தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 14, 2025) புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2025-ஐ வழங்கினார். எரிசக்தி பாதுகாப்பு குறித்த தேசிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எரிசக்தி சேமிப்பு என்பது இன்றைய மிக முக்கியமான தேவை என்று தெரிவித்தார். எரிசக்தி சேமிப்பு என்பது எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதை புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும், திறமையாகவும் பயன்படுத்துவதாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தேவையற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, குறைந்த எரிசக்தி திறன் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவது, சூரிய ஒளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது போன்றவை, மின்சக்தியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், கார்பன் வெளியேற்றத்தையும் குறைப்பதாக அவர் கூறினார். சமநிலையான சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பதற்கும் எரிசக்தி சேமிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்தார். நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் இயற்கையின் மீதான நமது பொறுப்பின் அடையாளமாகவும், எதிர்கால சந்ததியினர் நலனில் நமது அக்கறையின் அடையாளமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார். இளைஞர்களும் குழந்தைகளும் எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, அந்த நோக்குடன் முயற்சிகளை மேற்கொண்டால், இந்தத் துறையில் இலக்குகளை அடைய முடியும் என்றும், நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி வீடுகள் திட்டம், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் போன்ற முன்முயற்சிகள் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அரசு ஊக்குவித்து வருகிறது என அவர் கூறினார். இந்த மாற்றம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தின் வெற்றிக்கு ஒவ்வொரு துறை, ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் அவசியம் என்று அவர் கூறினார். அனைத்து துறைகளும் எரிசக்தி திறனை அதிகரிக்க செயல்பாடுகளில் மாற்றம் மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். கூட்டுப் பொறுப்பு, ஒத்துழைப்பு, பொது மக்கள் பங்கேற்பு ஆகியவற்றோடு, இந்தியா எரிசக்தி பாதுகாப்பில் தொடர்ந்து முன்னணிப் பங்காற்றும் என்றும், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இலக்குகளை அடையும் என்றும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
Read More »குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடல்
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (14.12.2025) புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வனப் பணி (ஐஎஃப்ஓஎஸ்) பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த அதிகாரிகள் ஹரியானா பொது நிர்வாக நிறுவனத்தில் (எச்ஐபிஏ) சிறப்பு அடித்தள பாடத் திட்டத்தைப் பயின்று வருகின்றனர். “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதிலும், அகில இந்திய சேவைகளை நிறுவுவதிலும் அவரது முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். ஓட்டோ வான் பிஸ்மார்க் ஜெர்மனியை ஒன்றிணைத்தார் என கூறிய அவர், அங்கு மக்கள் ஒரு பொதுவான மொழியைப் பேசினர் எனவும் ஒரே கலாச்சாரம் இருந்தது எனவும் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். ஆனால் பல மொழிகளுடன், கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைக்கும் மிகவும் சிக்கலான பணியை சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த அசாதாரண சாதனை உலகின் வேறு எந்த முயற்சிகளையும் விட சிறப்பானது என்று அவர் கூறினார். திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆற்றும் பங்கை அவர் பாராட்டினார். பொது சேவையில் பொறுப்புணர்வு மிக்க நடவடிக்கைகளை வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், செயல்திறனையும் சேவை வழங்கலையும் மேம்படுத்த தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொது வாழ்வில் பொறுமையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். திறமையான, மனிதாபிமான நிர்வாகத்திற்கு பொறுமையும், கவனத்துடன் பிரச்சனைகளைக் கேட்பதும் அத்தியாவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். பொதுமக்களின் குறைகளைக் கேட்பது பெரும்பாலும் பிரச்சனையின் பெரும்பகுதியைத் தீர்க்கிறது என்று அவர் கூறினார். இந்த கலந்துரையாடல் இளம் அதிகாரிகளுக்கு தலைமைத்துவம், நிர்வாகம், நெறிமுறை சார்ந்த பொது சேவை ஆகியவை தொடர்பான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது. ‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें : https://matribhumisamachar.com/2025/12/10/86283/ आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं: https://www.amazon.in/dp/B0FTMKHGV6 यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर …
Read More »ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”
Read More »கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார்
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அதானியில் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (14.12.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் கூறினார். இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல என்றும் இந்தியாவின் சுயமரியாதை, துணிச்சல் ஆகிய உணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு விழா என்றும் கூறினார். “ஜெய் பவானி, ஜெய் சிவாஜி” என்ற முழக்கம் இன்றும் கூட ஒவ்வொரு இந்தியரிடமும் அச்சமின்மை, தேசிய கடமை உணர்வைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி மகாராஜின் வீரத்திற்கு பெலகாவி பகுதியும் அதானி நிலமும் ஒரு சாட்சியாக இருந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். பெலகாவி மண்ணில், வீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அழியாத சரித்திரம் நிலைப்பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு நவீன இந்தியா முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிலை வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
Read More »தில்லியில் டிடிஏ-வால் பராமரிக்கப்படும் சாலைப் பகுதிகளில் காற்று தர மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு – குறைபாடுகளை சரி செய்ய வலியுறுத்தல்
தில்லி தேசிய தலைநகரப் பகுதியிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் 19 குழுவினர் 12.12.2025 அன்று சாலைகளை ஆய்வு செய்தனர். தில்லி முழுவதும் தில்லி மேம்பாட்டு ஆணையம் எனப்படும் டிடிஏ-வின் அதிகார வரம்பிற்குள் வரும் 136 சாலைப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை, ஆணையத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு, அமலாக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குளிர் காலத்தில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் அமலில் உள்ள சூழலில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு, சாலைகளில் உருவாகும் தூசி, மாநகராட்சி திடக்கழிவுகள், கட்டுமான கழிவுகள் போன்றவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில், 15 சாலைப் பகுதிகளில் அதிக அளவில் தெரியும் தூசி ஏற்படுவதும், 38 இடங்களில் மிதமான தூசி ஏற்படுவதும், 61 இடங்களில் குறைந்த தூசி ஏற்படுவதும், 22 இடங்களில் எந்தத் தூசியும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. சில சாலைப் பகுதிகளின் பராமரிப்பில் குறைபாடு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்தது. சாலைகளை முறையாக பராமரித்து தூசி குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Read More »குடியரசு துணைத்தலைவர், பிரதமர், பிற முக்கிய பிரமுகர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி
2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாடு இன்று நினைவு கூர்ந்தது. உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான பாதுகாப்புப் படையினருக்கும் பிற ஊழியர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது. மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் ஆகியோர் வீர மரணம் அடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மக்களவைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவைச் செயலாளர் திரு பி சி மோடி, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கும்போது உயிர்த்தியாகம் செய்த நமது துணிச்சலான பாதுகாப்புப் படையினர், பிற ஊழியர்கள் ஆகியோரின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன். …
Read More »இணையதள பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல்
மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான சிஇஆர்டி-ஐஎன், வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்காக இணைய பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் அமர்வை புதுதில்லியில் நேற்று (டிசம்பர் 12, 2025) நடத்தியது. இந்த அமர்விற்கு புதுதில்லியில் உள்ள சிஇஆர்டி-ஐஎன்-னின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹ்ல் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு கிருஷ்ணன் குமார் சிங் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு உட்பட அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். இணையதள பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்பு மதிப்பீடு, தகவல் பகிர்வு இணையதள குற்றச் சம்பவங்களுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், இந்தியாவில் உள்ள சிறப்பு பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றில் சிஇஆர்டி-ஐஎன்-னின் பங்கு குறித்து டாக்டர் பாஹ்ல் எடுத்துரைத்தார். தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் முன்கூட்டியே பாதுகாப்பை உறுதிசெய்து, அச்சுறுத்தல்களுக்கு எதிராக உரிய நேரத்தில் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் சிஇஆர்டி-ஐஎன் வழங்குகிறது …
Read More »தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் – காற்றுத் தர மேலாண்மை ஆணையம் நடத்தியது
காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் துணைக் குழுக் கூட்டம் நேற்று (12.12.2025) புதுதில்லியில் நடைபெற்றது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (ஜிஆர்ஏபி) கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் செயல்திறனையும் இக்கூட்டம் ஆய்வு செய்தது. குறிப்பாக தில்லியில் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த 23-வது துணைக் குழுக்கூட்டத்தில், தில்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் வரும், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா நிர்வாகங்கள் …
Read More »மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பம்பாய் ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டார்
பாம்பே ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் விளையாட்டு சிறப்புமிக்க பாரம்பரியம் மற்றும் தேசத்திற்கு அதன் நீடித்த கலாச்சார பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் துறை ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இந்த நினைவு தபால் தலையை மும்பையில் உள்ள பம்பாய் ஜிம்கானாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா முறையாக வெளியிட்டார். பம்பாய் ஜிம்கானாவின் தலைவர் திரு சஞ்சீவ் சரண் மெஹ்ரா, நவி மும்பை பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமிகு சுசிதா ஜோஷி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய திரு ஜோதிராதித்ய சிந்தியா, விளையாட்டைப் போலவே, இந்த அஞ்சல் முத்திரையும் கதைகளையும் மதிப்புகளையும் சுமந்து செல்கிறது. இளம் சிறுவர் சிறுமிகள் விளையாட்டுகளில் ஈடுபடவும், சுறுசுறுப்பாக இருக்கவும், வாழ்க்கையை நேர்மறையாக வடிவமைக்கும் நிறுவனங்களின் சக்தியை நம்பவும் தூண்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பம்பாய் ஜிம்கானா, இந்தியாவின் விளையாட்டு மற்றும் சமூக பாரம்பரியத்தின் ஒரு தனித்துவமான தூணாக நிற்கிறது. பல தலைமுறை விளையாட்டு வீரர்களை வளர்த்து வருகிறது, அதே நேரத்தில் கலாச்சார மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்கான துடிப்பான மையமாகவும் செயல்படுகிறது. ஒன்றரை நூற்றாண்டு காலமாக, விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் வலுவான சமூக ஈடுபாட்டு உணர்வை வளர்ப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
Read More »போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது – வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம்
வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளத. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததாக போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான உரிமைகோரல்களை முன்கூட்டியே கண்டறிந்து, …
Read More »
Matribhumi Samachar Tamil