ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள முன்னேறும் ஆர்வ மாவட்டங்களில் சேவை இல்லாத 7,287 கிராமங்களில் 4,779 செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்தகைய கிராமங்கள் அனைத்துக்கும் மொபைல் சேவையை படிப்படியாக வழங்குவதற்கு இத்திட்டம் வகைசெய்கிறது. 31.10.2024 நிலவரப்படி, 3,352 கிராமங்களில் சேவை கிடைக்கும் வகையில் 2,177 மொபைல் கோபுரங்கள் அமைக்ககப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மொபைல் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்ட கிராமங்களின் பட்டியல் https://dot.gov.in/circular-and-notifications/3294 என்ற இணையதள இணைப்பில் உள்ளது. மக்களவையில் இன்று கேள்வி …
Read More »