பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர். 1. பாதுகாப்பு: கூட்டு ராணுவப் பயிற்சி, உயர்நிலை பாதுகாப்பு தூதுக் குழுக்களின் பரிமாற்றம் …
Read More »பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா அவர்களே, இருநாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம். “போவா டார்டே”. ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம். பிரேசில் அதிபரால் பிரேசிலின் மிக உயரிய தேசிய விருது வழங்கி இன்று கௌரவிக்கப்பட்டிருக்கும் தருணமானது எனக்கு மட்டும் பெருமிதமும், …
Read More »தேசிய மீன் விவசாயிகள் தினம் 2025 முன்னோட்டம்
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் மீன் உணவு சார்ந்த புரதத்திற்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் மீன் விவசாயிகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களின் முயற்சிகள் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், நிலையான மீன்வளர்ப்பு மற்றும் செழிப்பான நீலப் பொருளாதாரம் என்ற நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. 1957-ம் ஆண்டு …
Read More »பருத்தி உற்பத்தி குறித்த சிறப்பு கூட்டம் கோவையில் ஜூலை 11 இல் நடைபெறும்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் காணொளி செய்தியில் அறிவிப்பு
பருத்தி உற்பத்தி, முக்கிய பயிர் வகைகள் குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாக, ஜூலை 11-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டம் பற்றிய அறிவிப்பை காணொலி செய்தி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியிருப்பதாவது: “பருத்தி …
Read More »ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் உஜ்ஜயினியில் ஆகாஷ்வாணி மையத்தை மத்திய அரசு நிறுவ உள்ளது
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் மற்றும் எதிர்கால வளர்ச்சி முயற்சிகள் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. ஊடக தொடர்பு, பொதுத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான …
Read More »“கலாசேது” என்ற நாடு தழுவிய முன்முயற்சியை வேவெக்ஸ் புத்தொழில் தொடங்கியுள்ளது; நிகழ்நேர பன்மொழி, பல் ஊடக உள்ளடக்க உருவாக்க தீர்வுடன் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முன்னணி புத்தொழில் நிறுவனங்களுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது
அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற தகவல் தொடர்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளுக்கு வலுவான உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இது மொழி அடிப்படையிலான பிளவுகளை இணைத்து நாடு முழுவதும் தொலைதூரப்பகுதிக்கும் தகவல் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்கிறது. கலாசேது: இந்தியாவுக்கான நிகழ்நேர மொழி சார்ந்த தொழில்நுட்பம் அனைவரையும் உள்ளடக்கிய தகவல் தொடர்புக்கு செயற்கை நுண்ணறிவு ஆற்றலை பயன்படுத்துவது என்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலமான வேவெக்ஸ் …
Read More »ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய வழித்தடத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் ‘அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று 2.0’ பிரச்சாரத்தை நினைவுகூரும் விதமாகவும் ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய வழித்தடத்தில் சுமார் 17,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஒரு இயக்கத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய சாலையில் உள்ள யமுனா விரைவுச்சாலை சந்திப்புப் பகுதியில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு …
Read More »உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தை மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திரு ஜெயந்த் சவுத்ரி திறந்து வைத்தனர்
இந்திய வேளாண் சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இன்று மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தைத்’ திறந்து வைத்தனர். உத்தரப்பிரதேச அரசின் வேளாண் அமைச்சர் திரு சூர்யா …
Read More »அஸ்மிதா பளுதூக்குதல் லீக்கை துவக்கி வைத்தார், மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
உத்தரப்பிரதேச மாநிலம் மோடிநகரில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா லீக் சீசனை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். 2025 ஆம் ஆண்டுக்கான அஸ்மிதா சீசன், எட்டு வெவ்வேறு எடைப் பிரிவுகளில் 42 பெண்கள் பங்கேற்ற பளுதூக்குதல் லீக்குடன் தொடங்கியது. நடப்பு நிதியாண்டான 2025-26-இல், 15 விளையாட்டுப் பிரிவுகளில் 852 லீக்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள லீக்குகளில் 70,000க்கும் …
Read More »பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை
உயர்மதிப்பாளர்களே, மேன்மை தங்கியவர்களே, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. நண்பர்களே, பிரிக்ஸ் அமைப்பின் பலதரப்புவாதத்தின் மீதான நம்பிக்கை இந்த அமைப்பிற்கு மிகப்பெரிய வலிமையை அளிக்கிறது. இன்று, உலக நாடுகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. மேலும் உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்றச் சூழலை திறம்பட எதிர்கொள்வதன் மூலம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வரும் காலங்களில் பிரிக்ஸ் அமைப்பு பல்வேறு உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உருவாகும் வகையில் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பான சில பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்: முதலாவதாக, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கீழ், பொருளாதார ஒத்துழைப்பு சீராக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த அமைப்பின் வர்த்தக குழு மற்றும் பெண்கள் வர்த்தக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரேசிலின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின், சர்வதேச நிதி அமைப்பில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்கிறது. பிரிக்ஸ் அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் மூலம் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஆதரிக்க ஒரு வலுவான மற்றும் நம்பகமான மாற்று நிலையை இந்தியா வழங்கியுள்ளது. திட்டங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், புதிய வளர்ச்சி வங்கியின் தேவை சார்ந்த அணுகுமுறைகள், நீண்டகால நிதிசார் நிலைத்தன்மை, கடன் மதிப்பீடு ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பன்முகத்தன்மை மீதான நம்பிக்கை மேம்படும். இரண்டாவதாக, இன்று உலக அளவில் உள்ள வளரும் நாடுகள் பிரிக்ஸ் அமைப்பிடமிருந்து சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றை நிறைவேற்றும் வகையில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பிரிக்ஸ் வேளாண் ஆராய்ச்சித் தளம், விவசாயத்தில் ஆராய்ச்சிப் பணிகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். வேளாண் – உயிரியல் தொழில்நுட்பம், துல்லியமான விவசாய நடைமுறைகள், பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் உலக அளவில் வேளாண் பணிகளில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாக உருவெடுக்கச் செய்ய முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு இதன் நன்மைகளை விரிவுபடுத்த முடியும். இதேபோல், கல்வி இதழ்களுக்கான நாடு தழுவிய அணுகுமுறையை உறுதி செய்வதற்காக இந்தியா ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதர பிரிக்ஸ் நாடுகளிலும் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக அளவில் தென்பகுதியில் உள்ள நாடுகளில் இத்தகைய முயற்சிகள் மதிப்பு வாய்ந்த நடவடிக்கையாக செயல்படும். பிரிக்ஸ் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி களஞ்சியத்தை உருவாக்குவது குறித்து உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன். மூன்றாவதாக, அரியவகை கனிமங்கள் தொடர்பான தொழில்நுட்பத்திற்கு விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்தவொரு நாடும் இத்தகைய வளங்களை அதன் சுயநலத்திற்காகவோ அல்லது மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகவோ பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். நான்காவதாக, 21-ம் நூற்றாண்டில், மக்களின் முன்னேற்றம் மற்றும் நலவாழ்வு ஆகியவை பெரும்பாலும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருபுறம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அன்றாட வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்த முடியும். மறுபுறம், இது தொடர்பான அபாயங்கள், நெறிமுறைகள், சார்பு நிலை தொடர்பான கவலைகளும் எழுந்துள்ளன. இந்தியாவின் அணுகுமுறை மற்றும் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. மனித குலத்தின் மாண்புகள் ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியா கருதுகிறது. “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், இன்று இந்தியாவில் விவசாயம், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் அதன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய நிர்வாக கட்டமைப்புகள் சவால்களுக்கு தீர்வு காண்பதிலும், புதுமைகளை ஊக்குவிப்பதிலும் சம அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தும் வகையில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கக்கூடிய அளவில் தரநிலைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உள்ளமுக்கிய அம்சங்களை அடையாளம் காணவும் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கவும் தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் இது உதவிடும். இன்றைய அமர்வில் வெளியிடப்படும் “செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் குறித்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் அறிக்கை” இதற்கான ஒரு நேர்மறையான செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்காக, அடுத்த ஆண்டு இந்தியாவில் “செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சிமாநாட்டை” நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். நண்பர்களே, உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகள் இந்தியா மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவற்றை நிறைவேற்ற, “முன்மாதிரி நாடாக செயல்படுவது என்ற கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் பொதுவான இலக்குகளை அடைய உறுப்பு நாடுகள் அனைத்துடனும் இணைந்து செயல்பட இந்தியா உறுதியுடன் உள்ளது. மிக்க நன்றி.
Read More »
Matribhumi Samachar Tamil