Thursday, March 12 2026 | 12:46:16 AM
Breaking News

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் : 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்

2024-ம் ஆண்டில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின்  (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் மத்திய சாலை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (சிஆர்ஆர்ஐ) உள்நாட்டு சாலை கட்டுமான தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி உருவாக்கியுள்ள  மிகக் குறைந்த வெப்பநிலைக்கான அதிக உயரத்தில் உள்ள பிட்மினஸ் சாலைகளை  எல்லைப்புறச் சாலைக் கழகம் (பி.ஆர்.ஓ) வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது. லடாக் டிராஸில் உள்ள டிராஸ்-உம்பாலா-சங்கூ சாலையில் அதிக உயர பிட்டுமினஸ் சாலைகளை …

Read More »

2024-ம் ஆண்டில் உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் சாதனைகளும் முன்முயற்சிகளும்

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதிலும் பண்ணை சாரா வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தியில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதிலும் பாதுகாப்பு, பதனப்படுத்துவதற்கான  உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் பண்ணை சாரா  முதலீடுகள் செய்வதிலும் உணவு பதனப்படுத்தும் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன்படி, உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் நாட்டில் உணவு பதனப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைச்சகம் …

Read More »

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை:2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையானது நிதி மேலாண்மை, கொள்கை சீர்திருத்த நடவடிக்கைகள் வாயிலாக நிதி நிர்வாகம், பொது நலன் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது. பொது நிதி மேலாண்மை அமைப்பு  மூலம் நேரடி பணப்பரிமாற்றத்தை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த நடவடிக்கை 2024-25-ம் நிதியாண்டில் 1,206-க்கும் கூடுதலான நலத் திட்டங்களின் பரிவர்த்தனைகளில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 181.64 கோடி  பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் ரூ.2.23 லட்சம் …

Read More »

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

2024-ம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் முன்முயற்சிகள், சாதனைகள்  குறித்த புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படும் ‘உலக சுற்றுச்சூழல் தினத்தை’ முன்னிட்டு, “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” நடும் இயக்கம் 2024-ம் ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. தாயின் மீதான அன்பு, மரியாதையின் அடையாளமாகவும், அன்னை பூமியைப் பாதுகாக்கவும் மரக்கன்றுகளை நடுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். 2025-ம் ஆண்டு மார்ச் …

Read More »

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள் (பகுதி-1)

2024-ஆம் ஆண்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளை வழிநடத்தியதுடன்  செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தியது. இந்த முயற்சிகள் தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதையும், புதுமைகளை மேம்படுத்துவதையும், உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் குறைக்கடத்தி உற்பத்தி இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி பிரிவை ரூ. 91,526 கோடி முதலீட்டில் அமைப்பதற்கான டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் …

Read More »

இந்திய தர கவுன்சிலின் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவராக டாக்டர் சந்தீப் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்

புகழ்பெற்ற மருத்துவ நிபுணரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட  தலைவருமான டாக்டர் சந்தீப் ஷா, இந்திய தர கவுன்சிலின் அங்கமான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோதனை மற்றும் அளவுத்திருத்த சேவைகளின் தரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நம்பிக்கையை  இது உறுதி செய்கிறது. அகமதாபாதின் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் எம்.டி …

Read More »

மீனாட்சி நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமை ஒப்படைப்பு ஆணையை நிலக்கரி அமைச்சகம் வழங்கியது

நிலக்கரி அமைச்சகத்தின் நியமன ஆணையம், மீனாட்சி நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமை ஒப்படைப்பு ஆணை ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு இன்று வழங்கியது. இது நவம்பர் 22, 2024 அன்று நிலக்கரி சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானதன் தொடர்ச்சியாகும். மீனாட்சி நிலக்கரி சுரங்கம் அதன் உச்ச மதிப்பிடப்பட்ட திறன்   அடிப்படையில் ரூ.1,152.84 கோடி ஆண்டு வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,800 கோடி மூலதன முதலீட்டுடன், இந்தச் சுரங்கம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியைக் …

Read More »

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் தமிழாக்கம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் மறைவு எங்கள் இதயங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அவரது மறைவு ஒரு தேசமாக எமக்கு மிகப்பெரிய இழப்பாகும். பிரிவினையின் போது இவ்வளவு இழந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த பிறகு பாரதத்திற்கு வருவது சாதாரண சாதனை அல்ல. கஷ்டங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி பெரிய உயரங்களை எவ்வாறு அடைவது என்பதற்கு எதிர்கால சந்ததியினருக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது. கனிவான …

Read More »

ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற  ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது. இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் …

Read More »

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேரிட்ட சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட …

Read More »