பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கான ஏவுதள கட்டமைப்பை உருவாக்குவதோடு ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்திற்கான ஆயத்த ஆதரவு ஏவுதளமாக செயல்படவும் செய்யும். இது எதிர்கால …
Read More »கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளன: பிரதமர்
ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் ஒன்பதாண்டு நிறைவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாற்றத்துக்கான இந்த சிறந்த திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அரசைப் பொறுத்தவரை, புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று திரு நரேந்திர மோடி மீண்டும் கூறியுள்ளார். ஸ்டார்ட் அப் …
Read More »உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ பிரதமர் நாளை(ஜனவரி 17) தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான கண்காட்சியான உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ (பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025) பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (17 ஜனவரி 2025) காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார். இந்தக் கண்காட்சி 2025 ஜனவரி 17 முதல் 22 வரை மூன்று தனித்தனி இடங்களில் நடைபெறும்: புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் …
Read More »செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை: பிரதமர்
கியூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் தரவரிசையில், டிஜிட்டல் திறன்களில் கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தாண்டி இந்தியா 2-வது இடத்தைப் பிடித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக, நமது இளைஞர்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், செல்வ வளத்தை உருவாக்குவத்றகும் திறன்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பணியாற்றி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை …
Read More »ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் ஜனவரி 18 அன்று வழங்குகிறார்
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஜனவரி 18 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்குகிறார். அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ …
Read More »ஐஐடி மெட்ராஸ், 3-வது ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்கக்கும் இடையிலான கலாச்சார தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். …
Read More »ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் ஹெய்ம்டெக்ஸ்டில் 2025 ஜவுளி கண்காட்சியில் இந்திய அரங்கை ஜவுளி அமைச்சர் திறந்து வைத்தார்
மெஸ்ஸே பிராங்பேர்ட்டில் நடைபெறும் ஹெய்ம்டெக்ஸ்டில் 2025 ஜவுளி கண்காட்சியில் இந்திய அரங்கை மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் திறந்து வைத்ததன் மூலம் ஜவுளித் துறையில் இந்தியா தனது வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்தி உள்ளது. இந்த மதிப்புமிக்க உலகளாவிய வீட்டு ஜவுளி கண்காட்சியில் மிகப்பெரிய நாடாக பங்கேற்றதன் மூலம், புதுமை, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா நிரூபித்துள்ளது. உலகளாவிய வீட்டு ஜவுளி ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் இடையே உரையாற்றிய …
Read More »அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடுர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்
கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் தேசிய மாற்றம் குறித்த சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் போது, அட்டர்னி ஜெனரல் திருமதி டோர்காஸ் அகிக் அபுயா ஓடூர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சி நல்லாட்சிக்கான தேசிய மையத்தால் வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி …
Read More »ஜவஹர் நவோதயா வித்யாலயா 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-2024-ன் பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கிடையிலான 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசளிப்பு விழா நாளை (2025 ஜனவரி 16 வியாழக்கிழமை) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நடைபெற உள்ளது. சட்டம், நீதித்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், விழாவிற்குத் தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்குவார். இந்நிகழ்ச்சியில், ஜவஹர் …
Read More »சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான திரு அமித் ஷா, 2025 ஜனவரி 16-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் ‘விரைவு குடியேற்றப் பதிவு சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் ஏற்கனவே 2024 ஜூன் 22-ம் தேதி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திலிருந்து இந்தத் திட்டத்தை …
Read More »
Matribhumi Samachar Tamil