ராய்காட் கோட்டை 1909 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் அதிகார வரம்பின் கீழ் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னமாக உள்ளது. இந்திய தொல்லியல் துறை மற்றும் ராய்காட் மேம்பாட்டு ஆணையம் இடையே 2017-ம் ஆண்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ராய்காட் கோட்டையின் சுற்றுப்பகுதியில் மேம்பாடு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை 1980-ம் ஆண்டு முதல் ராய்காட் கோட்டையின் பல்வேறு பகுதிகளில் பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ராய்காட் கோட்டைக்குள் மகா தர்வாசா, சிம்மாசனா, நாகர்கானா, ஜகதேஷ்வர் கோயில், பஜார்பேட்டை, ஹதி டேங்க் சுவர்கள், பால்கி தர்வாசா, மீனா தர்வாசா, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சமாதி பகுதி மற்றும் அஷ்டபிரதன்வாடா போன்ற பல்வேறு கட்டமைப்புகளின் பாதுகாப்பு இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை, கழிவறை பிரிவு, குடிநீர், இருக்கைகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் கலாச்சார அறிவிப்பு பலகைகள் போன்ற பல்வேறு வசதிகளும் இந்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்டுள்ளன. ராய்காட் கோட்டையைப் பாதுகாப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் இது கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் துணிச்சல், மன உறுதி நினைவு கூரப்படும் :பிரதமர்
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சல் மற்றும் மன உறுதியை நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: இன்று, கோவா விடுதலையான தினம். இத்தினத்தில், விடுதலைக்காக தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சலையும் மன உறுதியையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் வீரம் கோவாவின் முன்னேற்றத்திற்காகவும், மாநில மக்களின் வளமைக்காகவும் தொடர்ந்து பணியாற்ற எங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
Read More »மாநிலங்களவை உறுப்பினர் திரு சரத் பவார் விவசாயிகள் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தார்
மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார் @PawarSpeaks”
Read More »அந்தமான் நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும்: பிரதமர்
அந்தமான், நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். தங்களின் வேர்களோடு இணைந்திருக்கும் நாடுகள், வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறிச் செல்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஷிவ் அரூரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: “அந்தமான், …
Read More »வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலீடு செய்யுமாறு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா வேண்டுகோள்
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், மும்பையில் வடகிழக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சாலைப் பேரணியை நடத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு வருட கால தொடர் சாலைப் பேரணிகளைத் தொடர்ந்து, மும்பையில் நடந்த இந்த சாலைப் பேரணியானது இந்தியாவின் பொருளாதார மையத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, திரிபுரா முதல்வர் பேராசிரியர் …
Read More »ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ஓராண்டு முடிவில் முன்னேற்றம்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட “ஓராண்டு முடிவில் முன்னேற்றம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் …
Read More »சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் – அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத்
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 73.13 கோடி ரூபாய் செலவில், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், ஸ்வதேஷ் தர்ஷன் -2.0 திட்டத்தின் துணைத் திட்டமான ‘சவால் அடிப்படையிலான பகுதிகளின் வளர்ச்சி’ திட்டத்தின் கீழ், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேஸ்வரம் தீவு உள்ளிட்ட 42 இடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு …
Read More »சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் தியாகிகளுக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா மரியாதை செலுத்தினார்
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நக்சலைட்டுகளை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று மரியாதை செலுத்தினார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரையும், அவர் சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நக்சல் தீவிரவாதத்திற்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் மிக உயர்ந்த தியாகம் செய்த 1,399 தியாகிகளை கௌரவிக்கும் …
Read More »ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், 9 மத்திய அரசு திட்டங்கள் …
Read More »ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் குடியரசுத் தலைவர் டிசம்பர் 17 முதல் 21 வரை பயணம் மேற்கொள்கிறார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024 டிசம்பர் 17 முதல் 21 வரை ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் பயணம் மேற்கொள்கிறார் . இந்த பயணத்தின்போது, செகந்திராபாத்தில் உள்ள போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் தங்குகிறார். டிசம்பர் 17 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். டிசம்பர் 18 அன்று, செகந்திராபாத்தின் போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார் . டிசம்பர் 20 அன்று, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு குடியரசுத் தலைவரின் கொடிகளை குடியரசுத் தலைவர் வழங்குவார். அன்று மாலை குடியரசுத் தலைவர் நிலையத்தில் மாநிலத்தின் பிரமுகர்கள், முக்கிய நபர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு வரவேற்பு …
Read More »
Matribhumi Samachar Tamil