Wednesday, January 14 2026 | 02:44:00 AM
Breaking News

ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு – காந்தி நகரில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தலைமை வகித்தார்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா குஜராத்தின் காந்திநகரில் 500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கி, உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிளிங்) ஓட்டும் நிகழ்வின் 31-வது பதிப்பை வழிநடத்தினார்.  இதேபோல் இந்த நிகழ்வு இன்று (13.07.2025 – ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வாரம் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு நாடு முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வின்போது பேசிய அமைச்சர், ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஒட்டும் நிகழ்வு இப்போது நாடு தழுவிய ஒரு வலுவான முன் முயற்சியாக மாறியுள்ளது என்றார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உடல் திறன் இந்தியா இயக்கத்தை முழு வீச்சில் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இது உடற்பயிற்சி பற்றியது மட்டுமானதாக இல்லாமல் தேசிய அளவில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு முக்கிய முயற்சியாகவும் மாறியுள்ளது என்று அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா கூறினார். இந்த வார மிதிவண்டி ஓட்டும் நிகழ்வுகளில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், கெயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஆயில் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசிய தலைநகர் புது தில்லியில், மேஜர் தியான் சந்த் மைதானத்தில் கயிறு தாண்டுதல், ஜூம்பா, யோகா நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கூடிய நிகழ்வாக   ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குர்கானில் நடைபெற்ற நிகழ்வில் 700 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டுதல், யோகா செய்தல் மற்றும் பல விளையாட்டுகளில் பங்கேற்றனர். டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 3000-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டும் சங்கங்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் இதில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.

Read More »

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே முடிவு

பயணிகள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் அடிப்படையில், அதில் கிடைத்த நேர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும். குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் கும்பல்களின் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்க, கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் ஆய்வு செய்தனர். 2015 ஜூலை 12 சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விரிவான பாதுகாப்பு: இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 74,000 ரயில் பெட்டிகளிலும் 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு நுழைவு வழியிலும் 2 கேமராவும் ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும். இதில் ரயில் இன்ஜினின் முன்புறம், பின்புறம் என இருபுறமும் தலா 1 கேமரா பொருத்தப்படும். ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் (முன் மற்றும் பின்புறம்) 1 டோம் சிசிடிவி கேமரா மற்றும் 2 மேசையில் பொருத்தப்பட்ட மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டிருக்கும். நவீன முறை கண்காணிப்பு: சிசிடிவி கேமராக்கள் நவீனமானவையாக இருக்கும் என்றும், எஸ்டிக்யூசி சான்றிதழ் பெற்றவை என்றும் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். மத்திய ரயில்வே அமைச்சர், சிறந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்ச நிலைகளிலும் கூட உயர்தர காட்சிப் பதிவுகள் கிடைக்கும் வகையில் கேமராக்களை பொருத்துமாறு ரயில்வே அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.  சிசிடிவி கேமராக்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆராயுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தரவு தனியுரிமைக்கு முக்கியத்துவம்: பயணிகள் பகுதிகளில் கேமராக்களை பொருத்துவதன் நோக்கம் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும். தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் காண உதவும். இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகள், பாதுகாப்பான பயணத்தையும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.

Read More »

உரங்களின் தரத்தை உறுதி செய்வதற்கான இயக்கத்தைத் தொடங்க வேண்டும் – மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கடிதம்

போலியான, தரமற்ற உரங்கள் பிரச்சினை தொடர்பாக உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வேளாண்  அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். போலி உரங்களின் விற்பனை, மானிய விலை உரங்களின் கறுப்புச் சந்தை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கடிதத்தை அமைச்சர் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மத்திய அமைச்சர், விவசாயம் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும், விவசாயிகளின் வருமானத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்ய, அவர்களுக்கு சரியான நேரத்தில், மலிவு விலையில், தரமான உரங்களை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வரும் உர (கட்டுப்பாட்டு) ஆணை, 1985-ன் கீழ் போலி அல்லது தரமற்ற உரங்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் மாநிலங்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்: * தேவைப்படும் இடங்களில் உரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வது மாநிலங்களின் பொறுப்பாகும். எனவே, கருப்புச் சந்தை, அதிக விலை நிர்ணயம், மானிய விலை உரங்களை திசை திருப்புதல் போன்ற நடவடிக்கைகளை மாநிலங்கள் கண்டிப்பாக கண்காணித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். * உர உற்பத்தியையும் விற்பனையையும் தொடர்ந்து கண்காணித்து, உரிய சோதனைகள் மூலம் போலியான, தரமற்ற உரங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும். * வழக்கமான உரங்களுடன் நானோ உரங்கள் அல்லது உயிரி-தூண்டுதல் தயாரிப்புகளை கட்டாயமாக இணைத்து டேக் செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். * முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் உர விற்பனை உரிமங்களை ரத்து செய்தல், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். * கண்காணிப்பு செயல்பாட்டில் விவசாயிகளையும் விவசாயிகள் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும். உண்மையான மற்றும் போலியான பொருட்களை அடையாளம் காண்பது குறித்து விவசாயிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போலியான, தரமற்ற உரங்களால் ஏற்படும் பிரச்சினைகளை அகற்ற, இந்த வழிகாட்டுதல்களின்படி மாநிலம் தழுவிய இயக்கத்தைத் தொடங்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தியுள்ளார். மாநில அளவில் இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது விவசாயிகளின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Read More »

பயிற்சி மையங்கள் இளைஞர்களை அச்சுறுத்தும் மையங்களாக மாறிவிட்டன: குடியரசு துணைத்தலைவர்

குடியரசு  துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று, “ காளான்களைப் போல பெருகி வரும் பயிற்சி மையங்கள், நமது எதிர்காலமான நமது இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கவலைக்குரிய இந்தத் தீமையை நாம் அகற்ற வேண்டும். நமது கல்வி இவ்வளவு கறைபடுவதையும் களங்கப்படுத்தப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது” என்று கூறினார். ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய …

Read More »

பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு  துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு …

Read More »

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் ‘இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்’ இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் மதிப்புமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாரம்பரிய பட்டியலில் 12 கம்பீரமான கோட்டைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன. 1 கோட்டை தமிழ்நாட்டில் உள்ளது. மராட்டிய பேரரசின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ள பிரதமர், “நாம் புகழ்பெற்ற மராட்டிய பேரரசைப் பற்றிப் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனுக்கு முக்கியத்துவம் …

Read More »

பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு – உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய வெளியீட்டில் இந்தியாவின் ஆயுஷ் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன

உலகளாவிய சுகாதார கண்டுபிடிப்புகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, உலக சுகாதார அமைப்பு (WHO) “பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை திட்டமிடுதல்” என்ற தலைப்பில் ஒரு தொழில்நுட்ப சுருக்க அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பாரம்பரிய மருத்துவ அமைப்புகளுடன், குறிப்பாக ஆயுஷ் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் முன்னோடி முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் முன்மொழிவை இந்த வெளியீடு பின்பற்றுகிறது. இது பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலக சுகாதார …

Read More »

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளைஞர் சக்தி: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு

நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா எனப்படும்  வேலைவாய்ப்பு திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வழியாக வழங்கினார். சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துகொண்டு மத்திய அரசின் …

Read More »

நமீபியா நாட்டின் மிக உயரிய கௌரவ விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் ஏற்புரை

மேன்மைதங்கிய அதிபர் அம்மையார் அவர்களே, துணை அதிபர் அவர்களே, பிரதமர் அவர்களே, நமீபியாவின்   அமைச்சர் பெருமக்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, நமீபியா நாட்டின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட்  வெல்விட்ஸ்சியா மிரபிலிஸ்’ விருதை அந்நாட்டு அதிபரிடமிருந்து பெறுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மரியாதையையும் அளிப்பதாக உள்ளது. இந்த விருதினை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். …

Read More »

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளின் இரண்டாண்டு கொண்டாட்டங்கள்

பாரத கேசரி டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளின் இரண்டாண்டு அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் தொழில்துறை பயணத்தை வடிவமைத்த தொலைநோக்கு கொண்ட தலைவரின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தில்லியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், …

Read More »