புதுதில்லியில் நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நீடித்த சுற்றுவரிசை குறித்த 3-வது சர்வதேச மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். ‘இயற்கை முறையில் மறுசுழற்சி’ என்ற கருபொருளில் நடைபெற்ற இந்த மாநாடு, வாகன உற்பத்தித் துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களை ஒன்றிணைத்து நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த அம்சங்களை விரிவாக விவாதித்தது. பயணியர் வாகன …
Read More »தேசிய மாணவர் படையினர் இந்தியாவின் சொத்துக்கள், அவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் பார்வையை நனவாக்க முயற்சிக்க வேண்டும்: என்.சி.சி குடியரசு தின முகாம் 2025-ல் பாதுகாப்பு அமைச்சர்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று தேசிய மாணவர் படையினரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று தில்லி கண்டோன்மெண்டில் நடைபெற்ற என்.சி.சி குடியரசு தின முகாமில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், தேசிய மாணவர் படையினர் அவர்கள் சேவையாற்றும் துறைகளுக்கு இடையே, என்.சி.சி அவர்களுக்கு கற்றுக்கொடுத்த ‘தலைமைத்துவம்’, ‘ஒழுக்கம்’, ‘லட்சியம்’,’தேசபக்தி’ …
Read More »உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் வெண்மைப் பொருட்களுக்கான ரூ.3,516 கோடி முதலீட்டுடன் 24 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
மூன்றாம் சுற்றில் மொத்தம் 24 நிறுவனங்கள் ரூ.3,516 கோடி அளவிற்கு முதலீடு செய்ய உள்ளதையடுத்து, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் குளிர்சாதனக் கருவிகள், எல்.ஈ.டி விளக்குகள் போன்ற வெண்மைப் பொருட்கள் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கென தயாரிக்கப்பட்ட பட்டியலில் 3-வது சுற்றில் மொத்தம் 38 நிறுவனங்களிடமிருந்த ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பிறகு 18 புதிய …
Read More »மக்களவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட இடையூறு ஏற்படுத்தல், கண்ணியக் குறைவு, நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவை குறித்து மக்களவை சபாநாயகர் கவலை தெரிவித்தார்
மக்களவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு இடையூறு விளைவிப்பது, அமர்வுகளின் எண்ணிக்கை குறைதல் ,நாடாளுமன்றத்திற்கான கண்ணியம் குறைந்து வருதல் ஆகியவல குறித்து மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கவலையும், வேதனையும் தெரிவித்தார். நாடாளுமன்றம் விவாதங்களுக்கானது என்றும், மக்கள் தங்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை உறுப்பினர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று கூறிய மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நாடாளுமன்றமானது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவதில் பின்தங்கியுள்ளது என்று எச்சரித்தார். …
Read More »ஃபிட் இந்தியா ஞாயிறு சைக்கிளிங்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது
குருகிராமில் 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுபவர்களுடன் பிரபல நடிகை குல் பனாக்கும் அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீட்டி பூராவும் ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ இயக்கத்தில் பங்கேற்றனர். கடந்த மாதம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவால் தொடங்கப்பட்ட இந்த நாடு தழுவிய வாராந்திர சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வின் கருப்பொருளாக இன்று சாலை பாதுகாப்பு அமைந்தது. “பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்துடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒரு அருமையான முயற்சி. போட்டி அரங்கங்களில் அதிக பதக்கங்களை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் உடற்பயிற்சி கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி ஃபிட் இந்தியா இயக்கம் என்று நான் நினைக்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் எளிதான முறையில் சைக்கிள் ஓட்டுதலுக்கு நேரம் ஒதுக்கலாம்” என்று குல் பனாக் கூறினார். பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் 80 க்கும் மேற்பட்டோர் கடும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் 11 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் நிகழ்வை நிறைவு செய்தனர். காந்திநகர் பிராந்திய மையத்தில், இந்தியா போஸ்டைச் சேர்ந்த 50 ரைடர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர். கொல்கத்தாவில் பீகார் ரெஜிமெண்டின் 15 வது பட்டாலியனைச் சேர்ந்த 50 பேர் சைக்கிள் ஓட்டினர். அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களிலும் ‘ஃபிட் இந்தியா சண்டே ஆன் சைக்கிள்’ நடத்தப்பட்டது. இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (CFI), மை பாரத் தளம் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் (MYAS) ஃபிட் இந்தியா சண்டே சைக்கிளிங் (Fit India Sunday on Cycle) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की …
Read More »மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றம் 2025-ல் பங்கேற்க உள்ளார்
டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2025-ல் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்க உள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, உள்ளடக்கிய வளர்ச்சி, மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவரது பயணம் எடுத்துக்காட்டுகிறது. உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் மாதிரி டாவோஸுக்குப் புறப்படுவதற்கு முன்பு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், …
Read More »சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியாக்கள், 2021 முதல் கைது: ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை
ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) 2021ம் ஆண்டு முதல் 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியா சமூகத்தினர் உட்பட 916 நபர்களைக் கைது செய்துள்ளது. இது தேசத்தைப் பாதுகாப்பதற்கான ரயில்வே பாதுகாப்புப் படையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. 2024 ஜூன், ஜூலையில், வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கீழ் உள்ள பகுதிகளில் 88 பங்களாதேஷ், ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோரை ரயில்வே பாதுகாப்புப் படை கைது செய்தது. இந்த நபர்களில் சிலர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை …
Read More »சேவை வழங்கலை மேம்படுத்தவும், உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் இபிஎஃப்ஓ, பிஎஃப் பரிமாற்ற செயல்முறையை எளிதாக்குகிறது
அதன் உறுப்பினர்களுக்கு எளிதாக வழங்குவதை உறுதி செய்வதற்காக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (இபிஎஃப்ஓ – EPFO) வேலை மாற்றத்தின் போது வருங்கால வைப்பு நிதிக் (பிஎஃப்- PF) கணக்கை மாற்றுவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இதில் முந்தைய அல்லது தற்போதைய வேலை வழங்குநர் மூலம் இணையதள பரிமாற்ற உரிமைகோரல்களை வழிநடத்துவதற்கான தேவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எதிர்காலத்தில் 1.30 கோடி மொத்த பரிமாற்ற உரிமைகோரல்களில் 1.20 கோடிக்கும் அதிகமானவை, அதாவது மொத்த உரிமை கோரல்களில் 94% வேலை வழங்குநரின் தலையீடு தேவையில்லாமல் நேரடியாக இபிஎஃப்ஓ-வு க்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சில சூழ்நிலைகளில் இடமாற்ற கோரிக்கைகளுக்கு ஒரு உறுப்பினர் வேலையை விட்டு மற்றொரு நிறுவனத்தில் சேரும்போது வேலை வழங்குநரின் ஒப்புதல் தேவையில்லை. 2024 ஏப்ரல் 1 முதல் இன்று வரை, இணையதள பயன்முறையில் சுமார் 1.30 கோடி பரிமாற்ற உரிமைகோரல்கள் இபிஎஃப்ஓ-வால் ஆல் பெறப்பட்டுள்ளன. அவற்றில் தோராயமாக 45 லட்சம் உரிமைகோரல்கள் தானாக உருவாக்கப்பட்ட பரிமாற்ற உரிமைகோரல்களாகும். இது மொத்த பரிமாற்ற உரிமைகோரல்களில் 34.5% ஆகும். இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை நேரத்தை கணிசமாகக் குறைக்கும். இது உறுப்பினர்களின் குறைகளை கணிசமாகக் குறைக்கும். உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும், நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சிகள் பிரதிபலிக்கின்றன. भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : …
Read More »ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 111-வது செயற்குழு கூட்டம் – முக்கிய சீர்திருத்தங்கள், உறுப்பினர் சேவைகளில் மேம்பாடு குறித்து ஆலோசனை
இபிஎஃப்ஓ அமைப்பின், மத்திய அறங்காவலர் வாரியத்தின் நிர்வாகக் குழுவின் (EC) 111-வது கூட்டம் நேற்று (2025 ஜனவரி 18) புதுதில்லியில் உள்ள இபிஎஃஓ தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகச் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நடைபெற்றது. அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், வேலை வழங்கும் நிறுவனங்கள், ஊழியர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் (i) மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட அமைப்பு (CITES) …
Read More »அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு – நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, நாளை 2025 ஜனவரி 20 புதுதில்லியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர், ஷோபா கரந்தலஜே தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா ஆகியோரும் இந்த கருத்தரங்கின் தொடக்க அமர்வில் கலந்து …
Read More »
Matribhumi Samachar Tamil