பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வழங்குகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 2016-ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்துள்ளது, அது 2019-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு திருத்தப்பட்டது. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் அனைத்து கட்டங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கு ஒரு கட்டமைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது. இது நாட்டின் பேரிடர் நெகிழ்திறன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திசார்ந்த கருவியாகும். 2015-க்குப் பிந்தைய மூன்று முக்கிய உலகளாவிய கட்டமைப்புகளான பேரிடர் அபாயக் குறைப்புக்கான …
Read More »இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள, மத்திய அரசு 2015-ம் ஆண்டில் ‘இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்துக்கு’ ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்திகளுக்கு வழிவகுக்கிறது. · இக்கொள்கையின் உறுதியான அமலாக்கத்தின் விளைவாக தொடர்ந்து வன்முறை குறைந்துள்ளது. 2010-ல் இடதுசாரி தீவிரவாதம் வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 73% குறைந்துள்ளது. இதன் …
Read More »புதிய குற்றவியல் சட்டங்கள்
பாரதிய நியாயச் சட்டம், 2023-ன் விதிகளில் பிரிவு 106 துணைப்பிரிவு (2), பாரதிய நகரிகா சுரக்ஷா சன்ஹிதா 2023 சட்டத்தின் முதல் அட்டவணை, பாரதிய சாட்சியங்கள் சட்டம் 2023 ஆகியவை 2023 டிசம்பர், 25 அன்று அறிவிக்கப்பட்டு, 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன, பாரதிய நியாயச் சட்டத்தில் முதல்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விதிகள் ஒரே பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு …
Read More »இணையதள கைது மோசடி
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி ‘காவல்துறை’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநில அரசின் வரம்பின் கீழ் வருகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் சைபர் குற்றம் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது போன்றவை முதன்மை பொறுப்பாகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள் வழங்குவதுடன் பல்வேறு திட்டங்களின் கீழ் …
Read More »இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இயக்கம் : ரூ.3431 கோடி மீட்பு
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களின் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் இணையதள குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது மற்றும் வழக்குத் தொடர்வது ஆகிய முதன்மையான பொறுப்புகளைக் கொண்டுள்ளன. இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் சட்ட அமலாக்கத் திறன்களை விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகள் உள்ளிட்ட கணினி குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை வலுப்படுத்த, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும்: நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான இணையதள குற்றங்களையும் …
Read More »தேசிய தரநிலை உத்தரவாத தகுதிநிலைகள் குறித்த அண்மைத் தகவல்
பொது சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தை உறுதி செய்யவும், மேம்படுத்தவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட விரிவான கட்டமைப்பான தேசிய தரநிலை உத்தரவாத தகுதி நிலைகளை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. பொது சுகாதார வசதிகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் பாதுகாப்பானதாகவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மையமாகக் கொண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சுகாதாரச் சேவைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு தரநிலை நெறிமுறைகள் வரையறைக்கப்பட்டன. இதைத் …
Read More »இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களின் விவரங்கள்
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)-ன் படி இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதமானது சாதனை அளவை எட்டியுள்ளது. இந்த இலக்கானது இந்திய மக்கள் தொகை கொள்கை-2000 மற்றும் தேசிய சுகாதார கொள்கை-2017 (டி.எஃப்.ஆர் 2.1) ஆகியவற்றுடன் ஒத்திசைவானதாக உள்ளது. குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: ஆணுறைகள், ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள், அவசர கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட கருத்தடை …
Read More »நாட்டில் 25 மாநிலங்களில் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
உணவு பதனப்படுத்துதல் துறையில் மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் …
Read More »கலாச்சார படவரைவு தேசிய இயக்கமும் அதற்கான செயல்திட்டமும்
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தோங்ஜாவோ கிராமம் ‘மட்பாண்டங்களின் நிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே, உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற தலைசிறந்த கைவினைக் கலைஞரான நீலமணி தேவியின் மரபு, இந்த பண்டைய கலையைப் பாதுகாக்க தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. நீலமணியின் திறமைகள் அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததுடன், கிராமத்தின் மண்பாண்ட தொழிலுக்கான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கியப் பங்கும் ஆற்றியுள்ளது. கிராமப்புறங்களில் வீடுகளில் உபயோகிக்கும் பானைகள் முதல், கலைநயம் மிக்க படைப்புகள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் அவர்கள் …
Read More »திரு எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு எஸ். எம். கிருஷ்ணா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதல்வராக இருந்த காலத்தில், குறிப்பாக உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் ஒரு சிறந்த வாசகராகவும் சிந்தனையாளராகவும் இருந்தார். “திரு எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களுடன் கலந்துரையாட பல ஆண்டுகளில் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
Read More »
Matribhumi Samachar Tamil