Saturday, September 26 2026 | 03:12:40 PM
Breaking News

அஞ்சல் சேமிப்பு கணக்கை அதன் பல்வேறு கணக்குகளுடன் இணைப்பதற்கு இந்தியா அஞ்சலக வங்கி, நடவடிக்கை

இந்தியா அஞ்சலக வங்கி (ஐபிபிபீ) நாடு முழுவதும் 650 கிளைகளையும் 1.63 லட்சத்திற்கும் மேற்பட்ட அணுகல் மையங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக குஷிநகர் மாவட்டத்தில் ஒரு கிளையும் 224 அணுகல் மையங்களும் உள்ளன. சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், டெபிட் கார்டு, உள்நாட்டு பணப் பரிமாற்ற சேவைகள், காப்பீட்டுச் சேவைகள், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ், ஆதாரில் மொபைல் எண் புதுப்பித்தல் மற்றும் குழந்தை உள்பட பயனாளி இணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த வங்கி வழங்குகிறது. டிஜிட்டல் …

Read More »

தொலைத்தொடர்பு தொடர்பான மோசடிகளைத் தடுக்க நடவடிக்கைகள்

சைபர் குற்றம் மற்றும் நிதி மோசடிகளுக்கு தொலைத்தொடர்பு கருவிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், குடிமக்களைப் பாதுகாக்கவும், தொலைத்தொடர்புத் துறை  பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது: போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளைக் கண்டறிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைக் கொண்டு மறுபடியும் அவற்றை சரிபார்க்க ஒரு அமைப்பை உருவாக்குதல். மொபைல் சந்தாதாரர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் சஞ்சார் சாத்தி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி தொடங்கப்பட்டது. இவை சந்தேகத்திற்குரிய மோசடி மற்றும் வணிகத் தொடர்புகள் …

Read More »

தேசிய தொலைபேசி எண்ணை மாற்றியமைக்கும் திட்டத்திற்கான பரிந்துரையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது

தொலைபேசி எண்ணை மாற்றியமைப்பது தொடர்பான தேசிய திட்டத்திற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தொலைபேசி பயனாளர்கள், சேவை வழங்குநர்கள், கட்டமைப்பு கூறுகள், சாதனங்கள் மற்றும் அங்கீகார நிறுவனம் ஆகியவை குறித்த தனித்துவ அடையாளத்தைப் பயன்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு அடையாள குறியீடுகளின் அவசியத்தை இந்தப் பரிந்துரை குறிப்பிடுகிறது.  தற்போது டிஜிட்டல் முறையிலான ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகள் மூலம் லட்சக்கணக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் …

Read More »

தில்லி சர்வதேச தோல் கண்காட்சி – 2025 பிப்ரவரி 20-21 தேதிகளில் யஷோபூமியில் நடைபெறும்

தோல் ஏற்றுமதிக்கான கவுன்சிலானது தில்லி சர்வதேச தோல் கண்காட்சி 2025-ஐ பிப்ரவரி 20-21 தேதிகளில் புதுதில்லி ஐசிசி துவாரகாவில் உள்ள யஷோபூமியில் நடத்துகிறது. இந்தக் கண்காட்சியானது உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் சமீபத்திய தயாரிப்புகள், புதுமைப் படைப்புகள்  மற்றும் திறன்களை சாத்தியமான ஆதார மாற்றுகளைத் தேடும் சர்வதேச வாங்குபவர்களுக்கு காட்சிப்படுத்த ஒரு வலுவான தளத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மையான நிகழ்வாகும். “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும்  “தற்சார்பு இந்தியா” முன்முயற்சிகளுடன் இணைந்து, இந்தக் …

Read More »

“சிறந்த ஆரோக்கியத்திற்காக சதாவரி” என்ற நாடு தழுவிய இனங்கள் சார்ந்த பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது

மருத்துவ தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,”சிறந்த ஆரோக்கியத்திற்காக சதாவரி” என்ற இனங்கள் சார்ந்த பிரச்சாரத்தை, மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)  திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று  தொடங்கி வைத்தார். ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மகேஷ் குமார் தாதிச் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் …

Read More »

புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ மீண்டும் வருகிறது: பிரதமர்

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-ஐப் பார்க்குமாறு அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது மன அழுத்தமில்லாத தேர்வுகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 8 மிகவும் சுவாரஸ்யமான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது: “தேர்வு குறித்த கலந்துரையாடல் மீண்டும் வந்துவிட்டது, அதுவும் புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில்!” ”அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் …

Read More »

குடியரசுத் தலைவரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வின் தலைவர் திரு பிலிமோன் யாங், இன்று (பிப்ரவரி 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார். ஐக்கிய நாடுகள்  பொதுச் சபையின் அமர்வுத்  தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 80 ஆண்டுகள் என்னும் முக்கியமான மைல்கல்லை நாம்  எட்டும் நேரத்தில், ஐ.நா. பொதுச் சபையின் தலைமைப் பதவியை அவர் வகிப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார். 2025-ம் ஆண்டில் வளர்ச்சிக்கான நிதியுதவி …

Read More »

உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் பட உருவாக்க சவால் போட்டியில் 20 நாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து 3,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

வேவ்ஸ் என்றழைக்கப்படும் உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் நடைபெறும் பட உருவாக்க (ரீல் மேக்கிங்) சவால்  போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 3,379  விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தப் போட்டிக்கான வரவேற்பை இது  எடுத்துக்காட்டுகின்றன.  இந்த உச்சிமாநாட்டின் முக்கிய முயற்சியாக  தொடங்கப்பட்டுள்ள இந்தப் போட்டி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கிற்கான உலகின் மையமாக உருவெடுத்துவரும் இந்தியாவின் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் விரைவாக வளர்ந்து வரும் டிஜிட்டல் படைப்பாளர் பொருளாதாரத்தையும் …

Read More »

மகாகும்பமேளா 2025: 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறது

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க  பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் மொத்தம் 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகின்றன. இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம், யாத்ரீகர்கள் தினமும் தூய்மையான ஆர்ஓ (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) குடிநீரைப் பெறுகிறார்கள். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 …

Read More »

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து புதுதில்லியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும், கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து …

Read More »