நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024 மூலம் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை- 2013-ன் படி, இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) வரிகள், தீர்வைகள் உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது, அதில் …
Read More »உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
மருந்துகள் உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2027-28-ம் நிதியாண்டு வரையிலான திட்ட உற்பத்தி காலத்துக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டு காலத்திற்கு அடையாளம் காணப்பட்ட மருந்துகள் உற்பத்தி செய்ய 55 மருந்து தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 48 உற்பத்தித் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 34 திட்டங்களுக்கு 25 வகையான மருந்துகளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை …
Read More »வெங்காய விவசாயிகளுக்கு உதவும் சிறப்பு திட்டம்
வெங்காயம் உள்ளிட்ட அழுகும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சந்தை குறுக்கீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. முந்தைய சாதாரண பருவத்தின் சராசரி விலைகளுடன் ஒப்பிடும்போது சந்தை விலைகள் குறைந்தது 10% வீழ்ச்சியடையும் போது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் நிதி இழப்புகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து …
Read More »பிரதமரின் கிசான் திட்டத்தில் ததகுதியற்ற பயனாளிகளை அடையாளம் காணுவதற்கான தணிக்கை
பிரதமரின் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமரால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று சம தவணைகளில் ரூ.6,000/- நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது. இத்திட்டம் உலக அளவில் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் மாபெரும் திட்டமாகும். விவசாயிகளை மையமாகக் …
Read More »பிரதமரின் கிசான் மான் தன் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டில் 1,10,582 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்
பிரதமரின் கிசான் மான் தன் திட்டம் (பி.எம்.கே.எம்.ஒய்), ஒரு மத்திய துறை திட்டமாகும், இது 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், இது 60 வயதை எட்டும்போது குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ .3000- உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயதான காலத்தில் சமூகப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.55 …
Read More »நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை
2024-25 காரீப் சந்தைப் பருவத்தில் சாதாரண நெல் மற்றும் நெல் (கிரேடு-ஏ) ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2300 ஆகவும், குவிண்டாலுக்கு ரூ.2320 ஆகவும் அரசு நிர்ணயித்துள்ளது. 2024-25 காரீப் பருவ காலத்தில், நெல் கொள்முதலுக்காக (01.12.2024 வரை) விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.65,695 கோடியாகும். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் …
Read More »மெகா எண்ணெய் பனை மரம் நடுகை இயக்கம் மற்றும் அடைந்த மைல்கற்கள்
மெகா எண்ணெய் பனை தோட்ட இயக்கம், 2024 ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. 17,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 25 லட்சம் நடவுப்பொருட்கள் 15,755 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சாத்தியமான பகுதிகளில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்படும் பகுதிகள். அரசு திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை வளர்ப்பு பொருத்தமான வேளாண் காலநிலை நிலைமைகளைக் கொண்ட சாத்தியமான பகுதிகளில் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் …
Read More »டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்காக டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு, நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு நாம் தலை வணங்குவோம். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்கான டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. இன்று, அவரது பங்களிப்புகளை நாம் நினைவுகூரும் அதே வேளையில், அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமிக்கு’ நான் சென்றபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
Read More »அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது உட்பட கடந்த 2 ஆண்டுகளில் பல தேசிய, சர்வதேச நிகழ்வுகளுக்கு பாரத மண்டபம் சாட்சியாக திகழ்ந்துள்ளது …
Read More »அஷ்டலட்சுமி மகா திருவிழா 2024
வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார வளமை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டாடுதல் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் என்பது பல நூற்றாண்டுகளின் மரபுகள், மாறுபட்ட மொழிகள், வளமான நாட்டுப்புறக் கதைகள் போன்ற துடிப்புமிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது. அனைத்து சமூகமும், அனைத்து மாநிலமும் தனக்கே உரிய தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் நவீன வளர்ச்சியின் அசாதாரண கலவையை தன்னகத்தே கொண்டுள்ள பிராந்தியமாக இது உள்ளது. அசாமின் பசுமையான தேயிலைத் தோட்டங்கள் முதல் மிசோரமின் மலைகள் வரை, மணிப்பூரின் …
Read More »