இன்று (ஜனவரி 25, 2025) புது தில்லியில் நடைபெற்ற 15-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். “இந்திய வாக்குகள் 2024: ஜனநாயகத்தின் சகாப்தம்’’ புத்தகத்தின் முதல் பிரதியையும் தலைமைத் தேர்தல் ஆணையர் …
Read More »2025-குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரை
எனதருமை குடிமக்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தின விழாவையொட்டி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26 அன்று, நமது அடிப்படை ஆவணமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ மூன்று ஆண்டு விவாதங்களுக்குப் பின், 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அந்த நாள், …
Read More »குடியரசுத்தலைவருடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஜனவரி 25, 2025 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை கௌரவிக்கும் வகையில் அவருக்கு விருந்தளித்தார். இந்தியாவிற்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட அதிபர் திரு சுபியான்டோவை வரவேற்ற குடியரசுத்தலைவர், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நாகரீக உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றார். பன்மைத்துவம், உள்ளடக்கிய தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மதிப்புகள் இரு நாடுகளுக்கும் பொதுவானவை …
Read More »“புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” – இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்றது
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில் இன்று (24.01.2025) “புதிதாக பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை” நடத்தியது. பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் மீனாட்சி கணேசன், உரிமைதாரர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும் தரத்தைப் பேணுவது குறித்தும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும் அதைத் தொடர்ந்து அறிமுக தொகுப்பு (Welcome Kit) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உரிமம் பெற்றவர்கள் மற்ற புதிய உரிமம் பெற்றவர்களுடனும், பிஐஎஸ் அதிகாரிகளுடனும் தகவல் பரிமாற்ற வாய்ப்பையும் …
Read More »இந்தியாவில் சூரிய இயற்பியல் ஆராய்ச்சியின் 125 ஆண்டுகளை சர்வதேச சூரிய மாநாடு கொண்டாடுகிறது
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சூரிய இயற்பியலாளர்கள் இந்த வாரம் பெங்களூரில் ஒன்றிணைந்து சூரிய காந்தவியல், சூரிய – நட்சத்திர இணைப்பு, விண்வெளி வானிலை போன்ற துறைகளில் ஆராய்ச்சி குறித்து விவாதித்தனர். கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தின் 125 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ‘சூரியன், விண்வெளி வானிலை, சூரிய நட்சத்திர இணைப்புகள்’ குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆய்வகம் அதன் புகைப்பட படங்களின் களஞ்சியத்தின் …
Read More »தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக 600-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்
2025 ஜனவரி 26, அன்று புதுதில்லி, கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காண 600-க்கும் அதிகமான ஊராட்சி மன்றத் (பஞ்சாயத்து) தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைத்துள்ளது. இந்த சிறப்பு விருந்தினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் முதன்மைத் திட்டங்களின் கீழ் சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டம், இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), பிரதமரின் இலவச …
Read More »உலகளாவிய திருக்குறள் மாநாடு தில்லியில் விரைவில் நடத்தப்படும்: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
உலகளாவிய திருக்குறள் மாநாடு புதுதில்லியில் விரைவில் நடத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸ்: ஊக்குவிப்பு, தடுப்பு மற்றும் தலையீடு’ (Hypnosis across Lifespan: Promotion, Prevention, and Intervention) என்ற சர்வதேச மாநாட்டை இன்று (24 ஜனவரி 2025) தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், திருக்குறளின் கருத்துகள் நிலையானது என்றும், …
Read More »செமிகண்டக்டர் துறையில் உலகின் முதல் 3 இடங்களுக்குள் இந்தியா விரைவில் இடம்பெறும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் தொழில்துறை தலைவர்களிடையே உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு- தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த இந்தியாவின் பார்வையையும் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டும் வளர்ச்சியை அதிகரிப்பதாக இருப்பதால் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்தியா எடுத்துள்ள சமச்சீரான அணுகுமுறையை அவர் விளக்கினார். இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் இவை இரண்டும் ஒருங்கிணைந்தவை என்று அமைச்சர் கூறினார். …
Read More »“சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு”- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் ‘சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)’-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார். சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி போர்க்கள சென்சார்களிலிருந்து உள்ளீடுகளை பெற்று ஒருங்கிணைக்கிறது. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அவற்றை செயலாக்குகிறது. பாதுகாப்பான ராணுவ தரவு கட்டமைப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் …
Read More »மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கூட்டுறவு மாநாட்டில் உரையாற்றி, கூட்டுறவு தொடர்பான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய …
Read More »
Matribhumi Samachar Tamil