மின்சார வாகனங்களுக்கு நேரடி மானியம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுவதில்லை. இருப்பினும், மின்சார வாகனங்களின் நுகர்வோருக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கமளிக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் உட்பட பான் இந்தியா அடிப்படையில் மின்சார வாகனங்களை பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் பின்வரும் திட்டங்களை வகுத்துள்ளது: இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல் (ஃபேம் இந்தியா) திட்டம் கட்டம்-II:ஏப்ரல் 1, 2019 முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு …
Read More »காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமானது தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் காசநோய் பாதிப்பு விகிதம் 2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 237 ஆகவும் 2023-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 195 ஆகவும் இருந்தது. அதாவது பாதிப்பு 17.7% குறைந்துள்ளது. காசநோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் 2015-ம் ஆண்டில் ஒரு …
Read More »தேசிய தரநிலை உத்தரவாத தகுதிநிலைகள் குறித்த அண்மைத் தகவல்
பொது சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தை உறுதி செய்யவும், மேம்படுத்தவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட விரிவான கட்டமைப்பான தேசிய தரநிலை உத்தரவாத தகுதி நிலைகளை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. பொது சுகாதார வசதிகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் பாதுகாப்பானதாகவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மையமாகக் கொண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சுகாதாரச் சேவைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு தரநிலை நெறிமுறைகள் வரையறைக்கப்பட்டன. இதைத் …
Read More »இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களின் விவரங்கள்
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)-ன் படி இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதமானது சாதனை அளவை எட்டியுள்ளது. இந்த இலக்கானது இந்திய மக்கள் தொகை கொள்கை-2000 மற்றும் தேசிய சுகாதார கொள்கை-2017 (டி.எஃப்.ஆர் 2.1) ஆகியவற்றுடன் ஒத்திசைவானதாக உள்ளது. குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: ஆணுறைகள், ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள், அவசர கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட கருத்தடை …
Read More »நாட்டில் 25 மாநிலங்களில் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
உணவு பதனப்படுத்துதல் துறையில் மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் …
Read More »மாஸ்கோவில் ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வில் இந்திய, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக தலைமை தாங்கினார்கள்
ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வு 2024 டிசம்பர் 10 அன்று மாஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரே பெலோசோவ் ஆகியோர் தலைமையில் கூட்டாக நடைபெற்றது. இந்தியா-ரஷ்யா உறவு மிகவும் வலுவானது என்றும், சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற ராஜீய கூட்டாண்மையின் பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். …
Read More »கலாச்சார படவரைவு தேசிய இயக்கமும் அதற்கான செயல்திட்டமும்
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தோங்ஜாவோ கிராமம் ‘மட்பாண்டங்களின் நிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே, உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற தலைசிறந்த கைவினைக் கலைஞரான நீலமணி தேவியின் மரபு, இந்த பண்டைய கலையைப் பாதுகாக்க தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. நீலமணியின் திறமைகள் அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததுடன், கிராமத்தின் மண்பாண்ட தொழிலுக்கான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கியப் பங்கும் ஆற்றியுள்ளது. கிராமப்புறங்களில் வீடுகளில் உபயோகிக்கும் பானைகள் முதல், கலைநயம் மிக்க படைப்புகள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் அவர்கள் …
Read More »சர்வதேச தொலைத் தொடர்பு என்பதை வரையறை செய்வதைக் குறித்த பரிந்துரைகள்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சர்வதேச தொலைத்தொடர்பு என்பதை வரையறை செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை, 30.08.2022 தேதியிட்ட செய்திக் குறிப்பு மூலம், சர்வதேச மற்றும் உள்நாட்டு குறுந்தகவல்கள் அனுப்புவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 (திருத்தம்)படி பிரிவு 11(1)(a)-ன் கீழ் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக, பொது மக்கள் மற்றும் …
Read More »மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ஊக்குவிப்பும் வசதியும் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் பிற மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மூலம், பொருத்தமான கொள்கை தலையீடுகளை செய்து நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கான உகந்த சூழலை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான மேம்பாடு மற்றும் வசதி அளிக்க பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுடன் கூடுதலாக, இந்தியாவில் தயாரியுங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா, பிரதமரின் விரைவு சக்தி, தேசிய உள்கட்டமைப்பு திட்டம், தேசிய தொழில்துறை வழித்தடத் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவித்தல், இணக்க சுமையைக் குறைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் தேசிய ஒற்றைச் சாளர முறை , இந்திய தொழில்துறை நில வங்கி, திட்டக் கண்காணிப்புக் குழு, தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டுத் திட்டம் போன்றவையும் செயல்படுத்தப்படுகின்றன. முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான நிறுவன அமைப்பு, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள் / துறைகளில் திட்ட மேம்பாட்டுக் குழுக்கள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய தொழில்துறை பெருவழித்தட மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு பல்வேறு தொழில்துறை பெருவழித்தட திட்டங்களை உருவாக்கி வருகிறது, இது உலகின் சிறந்த உற்பத்தி மற்றும் முதலீட்டு இடங்களுடன் போட்டியிடக்கூடிய இந்தியாவில் பசுமை தொழில்துறை பகுதிகள் / பிராந்தியம் / முனையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து இடைமுக பிளாட்ஃபாரம் அறிமுகம் தரவுகளைத் தொழிற்சாலைகள் பெறுவதை எளிதாக்குகிறது
தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை 2022-ன் கீழ், சரக்குப் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சரக்கு ஏற்றுதல் போன்ற முக்கிய சவால்களை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலக்கரி துறையில் திறன்மிக்க சரக்கு போக்குவரத்து துறைக்கான துறைசார் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களது சரக்கு போக்குவரத்து கொள்கைகளை அறிவித்துள்ளன. அறிவிக்கப்பட்ட கொள்கைகளின் விவரங்களை https://dpiit.gov.in/logistics/state-logistics-policies -தளத்தில் பார்க்கலாம். பல்வேறு மாநிலங்களுக்கிடையில் சரக்குப் போக்குவரத்தை எளிமையாக்குதலின் 5-வது …
Read More »
Matribhumi Samachar Tamil