Wednesday, March 04 2026 | 11:56:18 PM
Breaking News

Regional

தெலுங்கு கங்கைக் கால்வாயைப் புத்துயிர் பெறச் செய்து, சென்னைக்கு குடிநீர் கிடைக்கச் செய்ததில் ஸ்ரீ சத்ய சாய்பாபா முக்கியப் பங்காற்றினார் : குடியரசுத் துணைத்தலைவர்

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (23.11.2025) கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சத்ய சாய் பாபாவை கடவுளின் சிறந்த தூதர் என்றும் அமைதி, அன்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளம் என்றும் கூறினார். அவரது போதனைகள் சாதி, மதம், வர்க்கம் என அனைத்து தடைகளையும் தாண்டியது என்று குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் என்பதே பாபாவின் கொள்கை என்று அவர் கூறினார். திருவள்ளுவரின் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டிய, குடியரசுத் துணைத்தலைவர், ஸ்ரீ சத்ய சாய்பாபா, தமது முழு வாழ்க்கையையும் மனிதகுலத்தை நேசிப்பதற்கும் சேவை செய்வதற்கும் அர்ப்பணித்து காலத்தால் அழியாத நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். உண்மை, நீதி, அமைதி, அன்பு, அகிம்சை ஆகியவற்றில் வேரூன்றிய பாபாவின் போதனைகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், சிறந்த, முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு இந்த மதிப்புகள் அவசியமானவை என்று கூறினார். முரண்பாட்டை நல்லிணக்கத்தாலும், சுயநலத்தை தியாகத்தாலும் மாற்ற வேண்டும் என்ற பாபாவின் அறிவுரையை அவர் சுட்டிக் காட்டினார். ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த அவர், சுகாதாரம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றில் அதன் விரிவான முயற்சிகளைப் பாராட்டினார். தொலைதூர சமூகங்களுக்கு முக்கியமான உயிர்நாடியாக இந்த அறக்கட்டளையின் நடமாடும் கிராமப்புற சுகாதார சேவைகள் உள்ளன என்று அவர் பாராட்டினார். உலகத்தரம் வாய்ந்த, கல்வியை கட்டணமில்லாமல் வழங்குவதற்காக அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்களையும் அவர் பாராட்டினார்.  சென்னைக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தெலுங்கு கங்கை கால்வாயை புத்துயிர் பெறச் செய்த ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் முக்கிய பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். இது தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய சிறந்த சேவை என்று அவர் குறிப்பிட்டார். பாபாவின் அனைத்து பக்தர்களும் மக்களும் அவரது மரபை, தங்கள் செயல்பாடுகள் மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதா கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் குடியரசுத் துணைக்தலைவர் கண்டுகளித்தார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, திரிபுரா ஆளுநர் திரு என். இந்திரசேனா ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் திரு ஏ. ரேவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேச அரசின் மின்னணுவியல் துறை அமைச்சர் திரு நாரா லோகேஷ், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு சேகர் பாபு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு ஆர்.ஜே. ரத்னாகர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More »

காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது

தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின்   நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து அதிகரிக்கிறது, இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை …

Read More »

பிராந்திய டிஜிட்டல் சுகாதார உச்சிமாநாடு 2025-ல், பரிமாற்றத்தக்க, தரநிலைகள் சார்ந்த சுகாதாரச் சூழல் அமைப்புகளுடன் முன்னெடுத்துச் செல்ல நாடுகள் முடிவு

புதுதில்லியில் நடைபெற்ற பிராந்திய  திறந்தநிலை டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாடு  2025-ன் இரண்டாம் நாளில், தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதிலுமிருந்து வந்த சுகாதாரத்துறை பிரதிநிதிகள் வெளிப்படையான  தரநிலைகள் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மூல தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய, அளவிடக்கூடிய டிஜிட்டல் சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவது பற்றிய செயல்விளக்கங்களை செய்து காட்டினர். இதனைத் தொடர்ந்து, விரிவான  தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு …

Read More »

சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

சத்தீஷ்கர் மாநில  அரசின் சார்பில் அம்பிகாபூரில் இன்று (20.11.2025) நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்களித்துள்ள பழங்குடியினர் சமுதாயம் குறித்த அத்தியாயம் இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். பஸ்தரில் நடத்தப்பட்ட மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் அவர்களது தொன்மையான கலாச்சாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந:துள்ளது என்று கூறினார். பழங்குடியினரின் பாரம்பரியம், …

Read More »

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ல் விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-இல் கலந்துகொண்டபோது,  பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பாராட்டிய திரு மோடி, வாழைப்பழ கழிவுகளின் பயன்பாடு பற்றி கேட்டறிந்தார். மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வாழைப்பழ கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என்று விவசாயி விளக்கம் அளித்தார். இத்தகைய தயாரிப்புகள் இந்தியா முழுவதும் இணையம் வழியாக விற்பனை செய்யப்படுவதை விவசாயி உறுதிப்படுத்தினார். …

Read More »

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம்

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இன்று (20.11.2025) மாலை 3 மணி வரை 6,11,61,947 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக …

Read More »

குடியரசுத் தலைவர் நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி, செக்கந்தராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய …

Read More »

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் …

Read More »

பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ஓம்கார் மண்டபத்தில் அவர் வழிபாடு செய்தார். இந்த இடம் எல்லையற்ற கருணை மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ஸ்ரீசத்ய …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம்

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் …

Read More »