Friday, January 02 2026 | 05:36:00 AM
Breaking News

Tag Archives: Republic Day Parade

முதல் முறையாக மூன்று அரசு 2025 குடியரசு தின அணிவகுப்பில் பள்ளி இசைக்குழு குழுக்கள் பங்கேற்கின்றன

2025 ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக மூன்று அரசுப் பள்ளி அணிகள் பங்கேற்க உள்ளன.  ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூமில் உள்ள பிஎம் ஸ்ரீ கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா படாம்டாவைச் சேர்ந்த குழு, குடியரசுத் தலைவர் மேடைக்கு எதிரே உள்ள ரோஸ்ட்ரமில் நிகழ்ச்சியை நடத்தும் பெருமையைப் பெறும்.  சீனியர் செக் ஸ்கூல் வெஸ்ட் பாயிண்ட், காங்டாக், சிக்கிம் மற்றும் பிஎம் ஶ்ரீ கேந்திரிய வித்யாலயா எண். 2 பெலகாவி கன்டோன்மென்ட், கர்நாடகா, விஜய் சௌக்கில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பிக்கும். இந்த பள்ளி இசைக்குழுக்கள் 2025 ஜனவரி 24-25 தேதிகளில் புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும் தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 6.0 இன் கிராண்ட் பைனலில் போட்டியிடும் 16 அணிகளில் அடங்கும். இது பிஎம் ஶ்ரீ பள்ளிகளின் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்குவதற்கும், அவர்களை நன்கு வளர்ந்த ஆளுமைகளாக வளர்ப்பதற்கும் ஒரு படியாகும். மத்திய நிதியுதவி திட்டத்தின் – சமக்ரா ஷிக்ஷா – புதுமை கூறுகளின் கீழ், மாநில அளவில் இசைக்குழு போட்டியை ஏற்பாடு செய்வதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும், மேலும் கல்வித் துறையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இத்திட்டம் தேசபக்தி மற்றும் தேசப்பெருமை உணர்வை ஊட்டுவது மட்டுமின்றி மாணவர்களின் இசைத்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களிடையே ஒழுக்கத்தையும் வளர்க்கும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் உணர்வை புத்துயிர் பெறச் செய்வதையும், முழுமையான கல்வியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read More »

தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக 600-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

2025 ஜனவரி 26, அன்று புதுதில்லி, கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காண 600-க்கும் அதிகமான ஊராட்சி மன்றத் (பஞ்சாயத்து) தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைத்துள்ளது. இந்த சிறப்பு விருந்தினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் முதன்மைத் திட்டங்களின் கீழ் சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டம், இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), பிரதமரின் இலவச …

Read More »

2025 குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு

2025 குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ‘மக்கள் பங்கேற்பை’ அதிகரிக்கும் நோக்கத்திற்கு ஏற்ப, 2025 ஜனவரி 26 அன்று புதுதில்லி கடமைப் பாதையில் 76- வது குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  ‘ஸ்வர்னிம் பாரத்’ சிற்பிகளான பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களும், அரசின் …

Read More »

குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை (ஜனவரி 02, 2025 ) தொடங்குகிறது

குடியரசு தின அணிவகுப்பு – 2025, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை  காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஜனவரி 02-ம் தேதி தொடங்குகிறது. கட்டணச்சீட்டு  விவரம் பின்வருமாறு: வ. எண் நிகழ்ச்சி கட்டணச்சீட்டு மதிப்பு அட்டவணை 1. குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025) ரூ.100/- & ரூ.20/- 2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை –காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை. 2. பாசறை திரும்பும் நிகழ்வு (முழு ஒத்திகை 28.01.2025) ரூ.20/- 3. பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025) ரூ.100/- கட்டணச் …

Read More »

‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ -2025 குடியரசு தின அணிவகுப்பின் போது கடமைப்பாதையில் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது

ஆண்டு தோறும் குடியரசு தின கொண்டாட்டத்தின் (ஆர்.டி.சி) ஒரு பகுதியாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள் கடமைப் பாதையில் தங்கள் அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்துகின்றன.  இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் ‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, இது தொடர்பான பல்வேறு அம்சங்களை முடிவு செய்ய ஒரு ஆலோசனை நடைமுறையை பாதுகாப்பு அமைச்சகம்  மேற்கொண்டது. அலங்கார ஊர்திகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஏப்ரல்  மாதம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் …

Read More »