துறையின் கள அலுவலகங்கள், விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஏற்படும் அழுத்தங்கள் நினைவுச்சின்னங்களைப் பாதிக்கும் காரணியாக …

Read More »

தேசிய சமஸ்கிருத திருவிழா

நாட்டின் இளைஞர்களிடையே தொன்மையான  கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மத்திய  கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மண்டல கலாச்சார மையங்கள் வாயிலாக தேசிய சமஸ்கிருத திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். இதுவரை, 14 தேசிய சமஸ்கிருத திருவிழாவும், 04 மண்டல அளவிலான விழாக்களும் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்பட்டன. 1890 ஆம் ஆண்டு …

Read More »

கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள் சிறப்பு பிரச்சாரம் 4.0 இல் பங்கேற்றன

மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் 43 அமைப்புகள், சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்று, அரசு அலுவலகங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கும் பொது மக்களின் பணி சார்ந்த அனுபவங்களை  மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் / புதுமையான கழிவு மேலாண்மை, பொது விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டன. இதில் பதிவேடுகள் மேலாண்மை குறித்த பயிற்சி, துறை ஆவண அறை ஆய்வு, கண்காட்சிகள், தெருக்கூத்து, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று வளர்ப்போம் இயக்கம், பயிலரங்குகள், பயன்பாட்டில் இல்லாத இடங்களை …

Read More »

புராதனத் தலங்களை பாதுகாப்பதில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு

பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து  கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம், 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிதியத்தின் அனைத்து செயல் திட்டங்களும் திட்ட அமலாக்க குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய கலாச்சார நிதியத்திற்கு வழங்கப்படும்  நன்கொடைகள் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு அல்லது அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக …

Read More »

பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் தடைசெய்யப்பட்ட / ஒழுங்குபடுத்தப்பட்ட எல்லைகளை மறுவரையறை செய்தல்

நாட்டில் 3,696 புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் சிறப்பு  வாய்ந்த இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையால்  நடத்தப்பட்ட செயல்திறன் தணிக்கை மற்றும் தொடர் கணக்கெடுப்பின் பணிகளின் போது, 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்  மற்றும் பழம்பெருமை வாய்ந்த தலங்கள், சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. தடைசெய்யப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் புகார் தெரிவித்தால் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் …

Read More »

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தோடு தொடர்புடையவர்களுக்கு சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடத்துகிறது

வழக்கு பதிவு செய்வதற்கு முந்தைய நிலையிலேயே குறைகள் தீர்த்துவைக்கப்படுவதை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளில், நுகர்வோர் விவகாரங்கள் துறை  இந்த ஆண்டு தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டம் என்பது தேசிய நுகர்வோர் உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான சிறப்பு திறன் மேம்பாட்டு முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.  நுகர்வோர் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் …

Read More »

மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சஞ்சார் சாத்தி இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மோசடியான  தகவல் தொடர்புகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மொபைல் இணைப்புகள், கைபேசிகள், குறுந்தகவல்களை அனுப்புவர்கள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மீது தொலைத் தொடர்புத் …

Read More »

நாட்டில் போலியான தொலைபேசி அழைப்புகள்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) விதிமுறைகள், அதாவது தொலைத் தொடர்பு வர்த்தகத் தகவல் தொடர்பு நுகர்வோர் விருப்ப விதிமுறைகள், 2018 (டி.சி.சி.சி.பி.ஆர் -2018) ஆகிய சட்டங்களில் போலியான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் குறித்த புகார்களை கையாள்கிறது. இந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான பல்வேறு  வழிகாட்டுதல் நெறிமுறைகள்  பின்பற்றப்பட்டு வருகின்றன. தொலைத்தொடர்பு சந்தாதாரர் அனைத்து வர்த்தக தகவல் தொடர்புகளையும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யயவும் வேண்டாத அழைப்புகளை தடுக்கவோ வகை  …

Read More »