பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய இந்திய ரயில்வே பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சதீஷ் குமார், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது வருகை தரும் யாத்ரீகர்களுக்கு இடமளிக்க ரயில்வே விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய …
Read More »டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2025 ஜனவரி 29-30 தேதிகளில் புதுதில்லியில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜேயும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். …
Read More »மஹா கும்பமேளா 2025: மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் பாதுகாப்பு, வசதிக்காக மேளா நிர்வாகம், காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள்
மஹா கும்பமேளா 2025-ல் மவுனி அமாவாசையின் புனித தருணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவார்கள். அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில், மேளா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவசர காலங்களில், பக்தர்களுக்கு உதவ மேளா நிர்வாகம், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து மஹாகும்பமேளா நகர் காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் …
Read More »ஜம்மு-காஷ்மீரில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பிராந்தியத்தில் புத்தொழில்களுக்கான ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜம்மு காஷ்மீர் கனெக்ட்” என்ற சிறப்பு புத்தொழில் மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சந்தை இணைப்புகள், நிதி நெட்வொர்க்குகள் மற்றும் சர்வதேச விரிவாக்க …
Read More »ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சென்னையில் “ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்துறை பாதுகாப்பு” குறித்த 4-வது பயிற்சி திட்டத்தை நடத்துகிறது
மத்திய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் துறையால் “ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு” என்ற தலைப்பில் 4-வது பயிற்சி திட்டம் 2025 ஜனவரி 23-24 தேதிகளில் சென்னையில் பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐபிடி) நடத்தப்பட்டது. இது மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) மையமாகும். இது ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் பெரும் விபத்து ஏற்படக்கூடிய …
Read More »புவனேஸ்வரில் ‘உத்கர்ஷ் ஒடிசா’ – மேக் இன் ஒடிசா மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் “செழிப்பான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள்” (உத்கர்ஷ் ஒடிசா – மேக் இன் ஒடிசா) மாநாடு 2025 மற்றும் ஒடிசாவில் தயாரியுங்கள் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், 2025 ஜனவரி மாதத்தில் ஒடிசாவுக்கு தாம் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது என்று கூறியதுடன், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2025 நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க தாம் வருகை புரிந்ததை நினைவுகூர்ந்தார். …
Read More »மஹா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் அரங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா – 2025-ல் பார்வையாளர்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் 15 வரை ஓர் அரங்கை அமைத்திருந்தது. நீடித்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த அரங்கு காட்சிப்படுத்தியது. மெய்நிகர் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சைக்கிள் ஓட்டுதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செல்ஃபி போன்ற நவீன தொழில்நுட்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இந்த அரங்கிற்கு வருகை புரிந்தவர்களுக்கு கிடைத்தது. இந்த அரங்கிற்கு வருகைபுரிந்தவர்கள் …
Read More »ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை(ஜனவரி 28) பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஜனவரி 28) ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் செழிப்பான ஒடிசா – ஒடிசாவில் உற்பத்தி செய்வோம் மாநாடு 2025-ஐ அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குச் செல்லும் அவர், மாலை 6 மணியளவில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார். ஒடிசா அரசால் நடத்தப்படும் இந்த முதன்மையான …
Read More »தேவபூமியான உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது நல்ல அறிகுறி ஆகும் – குடியரசு துணைத்தலைவர்
உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், இன்றைய நாள் புனிதமானது என்று கூறினார். மாநிலங்களவை உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவர் தலைமை தாங்கினார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான இணைய தளத்தையும் குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார். மாநிலங்களவை …
Read More »“புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” – இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்றது
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில் இன்று (24.01.2025) “புதிதாக பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை” நடத்தியது. பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் மீனாட்சி கணேசன், உரிமைதாரர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும் தரத்தைப் பேணுவது குறித்தும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும் அதைத் தொடர்ந்து அறிமுக தொகுப்பு (Welcome Kit) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உரிமம் பெற்றவர்கள் மற்ற புதிய உரிமம் பெற்றவர்களுடனும், பிஐஎஸ் அதிகாரிகளுடனும் தகவல் பரிமாற்ற வாய்ப்பையும் …
Read More »
Matribhumi Samachar Tamil