Friday, April 10 2026 | 06:44:07 AM
Breaking News

பதான்கோட்டிலிருந்து கத்தாருக்கு ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் ஏற்றுமதி

நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, ஜூன் 23-ம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …

Read More »

அவசரநிலையின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையிலும், ஜனநாயகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ‘அரசியலமைப்பு படுகொலை தினத்தை’ கலாச்சார அமைச்சகம் மற்றும் தில்லி அரசு கடைப்பிடிக்கிறது

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50-ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம் தில்லி அரசுடன் இணைந்து ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அஸ்வினி …

Read More »

கோவா ஷிப்யார்ட் நிறுவனம் தயாரிக்கும் எட்டு விரைவு ரோந்து கப்பல்களில் முதலாவது கப்பலான ஆதம்யா கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டது

கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில்  எட்டு விரைவு ரோந்து கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் முதலாவது விரைவு ரோந்து கப்பலான  ‘ஆதம்யா’ இன்று (ஜூன் 26ம் தேதி) கோவாவில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது. விரைவு ரோந்து கப்பல்கள் என்பவை கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்கள் ஆகும். இதன் சிறந்த சூழற்சித்திறன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை …

Read More »

ஒவ்வொரு தீவிரவாதச் செயலும் குற்றமே, நியாயப்படுத்த முடியாதது; கூட்டு பாதுகாப்புக்காக தீவிரவாத அச்சுறுத்தலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர்

சீனாவின் கிங்டாவோ நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்  கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் உள்ள விரிவான வரையறைகளை எடுத்துரைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் …

Read More »

யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்

யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில்  மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.  யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் …

Read More »

‘ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கொள்கலன்களை டிஆர்ஐ பறிமுதல் செய்துள்ளது

நாட்டின் புலனாய்வு துறைகள் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) “ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நாடுகள் வழியாக, அதாவது  துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வழியாக அனுப்பப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் இதுவரை ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் …

Read More »

மத்திய பொதுப்பணித்துறையின் தொழிலாளர் திறன் பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் – மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் வழங்கினார்

மத்திய பொதுப்பணித் துறை புது தில்லி சேவா நகரில் கஸ்தூர்பா நகரில் குடியிருப்பு விடுதியில்  ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் திறன் சான்றிதழ் வழங்கும் விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் கலந்து கொண்டார். மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறன் …

Read More »

அவசரநிலை பிரகடனம் என்பது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல- குடியரசு துணைத்தலைவர்

50 ஆண்டுகளுக்கு முன் இந்த நாள் மிகவும் பழமையான, மிகப்பெரிய, துடிப்புமிக்க ஜனநாயகம் பிரச்சனைக்கு ஆட்பட்டது. அது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல. அதுதான் அவசர நிலை பிரகடனம். அந்த இரவு இருளானது. அமைச்சரவை ஓரம் கட்டப்பட்டது. உயர்நீதி மன்றத்தின் எதிர்மறை உத்தரவை எதிர்கொண்ட அன்றைய பிரதமர் சொந்த ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த தேசத்தையும் புறக்கணித்தார். அரசியலமைப்பை நசுக்கிய குடியரசுத் தலைவர் அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து சுமார் …

Read More »

அரசியலமைப்பு படுகொலை தினத்தன்று ஜனநாயக பாதுகாவலர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50-வது ஆண்டினைக் குறிக்கும் நாளான இன்று, நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்த காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் நின்ற எண்ணற்ற இந்தியர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரசியல் சட்ட மாண்புகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்ட, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்ட, எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள், …

Read More »

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச போதைபொருள் ஒழிப்புத் தினத்தை நாளை (ஜூன் 26-ம் தேதி) மத்திய அரசு கடைப்பிடிக்கிறது

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நாளை (ஜூன் 26-ம் தேதி) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இதில் துறை சார்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் …

Read More »