Wednesday, December 31 2025 | 03:39:44 PM
Breaking News

பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர்  திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் …

Read More »

கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்

அதிபர் திரு ஜான் மஹாமா அவர்களே, இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! 30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த பெருமை. கானாவில் எங்களுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ள  நபராக இருக்கிறேன். அதிபரே என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மரியாதைக்குரிய விஷயமாகும். 2024 டிசம்பர்  …

Read More »

பிரதமர், கானா அதிபரைச் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கானா அதிபர் டாக்டர் ஜான் டிராமணி மகாமாவைச் சந்தித்தார். ஜூபிலி ஹவுஸுக்கு வந்த பிரதமரை, அதிபர் திரு மகாமா வரவேற்றார். இந்திய பிரதமர் ஒருவரின் கானா அரசுமுறைப்  பயணம் 30 ஆண்டுகளில் இது முதல் முறையானதாகும். இரு தலைவர்களும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இருதரப்பு உறவை மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையேயான காலத்தால் மாறாத …

Read More »

இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது

புதுதில்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகமான நிர்வசன் சதனில் தேர்தல் ஆணையம் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது. தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய பிரச்சனைகளைக் கேட்டறிந்தனர். பீகாரில் சுமூகமாக நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். வாக்களிக்க தகுதியான …

Read More »

அறிவியல் ஆசிரியர்களுக்கு “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” குறித்த இரண்டு நாள் வழிகாட்டிப் பயிற்சித் திட்டம் – புதுச்சேரியில் இந்திய தரநிர்ணய அமைவனம் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை அலுவலகம் அறிவியல் ஆசிரியர்களுக்கு, “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயற்சித் திட்டத்தை புதுச்சேரியில் நடத்துகிறது. இது இன்றும் (03.07.2025)  நாளையும் (04.07.2025) நடத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு ஸ்ரீஜித் மோகன், பங்கேற்பாளர்களை வரவேற்று, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்பது, அடிப்படை அறிவியல் கருத்துக்களை தரப்படுத்தல் நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம் மாணவர்களின் அறிவியல் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட …

Read More »

கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இன்று  (02.07.2025) முதல்  09.07.2025 வரை நான் பயணம் மேற்கொள்கிறேன். அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன்.  கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக்  கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை …

Read More »

ஐசிஎம்ஆர்-என்ஐஇ-இல் ஆராய்ச்சிப் பணிகளை ஊடகக் குழு பாராட்டியது

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் மனிஷா வர்மா தலைமையிலான 10 பேர் கொண்ட தேசிய ஊடகக் குழு, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் ஊடகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 2, 2025) சென்னை வந்தது. சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள முதன்மையான ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் …

Read More »

கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்திய பின்பு சில திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வுகளில் திடீர் மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் திறன் வாய்ந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தடுப்பூசிகள் மிகவும் அரிதான பக்க …

Read More »

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொழில் பிணைப்பை துண்டித்து இளைஞர்களைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டத்தை முறியடித்ததற்காக, தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, போதைப்பொருள் கடத்தல் கும்பலை, அவர்கள் எங்கிருந்து செயல்பட்டாலும் ஒடுக்கவும் நமது இளைஞர்களைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: …

Read More »

பத்ம விருதுகள் – 2026-க்கான பரிந்துரைகளை 2025 ஜூலை 31 வரை அனுப்பலாம்

2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதுகளாகும். 1954-ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது ‘சிறப்புப் பணிகளை’ அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் …

Read More »