Saturday, September 26 2026 | 02:27:31 PM
Breaking News

ராஷ்டிரபதி தபோவனம் திறப்பு விழா, பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். ராஷ்டிரபதி நிகேதனில் திறந்தவெளி அரங்கை நேற்று (19.06.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன், ராஷ்டிரபதி உத்யான் ஆகியவை குறித்த கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த இடங்களில் …

Read More »

ஜூன் 25, ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ ஒரு சோகமான நினைவூட்டல்: குடியரசு துணைத் தலைவர்

புது தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வளாகத்தில்  நடைபெற்ற 7வது தொகுதி மாநிலங்களவை உள்ளகப் பயிற்சி  திட்டத்தின்  பங்கேற்பாளர்களுடன் குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் கலந்துரையாடினார். அவசரநிலை எனப்படும் ஒரு முக்கியமான வரலாற்று அத்தியாயத்தை நினைவுபடுத்திய அவர், “இன்று நான் ஏழு நாட்களுக்குள் ஒரு சோகமான ஆண்டு நிறைவாக வரும் ஒரு சம்பவத்தைப் பற்றி சிந்திக்கிறேன். 1975 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 28 -வது ஆண்டில் …

Read More »

நாட்டின் வளத்தில் பீகார் செழிப்புறுவதோடு மிகப் பெரிய பங்களிப்பையும் வெளிப்படுத்தும்: பிரதமர்

பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், பாபா மகேந்திரநாத், பாபா ஹன்ஸ்நாத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மா தாவே பவானி, மா அம்பிகா பவானி ஆகியோரையும் அவர் வணங்கினார். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் …

Read More »

இந்தியா அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கிக்கு டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது வழங்கி நிதியமைச்சகம் கௌரவிப்பு

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால்  2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது  வழங்கப்படுகிறது. இந்த விருதை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் திரு …

Read More »

கர்நாடகாவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் பெங்களூரு வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை  அமைச்சருமான திரு  அமித் ஷா இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்  பெங்களூரு வளாகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய  மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நமது கலாச்சாரத்தின் முக்கிய கொள்கை, தன்னைப் பற்றி மட்டுமல்லாமல், அனைவரின் நலன் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றியும் சிந்திப்பது என்று கூறினார். ஸ்ரீ ஆதிச்சுஞ்சனகிரி மடம் கிராமங்களில் சுகாதார மையங்களை நடத்துவதன் மூலமும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை …

Read More »

இந்தியா – குரோஷியா தலைவர்களின் அறிக்கை

குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, இந்தியா-ஐரோப்பிய யூனியன் உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து குரோஷியா பிரதமர் பிளென்கோவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்தனர். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளில் வேரூன்றிய நெருக்கமான, நட்புறவுகளை இந்தியாவும் குரோஷியாவும் கொண்டுள்ளன என்பதை …

Read More »

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார். இதன் பின்னர் ஒடிசாவின் புவனேஸ்வருக்கு பயணம் மேற்கொள்ளும் அவர் பிற்பகல் …

Read More »

குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்

மாண்புமிகு பிரதமர் அவர்களே, இரு நாடுகளின்  பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குரோஷியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். நண்பர்களே, இந்தியாவும் குரோஷியாவும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்மைத்துவம் …

Read More »

லண்டனில் நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல் இந்தியாவின் உத்திசார் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார்

லண்டனில் இன்று நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல், இந்தியாவின் உத்தி ரீதியான உலகளாவிய கண்ணோட்டத்தையும் பொருளாதாரத் தலைமையையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார். மே 2025 இல் இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அவரது வருகை ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. “ஒப்பந்தம் முதல் செயல் வரை: இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இந்திய …

Read More »

தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தனியார் டிஜிட்டல் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும் ஏதுவாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, தனியார் டிஜிட்டல் தளமான யுவர்ஸ்டோரி மீடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நாடு முழுவதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் இந்த ஒப்பந்தம் …

Read More »