Wednesday, January 28 2026 | 10:48:33 PM
Breaking News

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் திருத்தம்

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை உருவாக்குவது அல்லது திருத்துவது தொடர்பாக இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் / தொழில்துறை வல்லுநர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் பெறப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வகுத்து சட்ட முன்வடிவை உருவாக்கும் வகையில் பத்தி 1.07ஏ மற்றும் 1.07பி  ஆகியவற்றைச் சேர்க்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் உரிய  திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்  …

Read More »

புத்தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், புத்தொழில் கொள்கை அமைப்புடன் டிபிஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வியாழக்கிழமை அன்று இந்தியாவின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற புத்தொழில் கொள்கை அமைப்புடன் (எஸ்பிஎஃப்) வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புத்தொழில் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜனவரி 15-16 தேதிகளில் பாரத் மண்டபத்தில் நிறுவனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இந்த நிகழ்வு டிபிஐஐடி, எஸ்பிஎஃப் இடையே …

Read More »

தில்லியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு மோடி, அவர்களுக்கு தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் …

Read More »

கிராமப்புற பாரத திருவிழா 2025-ஐ பிரதமர் ஜனவரி 4 –ம் தேதி புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத திருவிழா 2025- ஐ தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடையே அவர் உரையாற்றுகிறார். கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா ஜனவரி 4 முதல் 9 வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும். இத்திருவிழாவில் விவாதங்கள், பட்டறைகள், பயிற்சி வகுப்புகள் மூலம், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தற்சார்பு பொருளாதார நிலையை உருவாக்குதல், கிராமப்புற சமூகங்களிடையே புதுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் சிறப்பு கவனம் செலுத்தி, கிராமப்புற மக்களிடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி பாதுகாப்பை ஊக்குவித்தல், நிதி உள்ளடக்கம், நிலையான விவசாய நடைமுறைகளை செயல்படுத்துதல் மூலம் இதன் குறிக்கோள்களை எட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். தொழில்முனைவோர் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாக இருக்கும். அரசு அதிகாரிகள், வழிகாட்டும் தலைவர்கள், கிராமப்புற தொழில்முனைவோர், கைவினைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஒன்றிணைத்து கிராமப்புற மாற்றத்திற்கான வரைபடத்தை உருவாக்குதல்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பம், புதுமையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்களை ஊக்குவித்தல், கண்காட்சிகள்  ஆகியவை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत 1885 से 1950 …

Read More »

சனாதனம் என்பதை இந்து என்று குறிப்பிடப்படுவது குழப்பமானதாகவும், முரண்பாடாகவும் வேதனையாகவும் உள்ளது: குடியரசு துணைத்தலைவர்

இந்து, சனாதனம் போன்றவை தொடர்பான குறிப்புகள் பாரதத்தில் குழப்பமானதாகவும், முரண்பாடாகவும் வேதனையாகவும் உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்  தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற வேதாந்தாவின் 27-வது சர்வதேச மாநாட்டில் தொடக்க உரையாற்றிய திரு தன்கர், “நம் பழமையான நாகரிகங்களில் ஒன்று, பல்வேறு வழிகளில் தனித்துவமான, இணையற்ற நாகரீகமாகும்.   இந்தியாவில் சனாதனம் என்று குறிப்பிடும்போது, இந்து என்ற குறிப்பு புரிந்துகொள்ள முடியாத  அளவிற்கு குழப்பமானதாகவும், முரண்பாடாகவும், வேதனையாகவும் உள்ளது என்று தெரிவித்தார். இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, மக்கள்  அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இந்த ஆன்மீக பூமியில் இருக்கும் சிலர், வேதாந்தம், சனாதனம் தொடர்பான நூல்களை பிற்போக்குத்தனமானவை என்று நிராகரிக்கின்றனர். அவர்கள் அது குறித்து அறிந்து கொள்ளாமல்  அதனை நிராகரிக்கின்றனர். இந்த நிராகரிப்பு பெரும்பாலும் வக்கிரமான காலனிய மனநிலைகளை கொண்டதாகவும், நமது அறிவுசார் பாரம்பரியத்தைப் பற்றிய   புரிதல் இல்லாத தன்மையையும் எடுத்துரைக்கின்றன. மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தை திரித்து கூறுவதன் பாதகமான சிந்தனைகளை கொண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற  செயல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள மதச்சார்பின்மை ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.  எனவே இந்த அடிப்படை கூறுகளை மக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

Read More »

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்(நிம்ஹான்ஸ்) பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்

பெங்களூருவில் உள்ள  தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் இன்று (ஜனவரி 3, 2025) நடைபெற்ற  பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார் . நிகழ்ச்சியில் பேசிய அவர் , புதுமையான ஆராய்ச்சிகள், தனித்தன்மை வாய்ந்த நோயாளிகளை கவனிப்பதை உள்ளடக்கிய கடுமையான கல்வித் திட்டங்கள் ஆகியவை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை முதன்மை நிறுவனமாக மாற்றியுள்ளன என்றார். சமூக அடிப்படையிலான மனநல சுகாதாரத்தில் …

Read More »

கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 3, 2025) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , உலகளாவிய ஆய்வின்படி, உலகில் இறப்புக்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறினார். 2022-ம் ஆண்டில், உலகளவில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் இருந்ததாகவும் 9.7 மில்லியன் இறப்புகள் புற்றுநோயால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 100 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் …

Read More »

ஐஐடி மெட்ராஸ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் விஸ்தார் (VISTAAR) திட்டத்தில் இணைந்து செயல்படவிருக்கிறது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேளாண் விரிவாக்க முறையின் செயல்திறனையும் வலிமையையும் மேம்படுத்தும் விஸ்தார் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளது. விவசாய விரிவாக்க முறையை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம்தான் விஸ்தார். புதிய தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைக்குக் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளையும் திறன்களையும் ஸ்டார்ட்-அப்கள் வழங்குகின்றன. விவசாயத் துறையில் உள்ள சூழல் காரணமாக, விநியோகம்- தேவை ஆகிய …

Read More »

பிஎஸ்என்எல், ஏஐஎம்ஓ இணைந்து ஸ்மார்ட்ஃபோன் சேவையில் முதல் திறன் பயிற்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, அனைத்து இந்திய உற்பத்தியாளர்களின் அமைப்புடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இளைஞர்களை சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வலுவூட்டுவதற்கும், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறையில் தொழில் முனைவு மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சுமார் 20 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் சேவை பயிற்சி குறித்த 3 நாள் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை பிஎஸ்என்எல் …

Read More »

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2024 -ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது

2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 2025 ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார். குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்குப் பிறகும், கீழ்க்கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது 2024 வ. எண் விளையாட்டு …

Read More »