நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-ஆல் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையும் தர நிர்ணய அமைவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிஐஎஸ்-சின் தரச் சான்றிதழ் இல்லாமல் தலைக் கவசங்களைத் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் தர மதிப்பீடும் உள்ளது. தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுத்து விடுவதால் சாலைப் பாதுகாப்பு என்ற நோக்கத்தை சிதைப்பதாக அவை இருக்கின்றன. இதை நிவர்த்தி செய்வதற்காக, 2021-ம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது. இது அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் (ஐஎஸ் 4151:2015) சான்றளிக்கப்பட்ட, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 2025 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 176 உற்பத்தியாளர்கள் தலைக்கவசங்களுக்கான பிஐஎஸ் உரிமங்களை வைத்திருக்கின்றனர். சாலையோரங்களில் விற்கப்படும் பல தலைக்கவசங்களுக்கு பிஐஎஸ் சான்றிதழ் இல்லை. இவை தரமற்றதாக இருக்க கூடும் என்பதால் நுகர்வோருக்கு சாலை விபத்துகள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமல் போகும். எனவே, இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தரநிலைகளைச் செயல்படுத்த, பிஐஎஸ் வழக்கமான தொழிற்சாலை மற்றும் சந்தை கண்காணிப்பை மேற்கொள்கிறது. இதன் மூலம் தரமற்ற தலைக் கவசங்கள் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், சாலை விபத்தால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதையும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Read More »காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகளுடன் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவர் திரு ராஜேஷ் வர்மா தலைமையில், ஆணையத்தின் உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் முன்னிலையில், ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் 2025 ஜூலை 03 அன்று சண்டிகரில் நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஹரியானா மாநில அரசு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின்படி, 2025-ம் ஆண்டில் பயிர்க்கழிவுகள் எரிப்பை தடுப்பது, செங்கல் சூளைகளில் பரிந்துரைக்கப்பட்ட பொருள்களை மட்டும் பயன்படுத்துதல், அனல் மின் நிலையங்கள் பரிந்துரைக்கப்பட்ட உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்படுதல் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாப் மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இதே அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, ஆணையத்தால் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது. இரு மாநில அரசுகளும் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளை ஆணையம் பாராட்டியது. குறிப்பாக குளிர்காலம் நெருங்கி வருவதால், இப்பகுதியில் காற்றின் தரத்தில் ஏற்படும் சூழல்கள் குறித்த மாற்றங்களையும் அது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்களையும் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டது.
Read More »தூரந்த் கோப்பைப் போட்டித் தொடருக்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் அறிமுகம் செய்தார்
தூரந்த் கோப்பைப் போட்டித் தொடர் 2025-க்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று (04.07.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், விளையாட்டுகள் ஒழுக்கத்தை, மன உறுதியை, அணி உணர்வை மேம்படுத்துகின்றன என்றார். மக்களை, பிராந்தியங்களை, நாடுகளை இணைக்கும் தனித்துவ ஆற்றலை விளையாட்டுகள் கொண்டுள்ளன. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சக்தி மிக்க கருவியாக அது விளங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் அல்லது இதர சர்வதேச போட்டிகளில் மூவண்ணக் கொடி பறக்கும் போது, இந்திய மக்கள் அனைவரும் உற்சாகம் அடைகின்றனர் என்று அவர் கூறினார். லட்சக்கணக்கானோரின் இதயங்களில் கால்பந்து விளையாட்டுக்கு சிறப்பிடம் இருப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். இது வெறும் விளையாட்டு அல்ல; ஒரு பேரார்வம். கால்பந்து விளையாட்டு என்பது பொதுவான நோக்கத்தை (கோல்) அடைவதற்கு ஒன்றுபட்ட உத்தி, விடாமுயற்சி, உழைப்பு ஆகியவற்றைக் குறிப்பதாகும். தூரந்த் கோப்பை போன்ற நிகழ்வுகள், விளையாட்டு உணர்வை வளர்ப்பது மட்டுமின்றி, அடுத்த தலைமுறை கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் அவர்கள் வளர்வதற்கான தளத்தை வழங்குவதற்கும் உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். தூரந்த் கோப்பையின் உணர்வை மேம்படுத்துவதிலும் அதனை உயிரோட்டமாக வைத்திருப்பதிலும் ஆயுதப்படைகளின் பங்களிப்பை குடியரசுத்தலைவர் பாராட்டினார்.
Read More »டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
பிரதமர் திருமதி. கமலா பெர்சாத் பிஸ்ஸேசர் அவர்களே, அமைச்சரவை உறுப்பினர்களே இன்று கூடியிருக்கும் அனைத்து பிரமுகர்களே இந்திய வம்சாவளியினரே பெண்களே மற்றும் தாய்மார்களே, நமஸ்காரம்! சீதா ராம்! ஜெய் ஸ்ரீ ராம்! எதையாவது குறிப்பிட முடியுமா… என்ன ஒரு தற்செயலான நிகழ்வு! இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு …
Read More »உலக சுரங்க பேரமைப்பு கூட்டத்தில் இந்தியாவின் நிலையான சுரங்க தொலைநோக்குத் திட்டத்தை மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி எடுத்துரைத்தார்
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் இன்று உலக சுரங்க பேரமைப்பின் இந்திய தேசிய குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களை அவர் வரவேற்றார். பொறுப்பான, வெளிப்படையான, நிலையான சுரங்க நடைமுறைகளுக்கான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார். 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், உலக சுரங்க பேரமைப்பு, சுரங்கத் துறையில் ஒத்துழைப்பு, புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு அத்தியாவசிய உலகளாவிய தளமாக செயல்பட்டு வருவதாக …
Read More »இந்தியாவிலிருந்து 153 நாடுகள் பொம்மைகளை இறக்குமதி செய்கின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
ஒரு காலத்தில் இறக்குமதியையே பெரிதும் நம்பியிருந்த இந்தியாவின் பொம்மைத் தொழில், தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்து 153 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இன்று புதுதில்லியில் நடைபெற்ற 16வது பொம்மை வர்த்தக சர்வதேச பி2பி கண்காட்சி 2025-இல் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துரைத்தார். நிலையான கொள்கை ஆதரவு, தரங்களை அமல்படுத்துதல் மற்றும் உள்ளூர் உற்பத்தித் தொகுப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இந்த மாற்றம் …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் …
Read More »கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
அதிபர் திரு ஜான் மஹாமா அவர்களே, இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! 30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த பெருமை. கானாவில் எங்களுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ள நபராக இருக்கிறேன். அதிபரே என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மரியாதைக்குரிய விஷயமாகும். 2024 டிசம்பர் …
Read More »பிரதமர், கானா அதிபரைச் சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கானா அதிபர் டாக்டர் ஜான் டிராமணி மகாமாவைச் சந்தித்தார். ஜூபிலி ஹவுஸுக்கு வந்த பிரதமரை, அதிபர் திரு மகாமா வரவேற்றார். இந்திய பிரதமர் ஒருவரின் கானா அரசுமுறைப் பயணம் 30 ஆண்டுகளில் இது முதல் முறையானதாகும். இரு தலைவர்களும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இருதரப்பு உறவை மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையேயான காலத்தால் மாறாத …
Read More »இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது
புதுதில்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகமான நிர்வசன் சதனில் தேர்தல் ஆணையம் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது. தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய பிரச்சனைகளைக் கேட்டறிந்தனர். பீகாரில் சுமூகமாக நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். வாக்களிக்க தகுதியான …
Read More »
Matribhumi Samachar Tamil