Friday, December 26 2025 | 09:40:18 PM
Breaking News

நேபாள ராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் இந்திய பயணத்தின் வெற்றிகரமான முடிவு

2024 டிசம்பர் 11 முதல் 14 வரை நேபாள ராணுவத் தளபதி  சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் இந்தியாவுக்கு வருகை தந்தது, நேபாள ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இரு தரப்பிலும் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான முக்கிய ஈடுபாடுகளைக் கண்ட இந்தப் பயணம், பாதுகாப்பு நலன்களின் பகுதிகளில் மேம்பட்ட இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமது பயணத்தின் போது, ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், இந்திய ராணுவத்தின் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியுடன் தொடர்ச்சியான பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, ஆழப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல் உள்ளிட்ட பலருடன் அவர் பேச்சு நடத்தினார். ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் வருகை இந்திய மற்றும் நேபாள ராணுவங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதில் ஒரு மகத்தான வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள், இரு ராணுவங்களுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய பிணைப்பை வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

Read More »

3 வது சிஐஎல் சிஎஸ்ஆர் மாநாடு கொல்கத்தாவில் தொடங்கியது

இந்தியாவின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு சட்டம் மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிறுவனமயமாக்கலின் பத்தாண்டுகளைக் கொண்டாடும் வகையில், 3-வது சிஐஎல் சிஎஸ்ஆர் மாநாடு கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மேற்கு வங்க ஆளுநரும், நிகழ்ச்சியின் தலைமை விருந்தினருமான டாக்டர் சி.வி.ஆனந்த போஸ், கோல் இந்தியா நிறுவனத்தின் சிஎஸ்ஆர் முன்முயற்சிகளைப் பாராட்டினார். சி.ஐ.எல்-ன் சமூக அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட்ட போஸ், “நாம் ஒரு உருமாறும் சகாப்தத்தில் வாழ்கிறோம், உறவுகளை உருவாக்குவதற்கு அவசியமான எல்லைகளுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார். கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) குடையின் கீழ், சி.ஐ.எல் நிறுவனம் நிறுவனமயமாக்கப்பட்டதிலிருந்து பத்தாண்டுகளில் ரூ.5,579 கோடியை செலவிட்டுள்ளது, இது சட்டப்பூர்வ தேவையை விட 31 சதவீதம் அதிகமாகும். சி.எஸ்.ஆர் செலவினத்தில் நாட்டின் முதல் மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களில் சிஐஎல் உள்ளது. சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்ட சிஎஸ்ஆர்-ன் முதல் ஆண்டான நிதியாண்டு 2015 தொடங்கி, நிதியாண்டு  2024 வரையிலான பத்து ஆண்டு காலத்தில், சிஐஎல் ரூ.4,265 கோடியை செலவிட கட்டாயப்படுத்தப்பட்டது, ஆனால் நிறுவனம் அதை விட ரூ. 1,314 கோடி அதிகமாக இருந்தது. இக்காலகட்டத்தில் ஆண்டு சராசரி சமூக பொறுப்பு செலவு ரூ.558 கோடியாக இருந்தது.  நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளரும், கௌரவ விருந்தினருமான திரு விக்ரம் தேவ் தத் பேசுகையில், சி.எஸ்.ஆர் என்பது கோல் இந்தியா நிறுவனம், அதன் துணை நிறுவனங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம் என்றும், ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் கருப்பொருள் அடிப்படையிலான பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு இருக்கும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு பி.எம்.பிரசாத், சிஐஎல் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்றும், கடந்த பத்தாண்டுகளில் நாடு தழுவிய அளவில் ரூ.5,570 கோடியை பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுக்காக செலவிட்டுள்ளது என்றும் அதில் பெரும்பகுதி சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துகிறது என்றும் கூறினார். சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் கோல் இந்தியா நிறுவனம் கவனம் செலுத்தியிருப்பது, பத்தாண்டின் மொத்த சமூக பொறுப்பு செலவினமான ரூ.5,579 கோடியில், இந்த மூன்று அத்தியாவசியத் துறைகளுக்கும் 71% ரூ.3,978 கோடியாக ஒதுக்கப்பட்டது.  மொத்த ஒதுக்கீட்டில் 50 சதவீதத்திற்கு அருகில் ரூ.2,770 கோடியுடன் சுகாதாரத் துறை முதலிடத்தில் உள்ளது. கல்வி மற்றும் வாழ்வாதாரம் 1,208 கோடி ரூபாய், இது மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்காகும். மீதமுள்ள தொகை கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விளையாட்டு ஊக்குவிப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற பிற துறைகளுக்குப்  பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை மையமாகக் கொண்டு, செயல்பாட்டில் உள்ள எட்டு மாநிலங்களில் 95 சதவீத சிஎஸ்ஆர் நிதி பயன்படுத்தப்பட்டது.

Read More »

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினமான இன்று அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. பட்டேலின் ஆளுமையும், பணியும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு குடிமக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:  “நாட்டின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளில் அவருக்கு மாபெரும் அஞ்சலி. வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதியை அடைவதற்கு அவரது ஆளுமையும் பணியும் நாட்டு மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்’’.

Read More »

காசநோய் இல்லாத பாரதம் பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள்

‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்களை மக்கள் இயக்கமாக  மாற்றி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோயிலிருந்து விடுவிக்க தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று கேட்டுக் கொண்டார். புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் இன்று ‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான நட்பு கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு பிர்லா, காசநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றிக்கு வெகுஜன விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை முக்கியமானவை என்று கூறினார். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளும் காசநோய் இல்லாதவையாக மாற போட்டியிடும் ‘ஆரோக்கியமான போட்டி’ என்ற உணர்வைத் தூண்டினார். உலக சுகாதார அமைப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க உலகளாவிய இலக்கை நிர்ணயித்துள்ளது, ஆனால் பிரதமர் மோடியின் கீழ், இந்தியா 2025 க்குள் காசநோயை ஒழிக்க அதிக லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைவதற்கு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் திரு பிர்லா கூறினார். 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா காசநோய் இல்லாத நாடாக மாறுவதை உறுதி செய்ய உறுதியுடன் பணியாற்றுமாறு அவர்களை திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார். 20 ஓவர் நட்பு கிரிக்கெட் போட்டி முன்னாள் மத்திய அமைச்சரும் இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்த எம்.பி.யுமான திரு அனுராக் சிங் தாக்கூரின் முயற்சியால் இந்தியாவை காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மக்களவை சபாநாயகர் லெவன் அணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார், மாநிலங்களவை தலைவர் லெவன் அணிக்கு திரு கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார். மக்களவை தலைவர் லெவன் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அனுராக் சிங் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Read More »

தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் ஆர்என்ஐஎல் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது

விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் கற்றல், மேம்பாட்டு மையத்தின் டாக்டர் தென்னெட்டி விஸ்வநாதம் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆர்ஐஎன்எல் நிறுவன இயக்குநரும் (திட்டங்கள்), கூடுதல் பொறுப்பு இயக்குநருமான (செயல்பாடுகள்) ஸ்ரீ ஏ.கே.பாக்சி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை திரு ஏ.கே.பாக்சி, ஆர்ஐஎன்எல் ஊழியர்களும் குடும்பத்தினரும் அன்றாட வாழ்க்கையில் ஆற்றல் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று …

Read More »

நாட்டு நலப்பணித் திட்டத்தின் 80வது சுற்றுக்கான அகில

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் , 2024 டிசம்பர் 10 & 11 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் அதன் சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் என்எஸ்எஸ் 80-வது சுற்றுக்கான அகில இந்திய பயிற்சியாளர்களின் பயிலரங்கை ஏற்பாடு செய்தது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திரு கல் சிங் 10 டிசம்பர் 2024 அன்று பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் …

Read More »

விண்வெளி, கடல் மற்றும் இமயமலை வளங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

2047-ம் ஆண்டிற்கான வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, உலகளாவிய உத்திகள் அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என மத்திய அறிவியல் – தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தில்லி பாரத் மண்டபத்தில் முன்னணி ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “இந்திய பொருளாதார மாநாட்டில்” அவர் பங்கேற்றுப் பேசினார். பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பு  இந்தியாவின் விண்வெளி, கடல், …

Read More »

எரிசக்தி சேமிப்பு தொடர்பான தேசிய ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டி கௌரவித்தார்

தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2024-ஐ முன்னிட்டு, புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு எரிசக்தி சேமிப்பின்  முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியதுடன் எரிசக்தி சேமிப்புச் செயல்திறனுக்கான சிறந்த பங்களிப்பைக் கொண்டாடியது. விழாவின் போது, எரிசக்தி சேமிப்பு 2024 குறித்த தேசிய ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களை குடியரசுத் துணைத் தலைவர் கௌரவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளங்களை உகந்த …

Read More »

தில்லியில் குளிர்கால மாதங்களில் காற்றின் தர சூழ்நிலைக்கான நடவடிக்கை

தில்லி-என்.சி.ஆரில் குளிர்கால மாதங்களில் பொதுவாக பாதகமான காற்றின் தர சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், என்.சி.ஆர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்) முழு என்.சி.ஆருக்கும் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை  திருத்தியுள்ளது. GRAP என்பது தில்லியில் சராசரி தர  அளவை அடிப்படையாகக் கொண்ட அவசரகால நடவடிக்கை  பொறிமுறையாகும், இது தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க பல பங்குதாரர்கள், செயல்படுத்தும் முகவர் …

Read More »

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி டிசம்பர் 15 முதல் 18 வரை நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா செல்கிறார். இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவரது இந்தப் பயணத்தின்போது கவனம் செலுத்தப்படும். இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ஜாஃப்ரி ஸ்ஜாம்சோதீன் (ஓய்வு), இந்தோனேசிய ஆயுதப்படைத் தளபதி ஜெனரல் அகஸ் சுபியான்டோ, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி உள்ளிட்ட உயர்மட்ட …

Read More »