15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் “இந்தியா முதலில்” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சி ஆகியவற்றை அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட “இந்தியாவில் தயாரிப்போம்” …
Read More »குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொழில் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவை, தொழில் நகரங்களில் வர்த்தகங்களை மேம்படுத்த சலுகையில் நிலம் ஒதுக்க விருப்பம்: திரு பியூஷ் கோயல்
நாடு முழுவதும் 20 நகரங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலங்களை ஒதுக்க அரசு தயாராக உள்ளது. எம்.எஸ்.எம்.இ.க்கள் பெரிய வணிகங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவையாகும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற அசோசெம்: பாரத் @100 உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தங்கள் சூழல் அமைப்பில் பெரிய தொழில்களை ஆதரிப்பதில் முக்கியமானவையாக …
Read More »இந்தியாவின் அணுமின் நிலையப் பாதுகாப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது: டாக்டர் ஜிதேந்திர சிங்
கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சர்வதேச மேற்பார்வையுடன் இந்தியாவின் அணுமின் நிலையங்கள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று உறுதியளித்தார். கேள்வி நேரத்தின் போது அணுசக்தி பாதுகாப்பு …
Read More »நாடாளுமன்ற கேள்வி: சந்திரயான்
திரு இரண்ணா கடாடி இன்று கேட்ட “சந்திரயான்” தொடர்பான கேள்வி எண் 120 க்கு பதிலளித்த அறிக்கை மாநிலங்களவையில் வைக்கப்பட்டது. இஸ்ரோ மூன்று சந்திரயான் பயணங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மற்றும் சந்திரயான் -3 மிஷன் சந்திரனில் வெற்றிகரமாக பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை விளைவித்தது. 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்தியா தரையிறங்கும் இலக்கை அடைவதற்கான திறனை உருவாக்க தொடர்ச்சியான சந்திரயான் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய …
Read More »நாடாளுமன்ற கேள்வி: ககன்யான் திட்டத்தின் நிலை
ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் விவரம் வருமாறு: மனித ரேட்டட் ஏவு வாகனம்: ஏவு வாகனத்தின் மனித மதிப்பீட்டை நோக்கிய திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரம் உள்ளிட்ட உந்துவிசை அமைப்புகளின் நிலைகளின் தரை சோதனை நிறைவடைந்துள்ளது. பயணிகள் மாட்யூல் எஸ்கேப் சிஸ்டம்: ஐந்து வகையான பயணிகள் எஸ்கேப் சிஸ்டம் சாலிட் மோட்டார்களின் வடிவமைப்பு மற்றும் உணர்தல் முடிந்தது. அனைத்து ஐந்து வகையான திட மோட்டார்களின் நிலையான சோதனை முடிந்தது. பயணிகள் …
Read More »2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது: “நமது ஹாக்கி சாம்பியன்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! ஜூனியர் ஆசிய கோப்பை 2024 பட்டத்தை நமது ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணி வென்றது, இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். வீரர்களின் நிகரற்ற திறமை, அசைக்க முடியாத மன உறுதி மற்றும் நம்பமுடியாத குழுப்பணி ஆகியவை …
Read More »ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாகாலாந்து முதலமைச்சர் …
Read More »மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
தேசிய நாளிதழ் ஒன்றில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்தக் கருத்துக் கட்டுரை அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது; இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணத்தை விட மேலானது என்பதை மத்திய அமைச்சர் திரு …
Read More »பூடான் மன்னரையும் ராணியையும் பிரதமர் வரவேற்றார்
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக், பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (05.12.2024) வரவேற்றார். மன்னருக்கும் ராணிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024 மார்ச் மாதத்தில் தமது அரசுமுறைப் பயணத்தின்போது பூடான் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலை நினைவுகூர்ந்தார். வளர்ச்சியில் ஒத்துழைப்பு, தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, விண்வெளி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான …
Read More »அஷ்டலட்சுமி மகா திருவிழாவை டிசம்பர் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார துடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 6 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அஷ்டலட்சுமி மகா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். முதன்முறையாக கொண்டாடப்படும் இந்த மூன்று நாள் கலாச்சார விழா டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும். இது வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சார அம்சங்களை முன்னிலைப்படுத்துவதுடன், பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஒன்றிணைக்கும். பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் சுற்றுலா …
Read More »
Matribhumi Samachar Tamil