Thursday, December 19 2024 | 12:50:58 PM
Breaking News

Tag Archives: இந்தியா

இந்திய ஏரோஸ்பேஸ் மருத்துவ சொசைட்டியின் 63-வது ஆண்டு மாநாடு

இந்தியன் சொசைட்டி ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் இன்ஸ்டிடியூட் (ஐஎஸ்ஏஎம்) 63வது ஆண்டு மாநாடு 2024 டிசம்பர் 05 முதல் 07 வரை பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் (ஐஏஎம்) வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துணைத் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்பி தர்கர் தொடங்கி வைத்தார். பாதுகாப்புப் படைகளில் தற்சார்பை அடைவதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நிகழ்ச்சியில் பேசிய அவர் வலியுறுத்தினார்.  வான்வெளி மருத்துவத்தில் இளம் கல்வி சாதனையாளர்களை அவர் …

Read More »

நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு முக்கியமானது: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

புதுதில்லி/ குருகிராம் (ஹரியானா), 07 டிசம்பர் 2024: இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு தனிநபரையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்ட “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு முக்கியம் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். ஒவ்வொரு நபருக்கும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், சமமான வாய்ப்புகள், உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். குருகிராமில் நேற்று …

Read More »

காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு

காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் தற்போது வலுவடைந்துள்ளது என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக  அறிவித்துள்ளார். காசநோய் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா எழுதிய கட்டுரையை மக்கள் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் …

Read More »

ஆயுதப்படை கொடி நாள் என்பது நமது துணிச்சலான வீரர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவதாகும்: பிரதமர்

ஆயுதப் படைகளின் கொடி தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, இது நமது வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவம் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “ஆயுதப் படைகளின் கொடி நாள் என்பது நமது துணிச்சலான வீரர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாகும். அவர்களின் துணிச்சல் …

Read More »

இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கு தொழில்நுட்பம் சென்றடைவதைக் கண்டு உலகமே வியப்படைகிறது; குடியரசுத் துணைத்தலைவர்

140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறி வருவதை உலகமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று குடியரசு  துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் சேவை வழங்குவது எளிதாக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்திற்காக வரிசையில் நிற்பது, நிர்வாகச் சேவைக்காக வரிசையில் நிற்பது என்ற நிலை மாறி ,  இன்று இவை அனைத்தும் நம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டன. இது சிரமமின்றி நடக்கிறது. இது ஒரு பெரிய புரட்சி என்று அவர் குறிப்பிட்டார். …

Read More »

ராய்ரங்கபூரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு ஒடிசாவில் பாங்கிரிபோசி-கொருமாஹிசானி, புராமரா-சாக்குலியா, பதம்பஹர்-கெந்துஜர்கர் ஆகிய மூன்று ரயில் பாதைத் திட்டங்களுக்கு இன்று (07.12.2024) அடிக்கல் நாட்டினார். அத்துடன் பழங்குடியினர் ஆராய்ச்சி – மேம்பாட்டு மையம், டான்ட்போஸ் விமான நிலையம், ஒடிசாவின் ராய்ரங்பூரில் உள்ள துணைப்பிரிவு மருத்துவமனையின் புதிய கட்டடம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்த மண்ணின் மகள் என்பதில் தான் எப்போதும் பெருமை கொள்வதாகக் கூறினார். பொறுப்புகள், வேலை பளுமிக்க சூழல் போன்றவை தம்மை …

Read More »

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் 7-வது பதிப்பு 2024 டிசம்பர் 11-ம் தேதி தொடங்குகிறது

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  7-வது பதிப்பு ஒரே நேரத்தில் 2024 டிசம்பர் 11-ம் தேதி நாடு முழுவதும் 51 மையங்களில் தொடங்குகிறது.  மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  என்பது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மாணவர் குழுக்கள், …

Read More »

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்காக டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு, நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு  நாம் தலை வணங்குவோம். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்கான டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. இன்று, அவரது பங்களிப்புகளை நாம் நினைவுகூரும் அதே வேளையில், அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமிக்கு’ நான் சென்றபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Read More »

அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது உட்பட கடந்த 2 ஆண்டுகளில் பல தேசிய, சர்வதேச நிகழ்வுகளுக்கு பாரத மண்டபம் சாட்சியாக திகழ்ந்துள்ளது …

Read More »