பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் …
Read More »புதுதில்லியில் 6-வது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் தாம் நிகழ்த்திய உரையின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
புதுதில்லியில் 6-வது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் தாம் நிகழ்த்திய உரையின் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். தனித்தனியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது: “திரு ராம்நாத் கோயங்காவை பொருத்தவரை தேசம் முதலில் என்பது எப்போதும் அவரது கருத்தாக இருந்தது. எது சரியோ, எது சத்தியமோ அதன் பக்கம் அவர் நின்றார். அனைத்துக்கும் மேலானதாக கடமையை அவர் முன்வைத்தார்.” “அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. …
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 18 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,25,13,094 கணக்கெடுப்பு படிவங்கள் …
Read More »ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் 2025-ம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகளைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ராமோஜி சிறப்பு விருதுகள் ஏழு பிரிவுகளில் வழங்கப்பட்டன: கிராமப்புற மேம்பாடு – திருமதி அம்லா அசோக் ருயா; இளைஞர் அடையாளம் – திரு ஸ்ரீகாந்த் பொல்லா; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – பேராசிரியர் மாதவி லதா …
Read More »ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியக் குழுவினர், இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக செயல்பட்டு, 6 தங்கம் உள்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். ரிகர்வ் ஆடவர் பிரிவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்ற வரலாற்று சிறப்புமிக்க …
Read More »சவுதி அரேபியா மதினா சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் இரங்கல்
சவூதி அரேபியாவின் மதினா நகரில் நேரிட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அளித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். தேவையான உதவியையும் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்வதற்கு சவுதி …
Read More »நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு முன்னுரிமை- மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்
ஆசிய விதை மாநாடு 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது ஆசிய விதை மாநாடு 2025-க்கான இலட்சினையும் வெளியிடப்பட்டது. தரமான விதைகள் மூலம் செழுமைக்கான விதைகளை விதைத்தல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும், இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், …
Read More »கட்டாய ஐஎம்இஐ பதிவு: மோசடிச் சாதனங்களைத் தடுக்க உற்பத்தியாளர்கள்
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலிமையாக்கும் தொலைத்தொடர்பு சாதனங்களில் போலிகளைத் தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (ஐஎம்இஐ) எண் பதிவு செய்வது கட்டாயம் என்றும், அந்த எண்ணைத் திருத்துவது சட்டப்படி பெரிய குற்றமாகும் என்றும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மறுவிற்பனையாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சட்டம், 2023 மற்றும் தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு விதிகள், 2024 ஆகியவற்றின் …
Read More »மனோரமா நியூஸ் நியூஸ்மேக்கர் விருது – மத்திய இணையமைச்சர் திரு சுரேஷ் கோபிக்கு வழங்கினார் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
புதுதில்லியில் இன்று (16.11.2025) நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான மனோரமா நியூஸ் நியூஸ்மேக்கர் விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மத்திய சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சரும் புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான திரு சுரேஷ் கோபிக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் தமது உரையில், சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் உள்ள தனித்துவமான சவால்களை எடுத்துரைத்தார். இந்த இரு துறைகளிலுமே திரு சுரேஷ் கோபி பெற்றுள்ள சிறந்த வெற்றியை அவர் பாராட்டினார். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டில் நேர்மறையான தகவல்களை முன்னிலைப்படுத்துவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். மேலும் குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதில் பத்திரிகைகளின் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில், உண்மையிலிருந்து போலிச் செய்திகளைப் பிரிப்பது மிகவும் கடினமாகி வருவதாக அவர் மேலும் கூறினார். நமது ஜனநாயகத்தில் பத்திரிகைகளும் ஊடகங்களும் மிகவும் பொறுப்பான பங்கை வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தூய்மையான இதயத்துடன் உண்மையைப் பேசுபவர்கள், வாழ்நாள் முழுவதும் தவம் செய்பவர்களை விடவும், தர்மங்களைச் செய்பவர்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று கூறிய திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துகளை குடியரசு துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார். திருவள்ளுவரின் காலத்தால் அழியாத இந்த தத்துவத்தைப் பின்பற்றுமாறு பத்திரிகைகளை அவர் கேட்டுக் கொண்டார். மனோரமா குழுமத்தின் நீடித்த பாரம்பரியத்தை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், உண்மை, மொழிப் பற்று, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், மலையாள மொழிக்கான அதன் பங்களிப்புகளையும் பாராட்டினார்.
Read More »குஜராத்தின் சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்; மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்
சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (15.11.2025) பார்வையிட்டு, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தி வரும் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். பணிகளின் வேகம், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி இலக்குகளை அடைவது உட்பட திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். திட்டப் பணிகள் எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக …
Read More »
Matribhumi Samachar Tamil