Thursday, December 19 2024 | 06:55:47 AM
Breaking News

அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்பு

பாரத் நெட் திட்டம் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குகிறது. டிஜிட்டல் பாரத் நிதியத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டத்தின் மூலம், பிஎஸ்என்எல் பாரத் நெட் உத்யாமிஸ் எனப்படும் உள்ளூர் கூட்டாளர்கள் / தொழில்முனைவோர் மூலம் பாரத்நெட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகள் / கிராமங்களில் அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்புகளை வழங்கியுள்ளது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் …

Read More »

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் அதன் தரத்தை உயர்த்துவதற்கும் தொலைத்தொடர்புத்துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு – நாட்டின் தொலைதூர, கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணையம் / தரவுமொபைல் சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், எல்லைப் பகுதிகள், பிற முன்னுரிமைப் பகுதிகளில் மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பிராந்தியம், அந்தமான் – நிக்கோபார், லட்சத்தீவு தீவுகளில் மொபைல் …

Read More »

அஞ்சல் ஏற்றுமதி மையங்கள்

மாவட்டந் தோறும் தலா ஒரு அஞ்சலக ஏற்றுமதி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அஞ்சலகங்கள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக இதுவரை நாடு முழுவதும் 1013 அஞ்சலக ஏற்றுமதி மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த  மையங்கள் எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகத்திற்கு உதவுவதுடன், கைவினைஞர்கள், நெசவாளர்கள், உள்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளை அடைய உதவுகின்றன. ரத்தினக் கற்கள், செயற்கை கற்களுடன் கூடிய நகைகள், துணி, ஆடைகள், தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆயுர்வேத மற்றும் மூலிகை பொருட்கள், மசாலாப் பொருட்கள், இசைக்கருவிகள், கைக்கடிகாரங்கள், வீட்டு உபகரணங்கள், தேயிலை, காபி, பிற …

Read More »

நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களில் பசுமை முன்முயற்சிகள்

நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட், என்எல்சி இந்தியா லிமிடெட், சிங்கரேனி நிலக்கரி கம்பெனி லிமிடெட்  ஆகியவை 2023-24-ம் நிதியாண்டு வரை நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 55312 ஹெக்டேர் (ஹெக்டேர்) நிலத்தை உயிரியல் ரீதியாக மீட்டெடுத்து காடுகளை வளர்த்துள்ளன. தோட்ட வகை  பரப்பளவு (ஹெக்டேரில்) உயிரியல் மீட்பு 37022 அவென்யூ தோட்டம் 14463 சுரங்க குத்தகைக்கு வெளியே மரம் நடுதல் 3827 மொத்தம்  55312 பசுமையாக்கும் முயற்சிகளின் மதிப்பிடப்பட்ட கார்பன் …

Read More »

நீடித்த நிலக்கரி உற்பத்தி

நிலக்கரித் துறையின் நீடித்த வளர்ச்சிக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல், சமூகத்தின் மீதான அக்கறை, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது: ஒரு புதிய சுரங்கம் திறப்பதற்கு அல்லது உற்பத்தித் திறன் மற்றும்/அல்லது நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கு, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிகள், 1986 மற்றும் இஐஏ அறிவிக்கை, 2006 மற்றும் அடுத்தடுத்த திருத்தங்களின் கீழ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுகிறது. சுற்றுச்சூழல் …

Read More »

வர்த்தக நிலக்கரி சுரங்கத்தின் 11-வது சுற்று ஏலத்தை தொடங்க நிலக்கரி அமைச்சகம் தயாராகிறது

நிலக்கரி அமைச்சகம் 11 வது சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தை 05-12-24 அன்று புதுதில்லியில் தொடங்க உள்ளது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஏலத்தை தொடங்கி வைப்பார். நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, நிலக்கரித் துறை செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த  முன்முயற்சி இந்தியாவின் நிலக்கரித் துறையில் …

Read More »

விண்வெளிக் கழிவுகள் மேலாண்மை

விண்வெளி நிலைத்தன்மைக்கான “விண்வெளி சூழ்நிலைமை விழிப்புணர்வின்”, வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், விண்வெளிப் பயணப் பாதுகாப்பு மற்றும் கழிவுகள் குறைப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் கவனம் செலுத்தவும், நெரிசலான விண்வெளி சூழலில் செயல்படுவதில் உருவாகி வரும் சவால்களை சமாளிக்கவும் பாதுகாப்பான மற்றும் நீடித்த விண்வெளி செயல்பாடுகள் மேலாண்மைக்கான இஸ்ரோ அமைப்பு(IS4OM) நிறுவப்பட்டுள்ளது. விண்வெளிக் கழிவுகள் ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரைத்த சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்வெளிக் கழிவுகள் குறைப்பு வழிகாட்டுதல்களை …

Read More »

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின்  துணிச்சல்மிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்தை உறுதி செய்யும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தள  பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: “கடற்படை தினத்தை முன்னிட்டு, ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடல்களைப் பாதுகாக்கும் இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். …

Read More »

ஸ்குவாஷ் விளையாட்டு ஜாம்பவான் ராஜ் மன்சந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும்  திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால்,  அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi)”

Read More »

ஆர்.வெங்கட்ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமனின் பிறந்த நாளையொட்டி இன்று (2024 டிசம்பர் 4) புவனேஸ்வரில் உள்ள ராஜ் பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Read More »