Monday, January 12 2026 | 04:07:55 AM
Breaking News

Tag Archives: பிரதமர் அஞ்சலி

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்காக டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு, நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு  நாம் தலை வணங்குவோம். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்கான டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. இன்று, அவரது பங்களிப்புகளை நாம் நினைவுகூரும் அதே வேளையில், அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமிக்கு’ நான் சென்றபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Read More »