இந்திய நிறுவன சட்ட சேவை, விமானப் படை பாதுகாப்பு, தர உத்தரவாத சேவை, மத்திய தொழிலாளர் சேவை ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளே, வணக்கம்! இந்த மதிப்புமிக்க சேவைகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உங்கள் ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் சாதனையும், உறுதிப்பாடும், விடாமுயற்சியின் பிரதிபலிப்பாகும். பொது சேவையின் சவால்களை நீங்கள் ஏற்கும்போது, உங்கள் முடிவுகளும் செயல்களும் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அந்தந்த களங்களில், நீங்கள் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான முன்னோடிகளாக செயல்பட வேண்டும். இந்திய நிறுவன சட்ட சேவைப் பயிற்சி …
Read More »புதுதில்லி உலக புத்தக கண்காட்சி 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) புதுதில்லியில் 2025-ம் ஆண்டுக்கான புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புத்தகங்கள் படிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம். பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களிலிருந்து வரும் புத்தகங்களைப் படிப்பது, பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்குகிறது. புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளையும், …
Read More »2025-குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரை
எனதருமை குடிமக்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தின விழாவையொட்டி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26 அன்று, நமது அடிப்படை ஆவணமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ மூன்று ஆண்டு விவாதங்களுக்குப் பின், 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அந்த நாள், …
Read More »ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. …
Read More »
Matribhumi Samachar Tamil