இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் அவருடன் நடைபெறும் உரையாடல்களை எதிர்நோக்கி இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையேயான நட்பு காலத்தால் மாறாத ஒன்று எனவும், இது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட பகவத் கீதை நூலின் பிரதியை ரஷ்ய அதிபர் …
Read More »இந்தியா-ரஷ்யா இடையேயான வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாட்டு வேளாண் அமைச்சர்கள் சந்திப்பு
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், கிருஷி பவனில் ரஷ்ய கூட்டமைப்பின் வேளாண் அமைச்சர் திருமதி ஒக்ஸானா லூட்டுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். அங்கு இரு தரப்பினரும் தற்போதைய ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்ததுடன், எதிர்கால ஒத்துழைப்பு வழிவகைகள் குறித்து ஆலோசித்தனர். இந்தியா-ரஷ்யா உறவுகள் நம்பிக்கை, நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர்கள் குறிப்பிட்டனர். தற்போது சுமார் 3.5 பில்லியன் …
Read More »பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்ஸ் நாடுகள் கையெழுத்து
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்சின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநரகம் இடையே தொழில்நுட்ப அடிப்படையிலான ஆராய்ச்சிக் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . புதுதில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இன்று (20.11.2025) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிரான்சின் தேசிய ஆயுதப் பிரிவு இயக்குநர் …
Read More »இங்கிலாந்துடனான விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவின் கடல் உணவுத் தொழில், 70% ஏற்றுமதி வளர்ச்சி காணும்
ஜூலை 24, 2025 அன்று விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-இங்கிலாந்து பொருளாதார உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொழுத்தானது. மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு. ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது. குறிப்பாக, கடல் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நீக்குகிறது, இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இது குறிப்பாக இறால், உறைந்த மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கடல் பொருட்களின் ஏற்றுமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜவுளி, தோல் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த துறைகளுடன் அதன் முக்கிய கடல் உணவு இலக்குகளில் ஒன்றான இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும். தற்போது இங்கிலாந்துக்கு இந்தியாவின் முக்கிய கடல் உணவு ஏற்றுமதிகளில் வன்னாமி இறால், உறைந்த கணவாய், நண்டுகள், உறைந்த மீன்கள் மற்றும் கரும்புலி இறால் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின் வரி இல்லாத அணுகலின் கீழ் மேலும் சந்தைப் பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி 7.38 பில்லியன் டாலரை (ரூ 60,523 கோடி) எட்டியது, ஒப்பந்தம் இப்போது அமலில் உள்ளதால், வரும் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான கடல்சார் ஏற்றுமதியில் 70% அதிகரிப்பு இருக்கும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மீன்வளத் துறை சுமார் 28 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது. 2014–15 …
Read More »சுகாதார – தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது: இ.டி. மருத்துவர்கள் தின மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
எக்கனாமிக் டைம்ஸ் (இ.டி.) டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் தின மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முக்கிய உரையாற்றினார். திரு ஜிதேந்திர சிங் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரும் மருத்துவ பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக உள்ளது என நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார். பொருளாதாரத்தில் உலக அளவில் 10-வது இடத்திலிருந்து 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது எனவும் இந்த ஏற்றம் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணம், உள்நாட்டு உயிரி அறிவியல் கருவிகளை சுமந்து சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார். விரைவில் ஒரு புதிய மருத்துவத் துறையான விண்வெளி மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு மைல்கல் இது என்று அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில், மருத்துவக் கல்வியில் விண்வெளி மருத்துவர்கள் என்ற ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாகலாம் எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியாவில் 70% க்கும் அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றாலும், வயதான மக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகின்றது என அவர் தெரிவித்தார். 1947-ம் ஆண்டில், சராசரி ஆயுட்காலம் 50-55 வயதாக இருந்தது எனவும் இப்போது அது 80-ஐ நெருங்குகிறது எனவும் அவர் கூறினார். இந்தியாவின் சமீபத்திய உலகளாவிய சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நோய்த் தடுப்பு மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கோவிட்-19-க்கான உலகின் முதல் மரபணு தடுப்பூசியையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஹெச்பிவி தடுப்பூசியையும் இந்தியா உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஹீமோபிலியாவிற்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது எனவும் இதன் முடிவுகள் மதிப்புமிக்க நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தனியார் துறையுடனான முதல் கட்ட ஒத்துழைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சாதனைகள் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் ஆன்மா இரண்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Read More »இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தப்படாத குழந்தைகள் விகிதம் 0.06 சதவீதமாக குறைந்தது – குழந்தைகள் ஆரோக்கியத்தில் உலகளாவிய முன்மாதிரியாக இந்தியா திகழ்கிறது
நோய்த் தடுப்பிலும் ஆரோக்கிய பராமரிப்பிலும் தடுப்பூசி மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. நோய்த்தடுப்புக்கு இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அதன் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (UIP) மூலம் தெளிவாகிறது. இது ஆண்டுதோறும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் 2.6 கோடி குழந்தைகளுக்கும் (1 வயது வரை உள்ள குழந்தைகள்) இலவச தடுப்பூசி சேவைகளை வழங்குகிறது. நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் 1.3 கோடிக்கும் மேற்பட்ட நோய்த்தடுப்பு முகாம்களை நடத்துகிறார்கள். நாடு முழுவதும் தொடர்ச்சியான, முயற்சிகள், தடுப்பூசி இயக்கங்கள், இந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியதன் விளைவாக, மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. 2023-ல் 0.11 சதவீதத்திலிருந்து 2024-ல் 0.06 சதவீதமாக இது குறைந்துள்ளது. இந்த அணுகுமுறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது. நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த நடப்பு ஆண்டில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சாதனைகள் இந்தியாவை குழந்தை ஆரோக்கியத்தில் உலகளாவிய முன்மாதிரியாக நிலைநிறுத்தியுள்ளன. இதனை ஐநா குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான நிறுவனங்களுக்கு இடையேயான குழு (UN IGME), அதன் 2024-ம் ஆண்டு அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. மார்ச் 6, 2024 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவிற்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளை அதிகம் செலுத்தியதற்கான சாம்பியன் விருது வழங்கப்பட்டது. வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவை காரணமாக குழந்தைகள் இறப்பது கணிசமாக குறைந்துள்ளது. உயிர் காக்கும் தடுப்பூசிகளே இதற்குக் காரணம். தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள்: * தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிகம் உள்ள 11 மாநிலங்களில் உள்ள 143 மாவட்டங்களில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. * இந்திரதனுஷ் திட்டம் : மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 5.46 கோடி குழந்தைகளுக்கும், முன்னர் தடுப்பூசி போடப்படாத அல்லது முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்ட 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. * பல்ஸ் போலியோ இயக்கங்கள்: இந்தியா 2014 முதல் போலியோ இல்லாத நிலையைப் பராமரித்து வருகிறது. * கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து: சமூக மட்டத்தில் நோய்த்தடுப்பு மற்றும் வெளிநடவடிக்கைகளுக்காக தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படுகிறது. * பல அடுக்கு பணிக்குழுக்கள்: மாநில, மாவட்டம், மற்றும் பகுதி அளவிலான பணிக்குழுக்கள் ஒருங்கிணைந்த தடுப்பூசிப் பணிகளை இந்தக் குழுக்கள் உறுதி செய்கின்றன. * வழக்கமான தகவல், கல்வி, மக்கள் தொடர்பு இயக்கங்கள்: விழிப்புணர்வை அதிகரிக்கவும் தடுப்பூசிகள் மீதான தயக்கத்தை ஒழிக்கவும் இந்தப் பிரச்சார இயக்கங்கள் உதவுகின்றன.
Read More »கென்யா, மடகாஸ்கர் நாடுகளுக்குப் பாதுகாப்பு இணையமைச்சர் நாளை முதல் 3 நாட்கள் பயணம்
பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையிலான இந்தியக் குழு நாளை முதல் (2025 ஜூன் 23) 26-ம் தேதி வரை 3 நாட்கள் கென்யா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் கட்டமாக இந்தியா, கென்யா நாடுகளைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த வீரர்களை கௌரவிக்கும் போர் நினைவுச்சின்னத்தை தைட்டா-டவேட்டா பகுதியில் கூட்டாகத் திறந்து வைப்பதற்காக நாளை (2025 ஜூன் 23) பாதுகாப்பு இணையமைச்சர் கென்யாவுக்குச் செல்கிறார். …
Read More »லண்டனில் நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல் இந்தியாவின் உத்திசார் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார்
லண்டனில் இன்று நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல், இந்தியாவின் உத்தி ரீதியான உலகளாவிய கண்ணோட்டத்தையும் பொருளாதாரத் தலைமையையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார். மே 2025 இல் இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அவரது வருகை ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. “ஒப்பந்தம் முதல் செயல் வரை: இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இந்திய …
Read More »சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சைப்ரஸ் நாடுகள் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு …
Read More »இந்தியாவுக்கும் சைப்ரஸ் குடியரசுக்கும் இடையேயான விரிவான கூட்டாண்மையை செயல்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனம்
1. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் மற்றும் நீடித்த கூட்டாண்மை சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் …
Read More »
Matribhumi Samachar Tamil