Sunday, December 07 2025 | 03:39:35 PM
Breaking News

Tag Archives: meets

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை திரிபுரா முதலமைச்சர் சந்தித்தார்

திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று (16.02.2025) மத்திய அறிவியல், தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு, நிர்வாக விஷயங்கள், மூங்கில் தொழிலை ஊக்குவித்தல் உள்ளிட்ட மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விவாதித்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு மூலம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி – பங்களாதேஷ் இடையேயான இணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டணியில், குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, தூய்மையான எரிசக்தி, குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பீடு செய்தனர். குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக 2024 செப்டம்பரில் அமெரிக்கா சென்றது உட்பட அதிபர் …

Read More »

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 67-வது நிறுவன தினத்தையொட்டி மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஜனவரி 02 ) புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமையகத்திற்குச் சென்று, 67-வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஆயத்தப்படுத்துவதன் மூலம் …

Read More »

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை  ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் பெருமையாக விளங்கும் செஸ் சாம்பியனான குகேஷுடன் ஒரு …

Read More »

பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி இன்று புதுதில்லியில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”

Read More »

நித்தி ஆயோக்கில் பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் சந்திப்பு

2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார். “உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்” என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக …

Read More »

குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத்  பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் நட்புறவுகளை நினைவுகூர்ந்த தலைவர்கள், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தங்கள் முழு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தச் சூழலில், இருதரப்பு உறவை ‘ உத்திபூர்வ  கூட்டாண்மை’யாக உயர்த்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். குவைத்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலம் வாய்ந்த இந்திய சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ததற்காக அமீருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத்தின் வளர்ச்சியில் பெரிய மற்றும் துடிப்பான இந்திய சமூகத்தின் பங்களிப்பிற்கு  அமீர் பாராட்டு தெரிவித்தார்.  குவைத் தனது தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நிறைவேற்றும் புதிய முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இந்த மாத தொடக்கத்தில் ஜிசிசி உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அமீருக்கு வாழ்த்து தெரிவித்தார். அரேபிய வளைகுடாக் கோப்பையின் தொடக்க விழாவில் நேற்று ‘கெளரவ விருந்தினராக’தம்மை அழைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குவைத் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் மதிப்புமிக்க பங்குதார நாடாக  இந்தியாவின் பங்கிற்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, பிரதமரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமீர் கூறினார். குவைத் தொலைநோக்குப் பார்வை 2035-ஐ நனவாக்குவதில் இந்தியாவின் பெரும் பங்கு மற்றும் பங்களிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அமீர் கூறினார்.  இந்தியாவுக்கு வருமாறு அமீருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்

Read More »

குவைத்தின் பட்டத்து இளவரசரை பிரதமர் சந்தித்தார்

குவைத் நாட்டின்  பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 2024 செப்டம்பரில் ஐநா பொதுச்சபை அமர்வின்போது , பட்டத்து  இளவரசரை சந்தித்ததை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். குவைத் உடனான இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் சிறப்பாக முன்னேறி வருவதை ஒப்புக் கொண்ட தலைவர்கள், ஒரு உத்திபூர்வ  கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டதை வரவேற்றனர். ஐ.நா மற்றும் பிற பலதரப்பு மன்றங்களில் இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர்கள் வலியுறுத்தினர். குவைத் தலைமைத்துவத்தின்  கீழ் இந்தியா-ஜிசிசி உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பரஸ்பரம் வசதியான தேதியில் இந்தியாவிற்கு வருகை தருமாறு குவைத்தின் பட்டத்து இளவரசருக்கு  பிரதமர் அழைப்பு விடுத்தார்.  குவைத்தின் பட்டத்து இளவரசர், பிரதமரைக் கௌரவித்து விருந்து அளித்தார்.

Read More »

குவைத் பிரதமரை, பிரதமர் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு,  சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம்  குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள்,  தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன்,  கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் முன்னிலையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கலாச்சார பரிமாற்ற திட்டம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டம் மற்றும் குவைத் சர்வதேச சோலார் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா வருமாறு குவைத் பிரதமருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

Read More »

ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு, குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

ஆர்மீனிய நாடாளுமன்றத் தலைவர் திரு ஆலன் சிமோனியன் தலைமையிலான ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு இன்று (டிசம்பர் 16, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியா – ஆர்மீனியா இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார தொடர்புகளையும் தற்கால உறவுகளையும் நினைவு கூர்ந்தார். உலகளாவிய  அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் ஆர்மீனியா …

Read More »