Friday, December 05 2025 | 05:26:52 PM
Breaking News

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான  கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு செய்தியை வெளியிட்டார். கடந்த 2022- ம் ஆண்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் முன்முயற்சி, கங்கை மற்றும் காவேரியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் முக்கியமான தேசிய தளமாக …

Read More »

அசாம் தினத்தையொட்டி அசாம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

அசாம் தினத்தையொட்டி அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். …

Read More »

தண்டக்ரம பாராயணத்தை நிறைவு செய்த வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் வாழ்த்து

சுக்ல யஜுர்வேதத்தின் மத்யந்தினி பிரிவின் 2000 மந்திரங்களைக் கொண்ட தண்டக்ரம பாராயணத்தை 50 நாட்களில் எந்த இடைவேளையும்  இல்லாமல் முடித்ததற்காக வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 வயதான வேதமூர்த்தி தேவவ்ரத் மகேஷ் ரேகேவின் இந்த சாதனையை வருங்காலத் தலைமுறையினர் நினைவு கூர்வார்கள் என்று திரு. மோடி கூறியுள்ளார்.  “காசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்  என்ற முறையில், இந்த அசாதாரணமான சாதனை இந்தப் …

Read More »

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் டிசம்பர் 2 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,85,98,858 கணக்கெடுப்பு படிவங்கள் …

Read More »

தட்சிண கன்னட மாவட்டம் ஏற்றுமதி மையமாக அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

‘மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக’ (DEH) மாற்றும் மத்திய அரசின்  முன்முயற்சியின் கீழ், தட்சிண கன்னட மாவட்டம் ஒரு ஏற்றுமதி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் உணவுகள் மற்றும் முந்திரி ஆகியன இப்பகுதியின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. இது, உள்ளூர் தொழில்துறையை வலுப்படுத்தவும், உலக வர்த்தகத்தில் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும். ஏற்றுமதிச் சவால்களைச் சமாளிக்க, மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தளவாடப் போக்குவரத்து  இடைவெளிகள், சேமிப்புக் …

Read More »

இந்தியாவின் காலணி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது – குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

புதுதில்லியில் இன்று (டிசம்பர் 1, 2025) நடைபெற்ற காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியா தற்சார்பில் வளர்ச்சியடைந்து வரும் நாடாகவும், உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் திறன் கொண்ட நாடாகவும் திகழ்கிறது என்று கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், காலணித் துறைக்கு சாம்பியன் துறை என்ற அந்தஸ்து, வர்த்தகம் மற்றும் …

Read More »

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இன்று முதல் முறையாகத் தலைமை தாங்கிய குடியரசு துணைத்தலைவர்  திரு சி பி ராதாகிருஷ்ணனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நாள் பெருமை சேர்க்கும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். “அவையின் சார்பாகவும், என் சார்பாகவும், உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று திரு மோடி கூறினார். ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த திரு ராதாகிருஷ்ணன் …

Read More »

செயற்கை நுண்ணறிவு மூலம் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை எல்லையற்ற வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது: இந்திய தொழில் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் உரை

மும்பையில் இன்று (01.12.2025) நடைபெற்ற சிஐஐ பிக் பிக்சர் உச்சிமாநாட்டின் 12-வது பதிப்பில், ‘ஏஐ சகாப்தம் – படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை இணைத்தல்’ என்ற கருப்பொருளில் தொடக்க உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, செயற்கை நுண்ணறிவின் வருகையால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டாலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை மாபெரும் வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்வில், இந்தியாவின் படைப்புப் பொருளாதாரத்திற்கான …

Read More »

ஜல் ஜீவன் இயக்கத்தின் விரிவாக்கம் மற்றும் அமலாக்க நிலவரம்

2019 ஆகஸ்ட் முதல், மத்திய அரசு, அசாம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து, நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் அசாமில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 72,24,242 கிராமப்புற வீடுகளில், 57,87,327 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 58,98,638 வீடுகள் …

Read More »

எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு மூலதனமாக 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ)  நிதியுதவி அளிப்பதற்கும் குறித்த காலத்தில் வரவேண்டிய தொகைகளைப் பெறுவதற்கும், மாறி வரும் தொழில்நுட்பங்களை விரைந்து செயல்படுத்துவற்கும் ஏதுவாக பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதியத்திற்கு 9,000 கோடி  ரூபாய் மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனங்களுக்கு கூடுதல் கடனுதவியாக 2 லட்சம் கோடி ரூபாய் …

Read More »